Skip to main content

இலங்கையில் தனிநாடு உருவாகாது: ஓர் உலகளாவிய நோக்கு!

 இலங்கையில் தனிநாடு உருவாகாது: சுவிஸ் கன்டோன் மாதிரியின் அம்சங்களோடு ஓர் உலகளாவிய நோக்கு! 

—ப.வி.ஶ்ரீரங்கன் 

"இந்த நச்சுத்தனமான கலாச்சாரத்திலிருந்து தமிழ்ச் சமூகம் விடுபட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய ஒரு வலுவான அரசியல் பாதையை அமைக்க முடியும். " .....    நீங்கள் வலியுறுத்தும் ” மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய ஒரு வலுவான அரசியல் பாதை” எது என்பதைச் சுருக்கமாகக் கூறமுடியுமா?” —பேராசன் தனம் வெற்றிவேல் ( உதயகுமார் அபிமனசிங்கம்) Thanam Vettivelu

பேராசன் ஐயா தனம் வெற்றிவேல் அவர்களின் கேள்வியோடு நம் பார்வையை முன்வைக்க முனைகிறேன் .

என் பார்வையில் இலங்கையில் தனிநாடு-தமிழீழம் என்பது நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் , அதை விரும்பாமலே போராடிய மக்களின்  புறக் காரணிகளை கருத்திற் கொண்டால் —

பேரினவாத -செளனிச (Chauvinism) மேலாதிக்க அடக்குமுறைகளை மீட்டிப் பார்த்தால் : 

1948 பிரஜாவுரிமைச் சட்டம், 

1956 சிங்களம் மட்டும் சட்டம், 

பல்கலைக்கழக தரப்படுத்தல், 

1977 இனக் கலவரம் ,

1983 கறுப்பு ஜூலை, 

தமிழ்ப்பிரதேச இராணுவ ஆக்கிரமிப்பு, 

இடப்பெயர்வு — இவை இன்னும் மறைந்துவிடவில்லை. 

தனிநாடு -தமிழீழம் என்பது பலருக்கு பாதுகாப்பின் கற்பனை.

இதனால் , முள்ளிவாய்க்கால்வரை தம்மை இழப்புக்குள்ளாக்கிய மக்கள் தம் இழப்புகளுக்கு அர்த்தம் தேடுதல்: பிள்ளைகள், தந்தைகள், கணவர்களை இழந்த குடும்பங்களுக்கு “அவர்கள் போராடியது பொய்” என்று ஏற்றுக்கொள்வது மிகக் கொடிய வலி. அதனால் , அவர்கள் அந்த இலக்கைப் புனிதமாக்குகிறார்கள். இதை மறைத்து நான் பல முறை உரையாடியது உண்மை . ஆனால் , பணப்புலிகளின் இலாப வேட்கையை நாம் இதன்வழி பேசுவதற்கான கேடயமாக இயக்காவாத அரசியலின் அராஐகப்பக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறோம் . 


இங்கே , தலைமைத்துவமும் புலம்பெயர் அரசியலும் குறித்துக் கவனப்படுத்த வேண்டும் : 


புலிகளின் தியாகம், வீரம், தேசியம் என்பது ஒரு தலைமுறையின் அடையாளமாக மாறிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் அது நிதி, பரப்புரை, சமூக அழுத்தமாக தொடர்கிறது.


இலங்கை அரசு உண்மையான தீர்வு நோக்கி இன்னும் ஓரங்குலமும் நகரவில்லை ; தரவில்லை: 


பொறுப்புக்கூறல் இல்லை; சுயாட்சி இல்லை; சம உரிமை இல்லை. அதனால் , தனிநாடுக் கோரிக்கை முழுமையாக இன்னும் அணைக்கப்படவில்லை.


நமது மாற்று அரசியல் பலவீனம்: 


கூட்டாட்சி, சுயாட்சி, சம உரிமை என்று சொல்பவர்களும் பலம் பெறவில்லை. எனவே தமிழீழம் ஒரு எதிர்ப்பு அடையாளமாக நிற்கிறது.


இளவட்டங்களின் சமூக ஊடக உரையாடல்கள் : 


உணர்ச்சி, ஒற்றுமை, எதிர்க்கருத்தைத் தடுத்தல் — இவை நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.


“தமிழீழம்” என்பது ஒரு அரசியல் இலக்கு. அது நிறைவேறவில்லை; இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் , ஒரு இலக்கு தோல்வியடைந்தது என்பது அது “பொய்” என்று அர்த்தமல்ல. எல்லாத் தேசமும் ஒரு கற்பனைச் சமூகம்தான்; மக்கள் நம்பும்போது அது அரசியல் சக்தியாகிறது.


இங்கே எழும் உண்மையான கேள்வி: தமிழ் மக்களின் பாதுகாப்பு, உரிமை, நீதி, சுயாட்சி(சுயநிர்ணய உரிமை )  எப்படி கிடைக்கும்? 


தனிநாடு சாத்தியமா, இல்லையா என்பதை விவாதிக்கலாம். ஆனால், அதை “விளையாட்டு” என்றோ “பொய்” என்றோ நான் இழிவுபடுத்தவில்லை . கொலைகளின் வரலாற்று வலி இலட்சக் கணக்கான மக்களின் அழிவைக் காரணமாக்கிய “தமிழீழம்” எனும் மாயமான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்-கோசம் உரையாடலை அழிக்கும் நிலையில் நம்மைத் தள்ளியதற்கான முழுக்காரணம் புலிகளின் பாசிச அராஜகமாகும் . நாம் உரையாடுவதில் கவனஞ் செலுத்தாதபோது மக்களை இன்னும் இந்த அரசியல் கடுமையாக்கும். அவர்களின் வலியை மதித்து, அரசியல் யதார்த்தத்தைப் பேசுவதே தீர்வுக்கான வழி.


உணர்வுகளை மதிக்கிறேன். தீர்வு பேச்சுவார்த்தை, கூட்டாட்சி, சம உரிமை வழியாகவே இருக்க வேண்டும்


உள்ளீடு —ஒன்று : 


“தமிழீழம்” என்ற கோரிக்கை 1976’ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் (The Vaddukoddai Resolution was adopted on May 14, 1976 )இருந்து , இன்று வரை —ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக— நீடிக்கிறது. இருப்பினும், உலகளாவிய அரசியல், இராணுவ, சட்ட, பொருளாதார மற்றும்,  புவிசார் யதார்த்தங்களை ஆழமாக உற்று நோக்கும்போது ( ஆய்வு செய்யும்போது) இலங்கையில் ஒரு தனித் தமிழீழம் உருவாகும் சாத்தியம் மிக அருகியே காணக் கிடைக்குமென்பது தெளிவாகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் கடந்த 45 வருட ஆழ்ந்த  போராட்ட/ தத்துவ- மார்க்சியக் கல்வியும் , பலதரப்பட்ட  அரசியல் ஆய்வுகள், உலகளாவிய ஆதாரங்களின் அடிப்படையில் இருந்து இந்த முடிவை எடுத்து இக் கட்டுரையை முன்வைக்கிறேன் ; இஃது, ஓர் வகையில் , திரு. தனம் வெற்றிவேல் எனும் பேராசான் அவர்களுக்கான பதிலாகவும் எழுதப்படுகிறது. 


இரண்டு : புரட்சிகர நிலவரமும் இராணுவ யதார்த்தமும் , ஆயுதப் போராட்டத்தின் முடிவும் 


2009’ஆம் ஆண்டு  மே மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இராணுவ ரீதியாக முழுமையாக தோற்கடிக்கப்பட்டனர். இலங்கை அரசு தீவின் முழு நிலப்பரப்பின் மீதும் தனது முழுமையான அரச அதிகாரத்தை (அரச ஜந்திரத்தின் ஊடாக) நிலைநாட்டிக் கட்டுப்பாட்டை நிறுவியுள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டம், வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தனிநபரின் குழுவாத இயல்புடன் சம்பந்தப்பட்டதென்றபோதும் , இத் தனிநபர் அகங்காரம் அம் மானுடனின் வீழ்ச்சியாக மாறுவதற்கு நான்கு இலட்சம் இலங்கை மக்களின் உயிரைப் பறித்து  அவன் உட்பட்ட புலிகளின்( LTTE) தலைமையின் சரணடைவு மரணத்துடன் முடிவுக்கு வந்தது.ஆனால், இது கருணா அம்மானின் பிளவோடு ஏலவே முடிந்த கதைதாம் ! 


இந்த இராணுவ தோல்வி வெறும் ஒரு போர் முடிவு மட்டுமல்ல; அது தனிநாடு கோரிக்கையின் ஆயுதப் பரிமாணத்தை முற்றிலுமாக அழித்தது. புலிகளின் கடற்படை மற்றும்,  வான்படை திறன் செயலிழக்கப்பட்டது, கட்டளையும்  கட்டுப்பாட்டும் நிறைந்த இயக்க/இராணுவ ஜந்திர அமைப்புச் சிதைந்தது. இன்று , ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடிய ஒரு இராணுவ சக்தி தமிழ் அரசியலில் இல்லை.


புவிகோளப் புவிசார் அரசியற் தடைகள்


அகண்ட பாரதம் என்ற எங்கள்  எஜமானர் இந்தியாவின் நிலைப்பாடு


இந்தியா , எப்போதுமே இலங்கையின் பிரிவினையை ஆதரிக்கவில்லை. முன்னாள் இந்திய தூதர் எஸ்.டி. முனியின் ( Professor S.D. Muni )கூற்றுப்படி, “தமிழ்நாட்டிற்கு அருகில் ஒரு தனி இறையாண்மைத் தமிழீழ நாடு உருவாவதை இந்தியாவின் கொள்கை ஒருபோதும் அனுமதிக்கவில்லை”. 1971’இல் வங்காளதேசம் உருவானது போல இலங்கையிலும் தலையிட வேண்டும் என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) மிதவாதத் தலைவர்களின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.


இந்தியாவின் நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. ; என்றும் மாறாது. இந்திய ஆளும் வர்கத்தின் நலன்சார் முடிவு இது.  2024’ இல், இந்தியா “இலங்கையின் இறையாண்மை மற்றும்,  பிராந்திய ஒருமைப்பாட்டின் கட்டமைப்பிற்குள் தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை” ஆதரிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியா தொடர்ந்து 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது, தனிநாடு அல்ல.


சீனாவின் ஆதரவு


சீனா இலங்கையின் இறையாண்மைக்கும் ,  பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும்  தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு அறிக்கைகளில், “இலங்கையின் தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும்,  பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து உறுதியாக ஆதரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நீடித்த மோதலில் சீனாவின் “நிபந்தனையற்ற ஆதரவு” மிக முக்கியமானதாக இருந்தது.


சர்வதேச அங்கீகாரமின்மை


தமிழீழத்தை உலகின் எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை. “தமிழீழத்தின் சுதந்திரம் இலங்கையிலிருந்து எந்த ஒரு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை” என்பது நாம் அறிந்தும் , புரிந்ததுமான வெளிப்படை யதார்த்தமாகும் . ஐரோப்பியக் கூட்டமைப்புப் போன்ற  நாடுகள் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகவே தொடர்ந்து பட்டியலிட்டு வருகின்றன, மேலும் பிரிவினைவாத சின்னங்களை அங்கீகரிக்க மறுக்கின்றன.


மூன்றாவது : சர்வதேச சட்டத்தின் தடை


சர்வதேச சட்டத்தில், தன்னாட்சி உரிமை (self-determination) கொள்கை, ஒரு இறையாண்மை நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் விளக்கப்படக் கூடாது என்பது நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1970’ ஆம் ஆண்டு தீர்மானம் (2625 (XXV)), “இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது, அரசியல் ஒற்றுமையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சிதைக்கும் அல்லது பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அங்கீகரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது” என்று தெளிவாகக் கூறுகிறது.


இலங்கை அரசு, “தன்னாட்சி உரிமை என்பது வெளிநாட்டு ஆதிக்கத்தின் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்தும், இறையாண்மை கொண்ட சுதந்திர நாடுகளுக்கு அல்ல” என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சர்வதேச சட்டத்தில், சிறுபான்மையினர் பொதுவாக “மக்கள்” என்று கருதப்படுவதில்லை. எனவே, தமிழீழத்திற்கு சர்வதேச சட்டப்பூர்வ அடிப்படை இல்லை.


நான்கு : எருக்கலை -ஆமணுக்கு , வடலி மண்ணின் பொருளாதார சாத்தியமின்மை


ஒரு புதிய நாடு உருவாகும்போது, அது தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடு பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது. உள்நாட்டுப் போர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 2-3 சதவீதம் குறைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளன. ஒரு தனி நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு, நிறுவனங்கள் மற்றும் பொருளாதார அடித்தளம் இல்லை.


மேலும், கிளான வகைப் புலியின் பொருளாதாரம் மாபியாப் பொருளாதாரம் ஆகும் , பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் கட்டாய நன்கொடைகள், ஆயுதக் கடத்தல் மற்றும்  போதைப்பொருள் /மனிதக் கடத்தல் ஆகியவற்றைச் சார்ந்திருந்தது. இது ஒரு நிலையான, சட்டபூர்வமான பொருளாதார அடித்தளம் அல்ல.


ஐந்து : புலம்பெயர் சமூகத்தின் வரம்புகள்


புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் , அவர்களின் பரப்புரை முயற்சிகள் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 2024 ‘இல், அமெரிக்க காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, ஆயினும் , அது “மிதமான கட்சி ஆதரவை” மட்டுமே பெற்றது. புலம்பெயர் அமைப்புகள் தங்கள் தாயகத்தில் உள்ள யதார்த்தங்களிலிருந்து விலகி, உணர்ச்சிவசப்பட்ட பரப்புரையில் ஈடுபடுகின்றன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ஆறு : ஒப்பீட்டு ஆய்வுகள்: தோல்வியடைந்த பிரிவினைவாத இயக்கங்கள்


தென்னாசியாவில் பல பிரிவினைவாத இயக்கங்கள் தோல்வியடைந்துள்ளன. பாகிஸ்தானின் கிழக்கு வங்காளம் (இன்றைய வங்காளதேசம்) வெற்றி பெற்றது, ஆனால்,  அது இந்தியாவின் நேரடி இராணுவ தலையீட்டால் சாத்தியமானது. இலங்கையில் அத்தகைய தலையீட்டை இந்தியா மறுத்துவிட்டது. இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டில் தமிழ்ப் பிரிவினைவாத இயக்கம் இந்திய தலைமையால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமும் பலவீனமடைந்து வருகிறது. இந்த ஒப்பீடுகள், வலுவான மத்திய அரசு மற்றும் , சர்வதேச ஆதரவு இல்லாதபோது பிரிவினைவாதம் தோல்வியடைவதைக் காட்டுகின்றன.


ஏழாவது : மாற்று வழி: கூட்டாட்சித் தீர்வு


தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது கூட்டாட்சி தீர்வை நோக்கி நகர்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNC), இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றுமாறு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. ITAK போன்ற கட்சிகள் “ஒரு கூட்டாட்சி மாதிரியின் அடிப்படையில், மீளமுடியாத அதிகாரப் பகிர்வு” தேவை என்று கூறுகின்றன. இந்த அணுகுமுறை, தனிநாடு கோரிக்கையின் நடைமுறை சாத்தியமின்மையை தமிழ் அரசியல் தலைமையே உணர்ந்துள்ளதைக் காட்டுகிறது.


இறுதியா சுவிச்சர்லாந்திலிருந்து ஈழமண்வரையான ஒரு அரசியல் முன்னோட்டம் :


இலங்கையில் ஒரு தனி தமிழீழ நாடு உருவாகும் சாத்தியம் பல காரணிகளால் தடுக்கப்பட்டுள்ளது:


காரணங்கள் :


இராணுவ தோல்வி: 


2009’இல் LTTE முற்றிலுமாக அழிக்கப்பட்டது : 


புவிசார் எதிர்ப்பு:  


இந்தியா, சீனா உட்பட முக்கிய சக்திகள் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கின்றன.


சர்வதேச சட்ட தடை: 


தன்னாட்சி உரிமை பிராந்திய ஒருமைப்பாட்டை மீற முடியாது.


பொருளாதார சாத்தியமின்மை: 


தனி நாட்டிற்குத் தேவையான பொருளாதார அடித்தளம் இல்லை.

சர்வதேச அங்கீகாரமின்மை: 

எந்த நாடும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை.

மாற்று அரசியல்: 

தமிழ் கட்சிகளே இப்போது கூட்டாட்சி தீர்வை நோக்கி நகர்கின்றன.

இந்த யதார்த்தங்களின் அடிப்படையில், இலங்கையில் ஒரு தனி தமிழீழ நாடு உருவாவது என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல; அது தமிழ் மக்களின் நீண்டகால நலன்களுக்கும் பாதகமானது. உண்மையான தீர்வு, ஒரு கூட்டாட்சி அமைப்புக்குள் அர்த்தமுள்ள  சுயநிர்ணயச் சுயாட்சி, சம உரிமை மற்றும் நீதியின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இந்த யதார்த்தக் காரணிகளைக் கருத்திற்கொண்டால் நாம் இலங்கையில் மூவின மக்களும் நிம்மதியாக வாழ சுவிஸ் கன்டோன் மாதிரியின் அம்சங்கள் அடங்கிய தீர்வை நோக்கி இலங்கை அரசு நகரவேண்டும் . 

சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அமைப்பு, பல்வேறு மொழி, மதம் மற்றும் பண்பாட்டு குழுக்கள் ஒரே நாட்டில் அமைதியாக வாழ்வதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்கள்:

பலத்த மாநில சுயாட்சி: ஒவ்வொரு கன்டோனுக்கும் (மாநிலத்திற்கும்) கல்வி, சுகாதாரம், வரி விதிப்பு, உள்ளூர் சட்டங்கள் இயற்றுதல் போன்ற பல விஷயங்களில் கணிசமான அதிகாரங்கள் உள்ளன. மத்திய அரசின் அதிகாரம் குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டுமே.

அதிகாரப் பகிர்வு: மத்திய அரசின் பாராளுமன்றத்தின் மேலவையில் (Council of States) ஒவ்வொரு கன்டோனுக்கும் சமமான பிரதிநிதித்துவம் உள்ளது. இது சிறிய கன்டோன்களின் குரலுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

கூட்டு முடிவெடுத்தல்: முக்கியமான தேசிய முடிவுகள் அனைத்து கன்டோன்களின் ஒப்புதலுடனும், சில சமயங்களில் மக்கள் வாக்கெடுப்பின் மூலமும் எடுக்கப்படுகின்றன.

இலங்கைக்கான பொருத்தமும் சவால்களும் :

இந்த மாதிரியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 2002’ஆம் ஆண்டில், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில், "கூட்டாட்சி தீர்வை" ஆராய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர், இலங்கை அரசு மற்றும் , தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலமுறை சுவிட்சர்லாந்திற்கு சென்று அங்குள்ள கூட்டாட்சி அமைப்பைப் பற்றிப் படித்துள்ளனர் என்றே நான் நம்புகிறேன் . 

ஆனால், இந்த மாதிரியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதில் பல பெரிய சவால்கள் உள்ளன:

இலங்கையில் இரண்டு வரலாற்றுத் தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சினை , சுவிட்சர்லாந்திலோ பல சிறிய இனக் குழுக்கள்தாம் உள்ளன. ஆனால் , இலங்கையில், சிங்களவர் (பெரும்பான்மை) மற்றும்,  தமிழர் (சிறுபான்மை) என்ற இரு பெரிய தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சினை உள்ளது. இது ஒரு வெறும் இனக்குழு பிரச்சினை அல்ல, மாறாக, ஒரு அரசியல் தேசியவாதப் பிரச்சினை.

பெரும்பான்மைச் சிங்கள எதிர்ப்பு: 

சுவிஸ் மாதிரியைப் பற்றி பேசும்போது, "இது நாட்டைப் பிரிக்கும்" என்ற அச்சம் சிங்கள பெரும்பான்மை மக்களிடையே மிகவும் வலுவாக உள்ளது. இலங்கையின் அரசியல் அமைப்பு இங்கிலாந்து மாதிரியை (Westminster) ஒத்தது, அங்கு "வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக்கொள்வார்" (Winner-takes-all) என்ற அடிப்படையில் ஆட்சி அமைகிறது. இதனால் அதிகாரப் பகிர்வு என்பது பெரும்பான்மையினருக்கு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.இப்படி அனைத்தையும் தமக்குள் வைத்திருக்கும்போதுதாம் இலங்கையை மொத்தமாக்க் கொள்ளை அடிக்க முடியும் என்று மகிந்தா குடும்பம் நமக்குத் தமது ஊழலின் மூலம் எடுத்துரைக்கின்றனர் . 

இதை போகட்டும் !

வரலாற்று முயற்சிகளின் தோல்வி: 

1987’ ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13’வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது மாகாண சபைகள் மூலம் சில அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தது. ஆனால், இது "கூட்டாட்சி" அல்ல, "மறைமுக கூட்டாட்சி" (Federalism in disguise) என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், காவல்துறை அதிகாரங்கள் போன்ற முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருந்ததால், தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை இது பூர்த்தி செய்யவில்லை.

தற்போதைய அரசியல் சூழல்: 

தற்போது இலங்கை அரசு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி வருகிறது. ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் இது "ஏகிய ராஜ்ய" (ஒற்றை மைய அரசு) மாதிரியாகவே இருக்கும் என்று அஞ்சுகின்றன. மேலும், இது 13’வது திருத்தத்தை விட பலவீனமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாகச் சுவிஸ் கன்டோன் தீர்வை நோக்கினால்: 

சுவிஸ் கன்டோன் மாதிரி ஒரு கவர்ச்சிகரமான தத்துவார்த்த தீர்வாக இருக்கலாம். ஆனால், இலங்கையின் தனித்துவமான வரலாறு, இன அரசியல், மற்றும் , பெரும்பான்மை மக்களின் அரசியல் மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாக, அதை அப்படியே பிரதிபலிப்பது என்பது மிகவும் கடினம். இது ஒரு சிறந்த இலக்கு, ஆனால் இலங்கையின் யதார்த்தத்திற்கு ஏற்ப ஒரு தனித்துவமான, உள்நாட்டு தீர்வை உருவாக்குவதே உண்மையான சவால்.

நேரடி ஜனநாயக—உளவியல் :

சுவிஸ் நேரடி ஜனநாயகம் (Direct Democracy) பற்றிய என் ஆர்வம் மிகவும் ஆழமானது . இது உலகின் மிகத் தனித்துவமான அரசியல் அமைப்புகளில் ஒன்று. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சுவிஸ் நேரடி ஜனநாயகத்தின் மையக் கருத்து, மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், முக்கியமான கொள்கை முடிவுகளில் நேரடியாக வாக்களித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதாகும். இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு (Representative Democracy) மாற்றான ஒரு அமைப்பு.

மூன்று நிலைகளில் நேரடி ஜனநாயகம் அங்கு நிலவுகிறது .

சுவிஸ் நேரடி ஜனநாயகத்தின் தனித்துவம், இது மூன்று அரசியல் நிலைகளிலும்  செயற்பாட்டு வடிவமாக இயங்குவது :

மத்திய அரசு (Federal Level / Bund): 

நாடு முழுவதற்கும் பொதுவான விஷயங்கள்.

கன்டோன் (Cantonal Level): 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் (26 கன்டோன்கள்) உரிய தனிப்பட்ட விஷயங்கள்.

உள்ளூர் சமூகம் (Communal Level / Gemeinde): 

நகராட்சி அல்லது , கிராம அளவிலான விஷயங்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் தேர்தலில், ஒரு சுவிஸ் குடிமகன் மத்திய அரசு, தனது கன்டோன் மற்றும் , தனது உள்ளூர் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டியிருக்கும்.

முக்கிய கருவிகள் (Instruments)

சுவிஸ் நேரடி ஜனநாயகத்தின் இயந்திரம் மூன்று முக்கிய கருவிகளால் இயக்கப்படுகிறது:

மக்கள் முன்மொழிவு (Popular Initiative / Volksinitiative):

இது மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு குழு அல்லது தனிநபர் ஒரு புதிய சட்டத்தை முன்மொழியலாம்.

தேவை: 18 மாதங்களுக்குள் 1,00,000 கையெழுத்துகள் சேகரிக்க வேண்டும்.

பயன்: இது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத கருத்துகளையும் மக்கள் முன் கொண்டு வர உதவுகிறது.

விருப்ப வாக்கெடுப்பு (Optional Referendum / Fakultatives Referendum):

இது பாராளுமன்றம் ஏற்கனவே நிறைவேற்றிய ஒரு சட்டத்தை மக்கள் எதிர்த்து ரத்து செய்யும் அதிகாரம். இது ஒரு  வேகத்தடை -"பிரேக்" போன்றது.

தேவை: சட்டம் வெளியிடப்பட்ட 100 நாட்களுக்குள் 50,000 கையெழுத்துகள் சேகரிக்க வேண்டும்.

பயன்: மக்கள் விரும்பாத சட்டங்களைத் தடுக்க உதவுகிறது.

கட்டாய வாக்கெடுப்பு (Obligatory Referendum / Obligatorisches Referendum):

சில விஷயங்களுக்கு கட்டாயமாக மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படும்போது, அது கட்டாயமாக மக்கள் ஒப்புதலுக்கு விடப்பட வேண்டும்.

தேவை: கையெழுத்து தேவையில்லை; பாராளுமன்றம் தானாகவே வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

பயன்: அடிப்படைச் சட்டங்களில் மக்களின் நேரடி ஒப்புதலை உறுதி செய்கிறது.

இரட்டைப் பெரும்பான்மை (Double Majority)

குறிப்பாக மத்திய அரசு அளவில், அரசியலமைப்பு மாற்றங்கள் போன்ற முக்கியமான விஷயங்களில் "இரட்டைப் பெரும்பான்மை" தேவைப்படுகிறது. அதாவது:

மக்கள்தொகை பெரும்பான்மை: நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களில் பெரும்பான்மையோர் ஆதரவு.

கன்டோன்களின் பெரும்பான்மை: குறைந்தபட்சம் 26 கன்டோன்களில் பெரும்பாலானவற்றின் ஆதரவு.

இது சிறிய கன்டோன்களின் குரலுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

கிராமசை  (Landsgemeinde) - நேரடி ஜனநாயகத்தின் உச்சம்

சுவிஸின் சில கன்டோன்களில் (Glarus, Appenzell Innerrhoden) இன்றும் "Landesgemeinde" என்ற முறை நடைமுறையில்தாம்ஙஉள்ளது. இதில், வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் ஒரு திறந்தவெளி மைதானத்தில் கூடி, கையை உயர்த்தி நேரடியாக வாக்களித்து முடிவெடுக்கிறார்கள். இது 600 ஆண்டுகள் பழமையான, மிகவும் "தூய்மையான" நேரடி ஜனநாயக வடிவமாகக் கருதப்படுகிறது.

சுவிஸ் நேரடி ஜனநாயகம் என்பது மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் ஒரு அமைப்பு. இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு "அரை-நேரடி ஜனநாயகம்" (Semi-direct democracy) ஆகும். இதன் மூலம், சராசரி சுவிஸ் குடிமகன் ஆண்டுக்கு 3-4 முறை பல்வேறு தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் மீது வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். இது மக்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதுடன், அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது.

எனவே , இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு சுவிச்சர்லாந்தின் வழிசிந்திப்பதே உண்மையான இலக்கை எட்டும் . 

இறுதியாக ஒன்று: எல்லாத் தமிழர்களும் தமிழீழத்தை நம்பவில்லை. காரணம் : வர்க்கப் பிளவாகும். எனவே , வர்க்கச் சமூதாயத்தில்  வர்க்க அரசியலே அடிப்படை ! தமிழர்களிற் பலர் கூட்டாட்சி, சுயாட்சி, சம உரிமை, அரசியல் தீர்வு என்பதை ஆதரிக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக “தனிநாடு வேண்டாம்” என்று சொன்னால் துரோகி என்று முத்திரை குத்தப்படும் என்பதால் பலர் அமைதியாக இருக்கிறார்கள்—அவ்வளவுதான்!

—ப.வி.ஶ்ரீரங்கன்

25.09.2026

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...