Skip to main content

Posts

Showing posts from March, 2016

தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்

 தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள் :ஈழத் தமிழ் அகதி இரவியின் (தற்)கொலை -சில குறிப்புகள் இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான இனவொடுக்குமுறையின் சாட்சிகள் நாம்! ;உலகெல்லாம் இடம் பெயர்ந்து அகதிகளானோம். ;மேற்குலகத்தில் அகதிகளாகக் குடியேறிய நாம் ,மேற்குலகத்துப் பூர்வீகக் குடிகளுக்குள்ள அனைத்துரிமையுடனும் வாழும் மேற்குலகச் சனநாயகச் சூழலினுள் ,தம்மைப் போல் நாமும் மனிதர்களாகவேனும் வாழ அநுமதித்திருக்கும் இந்த மேற்குலகம் நமக்கு எந்தவிதத்திலும் ஒட்டோ -உறவோ கிடையாது.எனினும்,நம்மைக் காத்துத் தமது குடிகளாக அநுமதித்த தேசங்கள் நமக்கு அந்நியரே! ஆனால்,இந்தியா ? ; தமிழ் நாடு?? நமது தொப்புட்கொடி உறவாமே? ;ஒரே இரத்தமாமே! ; பூர்வீகத் தாயகமாமே? என்ன செய்கிறது நம்மை? அடிமைகளாக -கொத்தடிமைகளாக நமது மக்களைச் சொந்தச் சகோதர இனமே நடாத்துகிறதென்றால் ,அத் தேசத்தின் அரசியல் -சனநாயகச் சட்டவாதத்தின் கோலம்  என்ன? இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான தமிழின அழிப்பிலிருந்து தப்பி ,உயிர்வாழ்வதற்காய்த் தமிழகஞ் சென்ற சுமார் 3 இலட்சம் தமிழ்பேசும்...