கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்! (நிதர்சனம் விதைக்கும் வினை.) "முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்." தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி. தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி. இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா? அது ஈ.பீ.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாளோடு இணைத்துப் பேசுவது போட்டுத் தள்ளுவதற்கான ஒத்திகைகளில் ஒன்றாக இருக்குமென்றே நாம் கருதுகிறோம். புலிகளின் இத்தகைய ஈனத்தனமான கருத்தியல் மற்றும் வன் முறைசார்ந்த நடவடிக்கைகள்,இன்னும் அந்த அமைப்பு ஒரு மக்கள் அமைப்பாக முடியாது, வெறும் பாசிசக் கட்டமைப்பாகவே தன்னை நிறுவிக் கொண்டு,தனது அழிவின் விளிம்பில் ஆப்பிழுத்த குரங்காகச் செயற்பட்டு வருகிறது...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்