Skip to main content

Posts

Showing posts from February, 2013

கணையாழி:கேடயம்,பொன்னாடை-எதற்காக?

Theepachelvan Pratheepan: "புலிக்காய்ச்சலில் பொய்களால் 'புனைவு' செய்து வாழும் அண்ணன் ஒருவருக்கு சமீப நாட்களாக 'தீபச்செல்வன் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.நீங்கள் முதலில் புலிகளை பார்த்து குரைப்பதை நிறுத்திவிட்டு மற்றப் பங்கங்களுக்கும் உங்கள் தலையை திருப்புங்கள்!" ================================================================= தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை. ================================================================ ஒ ரு சமுதாயத்தை ஆணிவேரோடு பிய்த்தெறிந்து, ஓட்ட மொட்டையடித்த புலிகள்,பல இலட்சக் கணக்கான உயிர்களை நாசஞ் செய்து சில குடும்பங்களைக் கோடிஸ்வரர்களாக்கிவிட்டு வன்னியில் சரணடைந்துகொண்ட அரசியலுளெஞ்சிய புலிக்கூட்டமோ மீளவும், மக்களை மொட்டையடிக்கும் தெரிவுகளோடுதாம் அரசியல் செய்கிறது.இலக்கிய வியாபாரி தீபச் செல்வன் அதற்கான சிறு உதாரணமாகும்.இவருக்கு முன் சேரன் என்பது உலகறிந்தது! இஃது மக்கள் விரோதமானது.ஏன்-எதற்காக? இது,குறித்துப் பலருக்குப் புரியும்படி நாம் ஏலவே பல மாதிரிகளாக எழுதிவிட்டோம்! அப...

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்!

யோ சித்துப் பார்க்கிறேன்.எட்டு ஆண்டுகளுக்கு முன் வலைப் பதிவை அண்மித்து அதற்குள் இயங்கியங்கியபோது தமிழ்மணத்தால் அறிமுகமானவர் இந்த டோண்டு இராகவன் அவர்கள்.பெரும்பாலும் தமிழ்ச் சமுதயாமானது படு பிற்போக்கான சமுதாயமாகவிருப்பதும்,அதன் சிந்தனை யோட்டமானது ஆளும் அதிகாரத்துக்கிசைவானதாகவும்,  இருக்கின்றது.இந்தச் சமுதாயமானது தனது முரண்பாடுகளுக்கொப்ப வளர்வுறுதால் அதுள் நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கொப்பவேதாம் மனிதர்களின் உள-அறிவு வளர்ச்சியும் சமூகவுணர்வாகவும்-பண்பாடாகவும் பிரதிபலிக்கும்.எமது சமூக வாழ்நிலையின் குறை நிலைகள் நமக்குள் பிரதிபலிப்பவை. எனவே,ஒரு சக மனிதரைப் புரிந்துகொள்வதற்கு மேலே கூறியவொரு சமூக-உளவிற் பார்வை அவசியமானது.டோண்டு இராகவன் பெரும் பாலும் இந்தச் சமுதயாத்தின் அனைத்துக் குழப்பகரமான முரண்பாடுகளோடும் ஒட்டியுறவாடுபவர்.இதே சமுதாயத்தின் சாக்கடையிற்றாம் நாம் அனைவரும் உருவாகிறோம்.இதுள், பெரிதாகச் சொல்லி , நீட்டி முடக்கத் தேவையில்லை.நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள். டோண்டு அவர்களை,நான் கண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவர் சளைக்காது பல பக்கங்களை நிறைத்து எழுதிக்கொண்டிருந்தார்.என்னோடு ...