Skip to main content

Posts

Showing posts from March, 2012

உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்

"புதிய இணைய மாத சஞ்சிகைக்கு எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறோம்! ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்திற்கும் கருத்தியல் வாதம்,உரையாடல் வெளிக்குமான புதிய கதவினை திறப்போம்! " -by Mahroof Fauzer பௌ சர், உங்களிடம் சில விளக்கங்களைக் கேட்பது அவசியமெனக் கருதுகிறேன். 1: "தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்" என்கிறீர்கள்.இந்தச் செயற்பாடுகள் எதை நோக்கியது?ஏனெனில்,இன்று மொழி,மதம்,பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகள்-பௌதிக இருத்தலை மறுக்கும் ஒடுக்குமுறைகள்அனைத்தையுஞ் செய்தபடி அதற்கும் மேலாக மனிதர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களாகவும்,ஒடுக்குபவர்களாகவுமிருக்கிறார்கள்.இதுள் நீங்கள் எந்த வகைமாதிரியை உணர்கிறீர்கள்? 2: செயற்பாட்டகம் என்பதன் பொதுப்படையான புரிதலென்ன?செயற்பாடு வினையுறும் திசைவழியின் செல் நெறி என்ன-எதைச் சார்ந்து செயற்பாடு விரிகிறது? 3:"தமிழ் மொழிச் சமூகங்கள்" என்பதன் விளக்கமென்ன?சமூகம் என்றால் என்ன-சமுதாயம் என்றால் என்ன?இதுள் மொழிகள்-மதங்கள்,பண்பாடு,பால் வேறுபாடுகள் கடந்து இயங்க முனையும் மனிதர்களின் இடம் என்ன? 4:"ஜனநாயக அடிப்படை"என்கிறீர்கள் நீங்கள...

பொய்யுரைப்பதே புலிகள் என்றாச்சு!

மு ள்ளி வாய்க்கால் நாடகத்துக்குப் பின்னும்,நாம் தமிழ்த் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம். முள்ளி வாய்க்காலில் சரணடைந்து மாண்டுபோன பாசிசப்புலிகளது தலைமையின் தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம்,புலிகளால் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இன்று,வன்னிக்குள் தினமும் பட்டுணியால் செத்து மடிபவர்களுக்கு புலிகளது சரணடைவுச் சாவுத் துரோகக் கைக்கூலிப்படை போராட்ட வரலாறு என்ன தீர்வைக் கொடுத்துள்ளது?மக்களது தியாகத்தை இலங்கைப் பாசிச அரசுக்கேற்பத் தகவமைத்து, இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலில் போட்டுவிட்டு, ஒரு தலைமுறையைச் சீரழித்துச் சென்றுள்ளது தமிழ்ப் பாசிச அரசியல் வரலாறு! மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுத்தி அழிவு யுத்தத்தில் பலிகொடுத்த புலி-இலங்கை அரச பயங்கர வாதத்துக்கும் என்ன வேறுபாட்டைக்...