Skip to main content

Posts

Showing posts from February, 2009

ஸ்பீகல் (Der Spiegel)சஞ்சிகை புலிகள் குறித்துக்கூறியது கொழும்பில்...

ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகையின் ஆருடம் பலித்தது. "கரும்புலித் தாக்குதலைக் கொழும்புக்கு விஸ்த்தரிக்கும் தோல்வியின் விளிம்பில் நிற்கும் புலிகள்,இன்னும் தமது தலைவருக்காக உயிர்ப்பலிகொடுக்கத் தயாராகும் கரும்புலிகள்!"- ஸ்பீகல்(Spiegel) சஞ்சிகை: 20.02.09. ஜேர்மனிய முன்னணிச் சஞ்சிககையான ஸ்பீகலில், எங்கள் தேசத்துப் பிரச்சனைகளைக் குறித்துப் புலம் பெயர் படைப்பாளிகள் கட்டுரை எழுதி,அவர்கள் பிரசுரித்தால் 1000 டி.எம். பணம் சன்மானமாக வழங்கப்படுமென முன்னொரு காலத்தில்(சுமார் பத்தாண்டுகளுக்குமுன்) புலிகள் தமது பிரசுரங்கள் மூலமாகக்கேட்டுக் கொண்டார்கள்.அத்தகையவொரு மிக முக்கியமான சஞ்சிகை ஸ்பீகல். ஜேர்மனியில் பல கோடிப் பிரதிகள் விற்கப்படும் இச் சஞ்சிகை,ஜேர்மனிய அரசியல் வட்டாரத்திலும்,பல்கலைக் கழகமட்டத்திலும் பெரும் தாக்கஞ் செய்யும் சஞ்சிகை.அது,ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தினதும் நடுத்தரவர்க்கப் புத்திஜீவிகளினதும் குரலாகவே ஒலிப்பது.எனினும்,அதன் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்.பெரும்பாலும் அதன் கட்டுரைகளும்,ஆய்வுகளும் மிகவும் தர்க்கம் வாய்ந்தது.இத்தகைய சஞ்சிகையில் இன்றைய நமது போராட்டச் சூழல்கள் குறித்து...

துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு...

எம்மை விடுதலை செய்வீர்! "இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார் அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் நாம் குற்றஞ் சாட்டியுள்ளோம்.அது, உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைவிடத் தேனியின் மக்கள் விரோத அரசியலை நாம் தெளிவாக வரையறுத்தபின்-அது, இன்று பிரசுரித்தவொரு கட்டுரையின் நியாயமான கேள்விகளோடு உடன்படுகிறோம்." நாம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்கிறோம்?நமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டென,நமது மண்ணிலிருந்து நாம் துரத்தியடிக்கப்பட்டுவிட்டோம்?நமது உறவுகள் மரங்களுக்கீழும் வெட்டவெளித் தரைகளிலும் குண்டடிபட்டுக் குற்றுயிரில் கிடக்கிறார்கள்?அப்படியானால் இவையெல்லாம் எவரால் நிகழ்த்தப்படுகிறது?இதைச் செய்பவர்கள் முற்றிலும் மனித விரோதிகளே! வன்னியில் மக்கள்தம் தலைகளில் வீழும் குண்டுகளுக்கு ஆளும் மகிந்த இராஜபக்ஷ அரசுமட்டும் காரணமில்லை!மாறாகத் "தமிழீழவிடுதலை"ப் போராட்டஞ் செய்வதாகக் கதைவிட்டு நம்மை இனவாதிகளாகவும்-இழிச்சவாயர்களாகவும் உலகில் ஆக்கிய, புலித்தலைமையும...

மக்களது இத்துயரைக் குறித்து உலகத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்...

இலங்கையில் அழிவு யுத்தம்:எவர் தரப்பில் நியாயம்? "தீபம் தொலைக் காட்சியில் இரண்டு நபர்கள் அரசியலுரையாடலாகத் தோன்றுகிறார்கள்,அவர்களில் ஒருவர் மிகப்பெரிய நீண்ட மீசையோடும் மற்றவர் முழுவதுஞ் சவரஞ் செய்தவராக முகத்தை வைத்திருக்கிறார்.இவர்களது கதையுள்"இலங்கை அரசு இவ்வளவு இனச் சுத்திகரிப்பைச் செய்துபோட்டது,இதுமாதிரி இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்த கொசவோ தனிநாடானமாதிரி ஈழத்தையும் பிரித்தானியா தலையிட்டுப் பிரிக்க இதுதாம் தருணம்" என்கிறார்கள்.புலிகள் எதை விரும்பினாகளோ அது வன்னியில் நடக்கின்றது.எனினும்,பிரித்தானியா ஈழம் பிரிக்குமெனும் உலக அரசியலிருக்கே இதுதாம் தமிழர்களின் அறிவை அளப்பதற்கான அளவுகோலென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை!" கம்பூச்சியா குறித்த ஊகங்களினதும்,அச்சத்தினதும் நடுவே நடந்தேறும் யுத்தக் கிரிமினல்களின் வழக்குக் கடந்த முப்பாதாண்டுகளுக்கு முன்னான பொல் போர்ட் கம்பனியினது இலட்சக்கணக்கான மனிதப்படுகொலைகள் குறித்து விசாரிக்கிறது.இது, கடந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான கிரிமினல் நடாத்தை.1975 ஏப்பிரலிலிருந்து 1979 ஜனவரி வரைக்குள் "போலிக் கம்யூனிசத்தின்"பிறப்பில் வீ...

இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும்...

இலங்கை:இனங்களுக்கிடையிலான ஐயக்கியமே விடுதலையின் முதற்படி! இன்று 15.02.09,தீபம் தொலைக்காட்சியில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் சொல்லும் உண்மையற்ற அரசியலின் கருத்துக்களுக்கும் மிக அண்மித்த புலிகளது அரசியல் நகர்வுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு.புலியினது மிக மூடத்தனமான அரசியல் எங்ஙனம் உலகில் அரசியல் ரீதியாகப் புலிகளைத் தோல்வியடைய வைத்ததோ அதே கதையோடு மீளவும் சிவாஜிலிங்கம் கதை புனையும்போது,புலிகளது இந்த அரசியற் தோல்வியை முழு ஈழத் தமிழினமும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார்.இஃது, எவ்வளவு கொடுமையானதென்பதை புலிப் பீரங்கிக்கு அங்கீகாரந்தேடுவதிலுள்ள தனது முனைப்பில் தெரிந்தே சிவாஜிலிங்கம் பம்பாமாத்துப் பண்ணுகிறார். இணைத்தலைமை நாடுகள் மற்றும் உலக நாடுகள் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கு இலங்கையை வற்புறுத்த வேண்டுமென்கிறார்.இந்த தற்காலிகம் எதுவரை?இதற்கும் மக்களது நலனுக்கும் என்ன சம்பந்தம்?தற்காலிக யுத்த நிறுத்தம் என்பதன் பொருள் மீளவும் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழு இலங்கையையும் தொடர்ந்து யுத்தத்துக்குள் நிலைப்படுத்துவதாகும்.இது,இன்னும் பலதமிழர்களின் தலையைக் கொய்தெறிய புல...

புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்...

புலன்(ம்)பெயர்ந்த புலிகளால் ஐரோப்பிய மண்ணும் கொலைக்களமாகிறது. "புலிவால்களைச் சுரண்டுவதால் அராஜகம் ஒழிந்துவிடாது,எனவே,புலிகளது அராஜகத்தின்மீதும்,அதிகாரத்தின்மீதும் கேள்விகளை எழுப்புவோம்,அவர்களது "ஈழப்போராட்டத்தில்"இதுவரைத் துரோகி சொல்லிக் கொல்லப்பட்டவர்களைக் குறித்துக் கேள்வியெழுப்வோம்,இலங்கையில் சிங்களச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்நிலைகளைப் புலிகளது கட்டுப்பாட்டில் வாழ்ந்த வன்னிமக்களின் வாழ்நிலையோடு உரைத்துப் பார்ப்போம்.அங்ஙனம் பார்க்குங்கால் சிங்களவர்களுக்கு நாம் அடிமை என்பதன் கருத்து நிலையைத் தமிழ்ச் சமுதாயத்துள் ஆண்ட பரம்பரைக்குள் இனங்காண முடியும்.அது,புலிகளுக்குள்ளும் வேரோடி விழுதெறிந்து கொலைகளாக அரங்கேறியதை உய்துணர வாய்ப்பளிக்கும்." கேடுகெட்ட தமிழ்த் தேசியம்.இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்-அலுக்கோசு-அரைப்பனி-நரகல்!ஒர...

இது,புலியினது இருப்புக்காகச் செய்யப்படும் கொலையே!

முருகதாசன்: சுவிஸ்சர்லாந்து-ஜெனிவாவில் கரும்புலித் தீக்குளிப்பு! "ஒரு தமிழன்-ஒரு சிங்களவன் இருக்கும்வரை எஜமான விசுவாசம் இருக்கும்-யுத்தம் நடக்கும்?தீக் குளிப்பு ஜெனிவாவரை ஓங்கும்,ஊரர் பிள்ளைகள் உயிரோடு பிரபாகரன் அரசியல் ஈழத்தை விடுவிக்கப்போகிறது-நம்புங்கள் நலமடித்த தமிழர்களே!" இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள், தம் முன் விரிந்து கிடக்கும் இந்த யுத்த முனைப்பைக் கண்டு, தம்மைத்தாமே நொந்து சாகிறார்கள்! புலிகள் தம்மைக்காப்பதற்கான இறுதி முயற்சியாக மக்களைப் பலிகொடுப்பதில் தமது இருப்புக்கான அனைத்து வகைப் பிரச்சாரங்களையும் செய்து மக்களது குருதியில் நீந்துகிறார்கள்-ஊரார் குழந்தைகளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்! இதையும் புலம் பெயர் ஊடகங்கள் ஊக்கப்...

அவசரகால நிதியாக ஆயிரம்-இரண்டாயிரம் யூரோ...

வன்னியில் சாகும் மக்களைச் சொல்லிப் பணம் குவிக்கமுனையும் புலம்பெயர் தமிழ் மாபியாக்கள். "ஈழப்போராட்டத்தின் கறைபடிந்த வரலாறு குருதியினால் எழுதப்பட்டதாகினும் அஃது ஒரு சில தமிழ்க் குடும்பங்களைச் செல்வந்தர்களாக்கியதில் இலட்சக்கணக்கான மக்களின் தலைகளைக் கொய்தெறிந்துள்ளதுதாம்.என்றபோதும், சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களுக்கான அழிவைத் திட்டமிட்டுச் செய்ததன் பலாபலனே இஃதென்பதில் எனக்குச் சந்தேகங் கிடையாது." இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது-இயக்கத்தினது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத...

நாம் எல்லோரும் இலங்கையர்...

இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது? இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் விய+கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது. இலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும...