அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி-ரீ.பீ.சீ.வானொலி... (சிறு இடைமறிப்பு.) இன்றைய இலங்கை- புலிகள் யுத்தம் குறித்து நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.யுத்தங்கள் எப்போதும் மக்களைக் காவு கொள்வதுமட்டுமல்ல,மக்களின் அடிப்படை வசதிகளைக் கொண்ட குடிசார் கட்டமைப்புகளைச் சிதறடிப்பதாகும்.அத்தகைய வன் கொடுமை அரச பயங்கர வாதத்தை கடந்த சில கிழமைகளாக இஸ்ரேலியச் சியோனிச அரசு லெபனான் குடிமக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டதை நாம் அறிவோம்.இது குறித்துச் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பே அறிக்கைவிட்டுக் கண்டித்தது. *மக்கள் வாழ்விடங்களை *நுகர்வு அங்காடிகளை *பாடசாலைகளை *வைத்தியசாலைகளை *மருந்தகங்களை *பாலங்களை *போக்குவரத்து வீதிகளை *நெடுஞ்சாலைகளை *நீர்த்தேக்கங்களை *குடிநீர் விநியோக் கட்டமைவுகளை இப்படிப் பற்பல குடிசார் அடிப்படைக் கட்டுமானங்களை இஸ்ரேலிய அரசு லெபனானில் குண்டுபோட்டழித்தது. இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியில் இலங்கையரசானது- வெளிநாடுகளின் வழிகாட்டலில்- இஸ்ரேலை உதாரணமாக்கித் தமிழ்பேசும் மக்களின் குடியிருப்புகள்மீது குண்டெறிந்து, அந்த மக்களை அகதிகளாக்கி வருவதை நாம் ஊடகங்களுடாகவும்,தொலைபேசிய+டாகவும் அறிகிற...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்