Showing posts with label இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும். Show all posts
Showing posts with label இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும். Show all posts

Monday, March 25, 2013

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வானேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே!

சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு?

அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்டத்தைப் பரவலான புரிதற்கேற்ப நகர்த்துவதில் பலவிதமான சிக்கலெழுவதும்,எமது புரிதற்குள் கட்டுப்படாததுமான கோரிக்கைகள் உண்மையில் விரித்து வைத்திருக்கும் சொல்லாடல்களாகச் சுருங்கிவிடும் அபத்தத்தைக் குறித்து நாம் எத்தகைய புரிதலில் முன்னகரும் அரசியலைச் செழுமைப் படுத்துகிறோம்?



இங்கிருந்துதாம்  ஐ.நா.மனிதவுரிமைக்கான தெரிவுகளில் அமெரிக்காவின் இலக்கைக் [  UN Resolution on Sri Lanka ]குறித்துவைத்து ,இலங்கையின் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த போக்குகளைக் குறித்துப் பேசமுடியும்.

இதே கருத்தில் துல்லியமாகவும்  எவ்வளவு, சக்தி யூக்கத் தோழமை உறவுகளை தீர்மானிக்க  முனைவதிலும்,இடம் பெயர்ந்தும்-இருப்பிழந்தும் அலைவதன் தொடரில் தமிழ்பேசும் மக்களது தலைவிதியைக் குறித்துச் சிந்திக்கும்போது எமது சிந்தனைக்கு மேலாகவெழும் "சனநாயகம் மற்றும் அதுசார்ந்த மனிதவிடுதலைக்கான தெரிவுகள், பழைய கிரேக்கம்  மற்றும் அன்றைய நீதி பரிபாலனத்துக்கான அரசியல் அறநெறியாண்மையும் அதைத்தாண்டியதும் மற்றும்  கி.மு. 7 ஆம் நூற்றண்டுடிலிருந்த  டராக்கோனிய முறைசார் அறவியலானது [Draco  was the first legislator of Athens in Ancient Greece.  ] கி.பி. 4 ஆம் நூற்றாண்டு க்கான சீன எண்ணப் பாடுகள் வரை ஒரு கெட்டிப் படுத்தப்பட்ட மேலாண்மை வர்க்கத்தின் மனவாசைகள்-கற்பனைகள் "புரட்சிக்கார ஏசுவையும் " நானூறாண்டுகளில் மறந்ததுபோய்விட்டதென்பதில் உலக தர்மத்தைத் தாண்டிச் சீனத்துடன் புதிய மாற்றுக்களைக் கொணரப்போகுதென்பதை  இன்றைய இலங்கைச்  சமுதாயம் கணிக்கிலெடுத்திருக்குமோ தெரியாது!

பொதுவாக நிலம்-புலம் , அதுசார்ந்த மக்களது  சக்தி மற்றும் ஆதிக்கம்  குறித்த பலப்பரீட்சையுள் சமன் செய்வது சாதாரணமானது அல்ல. சக்திவாய்ந்த மேற்குலக  அரசாட்சி நிலவும் சர்வதே ஒழுங்காண்மைக்குத் தோதான நேட்டா அணிச் சேர்கையானது வலிந்து சீனாவையும்-இருசியாவையும் ஒரு இலக்கு நோக்கிய அணிக்குள் வன்முறைசார்ந்து கூட்டொத்துழைப்புக்கெனவும் கனி வளங்களைத் திருடிக் கொள்வதின் தொடரில், இராணுவத் தந்திரத்துள் இருசிய-சீன நிலைப்பாடுகள்   வல்லமைக்கு நிகரானதே!




தமிழகத்து மாணவர்களை இந்தவிடத்தில் பொருத்தும்போது 1960 களில் யேர்மனியில் எழுந்த மாணவர்களது போராட்டத்தில் ஒரு ரூடி டுச்கே[Alfred Willi Rudi Dutschke was the most prominent spokesperson of the German student movement of the 1960s  ]  இன்றுவரை  மூன்றாம் உலகத்துள் வெற்றிடமாகவே இருக்கிறது.

இந்த நிலைமைக்கேற்ப  ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானமென்பதை இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையின் விளைவாக வகுப்பெடுப்பதென்பது கயமைத்தனமாகவே பார்ப்பதாகவேண்டும்.அமெரிக்க- ஐரோப்பிய மண்டல நலன்கள் கூட்டிணைவுகளுக்குள் பேசப்படும் சன நாயகமானது கங்கேரியில் பல மில்லியன்  சிந்தி-ரோமா மக்களைத் துவசம் செய்யும்போது விக்டர் ஓர்பானை [Viktor Orbán, Prime Minister of Hungary  ]ரோம் போப்பிலிருந்து யேர்மனியப் பிரதமர்வரை முத்தமிட்டு வரவேற்பதில் எந்தச் சமத்துவத்தைக் காணமுடிகிறது?

ஆக,மொழிவுகளைத் தாண்டிச் சமத்துவம் ,சகோதரத்துவம், ஒருமைப்பாடுகளைப் பிரஞ்சியப் புரட்சியின் அறுவடைக்குள் வைத்து, நம்மைத் தரிசிக்க அறை கூவலிட்டாலும் நமது மண்ணுக்கெனச்  சில சிறப்பியல்புகள் உண்டு.அதைக் கண்டடைந்தால் இந்த ஐ.நா.வொரு செல்லாக் காசு!.

-ப.வி.ஶ்ரீரங்கன்
25.03.2013

Sunday, May 06, 2012

ஒன்றுபடும் இந்திய நலன்சார் அரசியல் தரகர்கள்:

இந்த நூற்றாண்டானது தமிழ்பேசும் மக்களது உரிமைகளைப் பகிரங்கமாகவே காட்டிக்கொடுக்கும் நூற்றாண்டாகும்.இதுவரை ஆயுதப் போராட்டத்தின்வழி தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்த இந்தியா,இப்போது நேரடியாகவே தனது அநுதாபிகளைக் களத்தில் இறக்கி இந்திய அரசியல் நலன்களைத் தமிழ்பேசுபவர்களது நலனாகக் காட்டுகிறது.

புலிகளுக்குள் இருந்த இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும்,முகவர்களும் பகிரங்கமாகவே இந்தியப் பிராந்திய வியூகத்தின் நிகழ்ச்சி நிரலைப் பேசுகிறார்கள்.அவர்களில் கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்றோர் மிக ஆபத்தாகவே தமிழ்பேசும் மக்களது நலனைப் பற்றிய உரையாடல்வழி இந்திய அரசியலை தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கின்றனர்.

இவர்களும்,இந்தியக் கைபாவைகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வரதராஜப் பெருமாள்,புஷ்பராஜா குடும்பத்தவரோடு கை கோர்ப்பதில் புதிய வகை மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள்.

கடந்த காலத்தில் எதிரும் புதிருமாகக் காட்டிக்கொண்டவர்கள் இவர்கள்.ஆனால்,இந்திய சாணாக்கியமானதுகடந்தகாலத்துள் தனது முகவர்களை எங்ஙனம் அனைத்து அமைப்புக்குள்ளும் பிரித்துப் பிரித்து உள் தள்ளியிருப்பதென்பதற்கு இவர்களே சாட்சி.

இவர்கள், அனைவருமே இந்திய முகவர்களாக இருந்துகொண்டு மக்களைப் பல தளங்களில் மொட்டையடித்திருக்கின்றனர்.





புஷ்பாராணியின் போராட்ட அநுபவ நூல் வெளிவருகிதாம்("ஈழப் போராட்டம்,தமிழர் உரிமைப் போராட்டமெல்லாம் இவர்களது குத்தகையென்பதையும் புலிகள் ஏற்றிருப்பது வரவேற்கத் தக்கதே.இதற்குப் புலிவால்களது கள்ள மௌனமே சாட்சி இந்தப் புலம்பெயர் தளத்தில்!).

அதற்குப் புலிப் பிரமுகக் கவிஞர் கருணாகரன் நீண்ட முன்னுரை வழங்கியுள்ளார்.திடீரென இந்த எதிரும்-புதிரும் சந்தித்துக் கொள்ளவில்லை.அல்லது, இது தற்செயல் நிகழ்வுமில்லை.

இவர்கள் அனைவரும் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தமிழ்அரசியல் முகவர்கள்.இவர்களே நமது மக்களை இன்றுவரை ஏமாற்றித் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் இந்திய முகவர்களது அரசியல் நாடகமே இப்போது "விடுதலை,சுதந்திரம்,தமிழீழம்,புரட்சி" என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இலக்கியம்-போராட்ட வரலாறு"என்று தொகுப்புகளிட்டுத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறது.புஷபராஜாவின் விருப்பு மெல்ல நிறைவேறி வருவதால் அவரது ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்.

 "ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ - புஷ்பராஜா.


ப.வி.ஸ்ரீரங்கன்.
06.05.2012

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...