Skip to main content

Posts

Showing posts from December, 2009

ஊடக தர்மம்

சேதுவுக்கு ஒரு முகம்-"செய்தியாளன்".   -சேது ரூபன்: சில கருத்துகள்   சே து ரூபன் கேட்கின்றார் "ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?" என.   இதை யாரிடம் கேட்கின்றார்?   பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!   நன்று.   இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே"செய்தியாளன்"என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை"தமிழீழத்தின்"பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே"செய்தியாளன்"என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!   சேது ரூபன் என்ற "செய்தியாளன்"புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்"நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற...

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல். இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன். தேசம் நெட்தான் வசதியானால் ,அங்கே மேலும் தொடர்வோம். ஸ்ரீரங்கன் 29.12.09 http://thesamnet.co.uk/?p=18429 சேதுரூபன் on December 29, 2009 12:23 pm ப.வி.சிறீரங்கன் ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு? சேதுவிடம் ஒரு ...

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?

இ ஃது, தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில் , புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்"துரோகியாக"பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!   புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது "வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக"த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!   எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.   நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.       >>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந...

அர்த்தங்காண்,வெற்றி உனக்கே!

நீதி என்பது உண்மைகொள்ளலே. ஆ ன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய எம் மக்கள்தம் அர்ப்பணிப்பு இலட்சம்.எங்கெல்லாம் இன்பமென அலைகிறதோ இந்த மனம், அங்கெல்லாம் இன்பமெனும் அற்பச் சுழற்சியில் அவதிகளைக் கட்டிவைத்து, ஆன்மாவை அழிப்பதுதானே உலகத்தின் நியதி?இது,எமக்கு நீதியாக! இந்த நியதிகளின் பின்னே அலைந்தோடுகிறேன்,அற்பமான எனது உணர்வுகளை கடைந்தேற்ற முடியாத எனக்கு, அன்றைய வாழ்வுக்கு அர்த்தமொண்றுண்டென அப்பப்ப என்னைத் துரத்தும் இந்த மக்கள் குழாம், எல்லாம் செத்து,சிதைந்து மக்கிப்போகும் எலும்புகளோடு உலகெமல்லாம் வரலாற்றைச் சொல்லும் எச்சங்களாகின. என்ன சொல்வேன்,எப்படி ஏற்பேன்?எனக்கென்றொரு பணியொன்றுண்டானால் எல்லாவற்றையுமே சகஜமாகப் பார்க்கும் மானிடர்தம் வாழ்வில் வதைகளகற்றிய வழிகளைச் சொன்னார், பழிகளைக்கண்டு வாழ்வுக்கு என்னவொரு தேவையென உயிர்கொண்டலையும் என்னையே கேள்விக்குட்படுத்தும் எனது நிலையைச் சொல்வேன்.பொழுது புலர்ந்து விடியலை அண்மித...

அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம்.

புலிக்குப் பின்னான சூழலில்:மே.18 இயக்கமும்,அதன் கடந்தகால அரசியல் திசைவழியும்.     -சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.     இ லங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் இனம்சார்ந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளாலும், சிறுபான்மை இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்.     இவ்வொடுக்குமுறைகள் மனித நடாத்தையின் அனைத்துத் தளத்திலுமாக(நிலம்-பண்பாடு,மொழி,இன அடையாளம்,சாதிய,பெண் அடையாளம்,பிரதேசம்,ஆன்மீகம்,அறிவு-கல்வி,வரலாற்றுப் பெருமிதம்,உயிரியல்மரபு என...) நடந்தேறியது-நடந்தேறுகிறது!     இதன் பாதகமான பக்கத்தின் விளைவாகப் பல நிகழ்ந்தேறினெ: >>இனம்சார் விடுதலை,தனித்தேசம்,புரட்சிகர ஐக்கிய இலங்கை,தொழிலாளர் வர்க்க விடுதலை இத்யாதி >இதைச் செய்பவர்கள் யார்?, அவர்களது கடந்தகாலத்தின் போராட்டப் பங்கு என்ன? இரகுமான் ஜான் என்பது ஒரு பொது அடையாளம் புரட்சிவாதியாக அக்கேள...

மக்களிடம் உண்மைகளை இடித்துரைப்பதே அவசியம்

இலங்கையில் நேர்வழி "புரட்சி" அமைப்பும், அதன் இனியொருவுக்கான பேட்டி அரசியலும்.     சிறு குறிப்பு.     இ லங்கையில் திடீரெனக் கட்சிகள்-அமைப்புகள்,ஆயுதக்குழுக்கள்-மார்க்சியப் புரட்சி அமைகளெனப் புலிகள் அழிவுக்குப் பின்னால் அதிவேகமாக உருவாகின்றன.இத்தகைய அமைப்புகள் உடனடியாக இனியொரு இணையத்தளத்துக்குப் பேட்டிகள்-செய்திகளும் வழங்கிவிடுவதாகவும் இனியொரு இணையம் தெரிவிக்கின்றது.இன்றைய சூழலில் இலங்கையில் நிலவும் அந்நியச் சக்திகளது ஆதிக்க நலன் நோக்கிய அரசியலானதும், தமிழ் அரசியல் கட்சிகள் முதல் பரவலான இனங்கள்சார் கட்சிகள்-குழுக்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சக்தியோடு உறவாடி அச் சக்திக்கு விசுவாசமாக இலங்கையில் அரசியல் செய்வதில் மக்களைக் கொல்ல முனைகின்றன.   இலங்கையின் அரச வரலாற்றில் இவை புதிதானதில்லை!   எனினும்,கொடும் இனவாத அரசியல்-இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுத்து, அழிவுற்ற மக்களை மேலும் மொட்டையடிக்கும் அரசியல் சதி சகிக்க முடியாதது.இதைக் குறித்து கவலைப்படுவதுமட்டும் போதுமா?     இதைக் குறித்து அம்பலப்படுத்தி, எச்சரிக்கை செய்வதும் அவசியமில்லையா?     பிரபாகரன் அழிந்தபின்பும் புலம் பெயர் புலிகள் ம...