சேதுவுக்கு ஒரு முகம்-"செய்தியாளன்". -சேது ரூபன்: சில கருத்துகள் சே து ரூபன் கேட்கின்றார் "ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?" என. இதை யாரிடம் கேட்கின்றார்? பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்! நன்று. இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே"செய்தியாளன்"என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை"தமிழீழத்தின்"பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே"செய்தியாளன்"என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது! சேது ரூபன் என்ற "செய்தியாளன்"புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்"நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்