Skip to main content

Posts

Showing posts from May, 2006

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

அறுபடும் சிரசுகளும்...

அறுபடும் சிரசுகளும், அல்லைப்பிட்டிகளும்! வறுமைப்பட்ட குடிகள் விடிய மறுக்கும் தேசம் கொடிய சுனாமி காவுகொண்ட மழலையுடல்கள் மக்காத மண்! நெடிய போரில் குஞ்சுகளின் குரல்வளைகள் அறுபட வலிய பொழுதில் வந்துபோகும் சூரியன் இந்நிலையிலும், ஒப்புக்கு வாழ்ந்த வெற்றுடல்களையும் ஒருநேரக் கஞ்சிக்கு உழைக்க வக்கற்ற உப்பு மண்ணில் உயிரோடு புதைக்கும் ஒரு கூட்டம்! சின்னவிழியெறிந்து சித்திரையில் மண்ணள்ளி வந்த சோழகத்தைச் சற்றே பயந்தொதுங்கிப் பார்த்து மகிழ்ந்திட்ட பாலகரும் குருதி சிந்தப் பாதகர்கள் பாடைகட்டி போர்தொடுத்தார் அப்பாவிகள்மீது! எத்தனையோ இரவுகளில் நித்திரையை வெறுத்தொதுக்கி வழிமேல் விழிதுரத்தி விறைத்த மனத்திரையில் விடியலுக்காய் மூச்செறிந்த முதுமையும் குதறப்பட்டது! குற்றுயிரும் குறையுடலுமாய் அறுத்துப் போட்ட வெற்றுத் தேச மனிதர்களுக்கு உப்பு மண்ணும் உரித்தாகவில்லை. "வாளையுருவு, வாழும் மனிதர்கள்தம் தலையைக் கொய்" என்பதல்ல இறப்பவர் அரசியல்-கனவு! ஒரு குவளை சோறும் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஓய்வுகுச் சிறு குடிசையும் உழைப்பதற்குக் கடலும்,கைத் தொழிலும் இதைமறுத்து எவர் கேட்டார் எதை? அல்லைப்பிட்டியென்ன புளியங்கூடலெ...

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" பாடியவனின் வாரீசுகளுக்குச் சில கருத்துக்கள்! இன்று மய+ரனின் கட்டுரையை வாசித்தபோது,இஸ்லாமியர்கள் விவாதத்தில் ஒருகட்டத்துக்குமேல் "திருக் குறானை"த் தாண்டிச் செல்லப் பிரியமற்றவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.இது சகலநாட்டு இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதே!இன்றைய உலக நடப்பில் இஸ்லாத்தின் வழிக் கருத்தியல் மனதானது வெறும் நம்பிக்கைகளாலேயே கட்டித் தகவமைக்கப்பட்டது.கிறிஸ்த்துவத்தைப் போன்றதொரு யுத்தம்-காணிக்கை,அன்பு-அரவணைப்பு என்ற கோதாக்களிலிருந்தும் இஸ்லாம் முழுக்கமுழுக்கக் கருத்தியற்றளத்தில் பதியம் போட்ட கருத்துக்களாலும் அதன் தலைசிறந்த"மனோவியல் தாக்க"திருக் குறானாலும் இஸ்லாம் தனக்கான அரசியல் உடல்களை இறுகப் பற்றியுள்ளது!ஒருவகையில் நாம் நம்ப மறுக்கும் கசப்பானவுண்மை என்னவென்றால்"இஸ்லாமென்பது வாழ்கையைத் தயாரிப்பது"-வாழ்வை,மனித்தன்மைக்கொப்ப அதன் அடிப்படைப் பலவீனத்தைப் புரிந்த அந்த வாழ்வைத் தீர்மானிக்கும் பெரும் கருத்தியலை மிக நேர்த்தியாக மனித மனங்களில் பதியம் போட்டுள்ளது. குறானிடமிருந்து பெறப்படும் ...

"வள்ளுவன்"படும்பாடோ...

"வள்ளுவன்"படும்பாடோ பெரும்பாடாய்ப் போயிற்று! சி ல நேரங்களில் நமது கல்வியாளர்கள் "உண்மையில் படிப்பாளிகள்தானா?(கவனியுங்கள்:படிப்பாளிகள்தானா என்கிறோம்)"என வினாவத் தோன்றும்.ஒரு மொழியில் இலக்கணப் பிழையை,எழுதுத்துப் பிழைகளை நாம் இலகுவாகச் செய்து விடுகிறோம்.அதற்கான காரணம் மொழிப் பயிற்சியின்மையும்,எழுதியதை மீள்நோக்கத்தக்க "ஆசிரியர்"(எடிட்டர்)இன்மையுமொரு காரணம்.தமிழில்தாம் அதிகமாகப் பெரும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கு நிலவுகிறது!மொழியில் வாக்கிய-இலக்கண-எழுத்துப் பிழைகள் விடுவதைப் பெரியோர்(தமிழறிஞர்கள்)மன்னிக்கின்றார்கள்.ஆனால் "பொருளில் குற்றமிட்டால்"நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம்,குற்றமே!"இதை நக்கீரர் சொல்வதாகவேறு நாம் அறிகிறோம்!தமிழர்கள் எவ்வளவு உன்னதமாகத் தமது மொழிக்கு முதன்மை கொடுத்தார்கள்! இப்போது?... "அந்த ஜங்ஷனில இருந்து,லெப்ஃடில திரும்பி அடுத்தவர்ற குறோசிங்கில ஸ்டிறைற்றா போனாக்கா சில்க்பாலஸ் வருமுங்க" "வாங்க மேடம்-சார்,என்ன ஃபீல் பண்ணிகிட்டிருங்கீங்க?இன்னைக்கு என்ன சாங் பாடப் போறீங்க?" "சின்னமணிக்குயிலே!" ...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -குறள்423:அறிவுடமை. எனக்குச் சில நேரத்தில் தோன்றுமுணர்வோ மிக அலாதியானது! தமிழருக்குப் புத்தி சொல்ல வெளிக்கிட்ட வள்ளுவனைப்பிடித்து நாலுக்காறு போட்டாலென்னவென்று அடிக்கடி தோன்றுகிறது.இருந்திருந்து பிடரியிலுறைந்த கறுப்புப் பல பொழுதுகளில் என்னைக் கொல்வதும்,அதை நான் களைவதுமாகக் காலஞ் செல்வதுண்டு.என்றபோதும் எமது சமூகத்துக்கு-இளந் தலைமுறைக்கு படிப்பறிவின்மீதான கண்ணோட்டம் தற்காலக் கருத்துநிலையால் அறிவியல் மனத்துவாரத்துள் கடுகளவும் உரசிக்கொள்வதாவில்லை!-இது கவலையான கண்ணீருக்குச் சொந்தமாகிறது. வள்ளுவன் சொன்னானென்று எதையோ புரியும்( அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள். "எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு க...

கொலைகளின் பின்னே...

கொலைகளின் பின்னே... இன்னொரு படுகொலைக் களத்தை இந்த இலங்கையரசு செய்யத் துணியுமென்பதை நாம் அறிந்தேயிருந்தோம்.அதைத் திரிகோணமலையிலும்,யாழ்ப்பாணத்திலும் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்களப் பாசிசம்.தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?இத்தகைய கொலைகளின் பின்னே அடையவிருக்கும் இலக்கென்ன?இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கையின் நோக்கு?அல்லது தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்? கடந்த-தற்கால இலங்கையரசுகளின் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை"barbarous"என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!இது காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக...

கலைஞர் கருணாநிதி அவர்களின் கணக்கு!

கலைஞர் கருணாநிதி அவர்களின் கணக்கு! "சொன்னதைச் செய்த செயலூக்கத் தமிழ் முதலமைச்சர்." எனக்குச் சரியாக ஞாபகமிருக்கு,அதுவொரு மழைக்கால மார்கழி மாதம். தோட்டம் துரவெல்லாம் பயிரிடப்பட்டு,அவைகள் "அல்லி"குத்திக் குருத்தெறிந்திருந்தன. வருடமோ1968. எங்கள் வீட்டிலொரு கதைப் புத்தகத்தை அண்ணன் தலைமாட்டில் வைத்து அடிக்கடி படிப்பான்.பின் தலையணைக்கடியில் திணித்து வைத்தபடி "தானும்" கதை எழுதிப்பார்ப்பான். அந்த "குறிப்புப் புத்தகத்தில்"-முன் அட்டையில் "முத்தமிழ் வித்தகர்"அறிஞர் அண்ணா என்றும்,பின்னட்டையில் கலைஞர் மு.கருணாநிதி என்றும் எழுதி வைத்திருப்பான்.அன்றிந்தத் தலைவர்களே எமது சிந்தனைகளுக்குள் உலாவந்த பெருந் தலைவர்கள்.இளைஞர்களுக்குக் கதையெழுதுவதற்கு "அறிஞர்" அண்ணாவின், "கலைஞர்"கருணாநிதி அவர்களின் தமிழ் அசலாக ஊக்கங் கொடுத்திருக்கவேணும்.இல்லையேல் கதையெழுதும் முயற்சியை அண்ணை எடுத்திருக்க மாட்டான்.பின்னாளில் இவன் எந்தக் கதையையும் எழுதும்படி முயற்சிக்கவுமில்லை.இவனது வாசிப்புப் பின்பு "பேய்கள்"பற்றிய கதைகளாக இருந்திருக்கிறது. அது,1974...

"மாவீரர்"தயாரித்தல்!

ஈழப்போருக்கு "மாவீரர்"தயாரித்தல்! கா தற் தியானிப்புத் தேவையில்லை கள்ள விழிப்பார்வையும் கடிதவரைவும் கண்விழித்திருப்புந் தேவையில்லை. மனதுக்குள் கும்மியடிக்கும் விமானமொன்று குடற் சுவரில் முட்டிமோதிப் பறக்கும் அம்மாவை வெறுத்தொதுக்கும் அப்பனை வெட்டிப் புதைக்கும் "எந்தவுணர்வுக்கும்" அவசியமில்லை! அவனுக்காய்-அவளுக்காய் "காயும்"காலங்கள் வெட்டெனச் சாய்ந்து மேலெழும் தலைக் கோலமும் தேவையில்லை! மேனிமுகரும் ஆசையோ இல்லைப் பட்டகர்த்தி பாய்விரிக்கும் அவசரமும் பள்ளமும் புட்டியுமாகப் படாதபாடாய்ப் படுத்திய முத்தக் கனவுக்கும் முயற்சி தேவையில்லை பக்குவமாய்க் களிப்பதற்கு பால் பழம் புசிப்பதற்கு மாலை வரத் தேவையில்லை. மாசம் சுமப்பதற்கு மசக்கையுணர்வதற்கு மாங்காய் கடித்திடுவதற்கு சாம்பல் உருசித்திடுவதற்கு சிரமப்படத் தோன்றாது! யோனி கிழிந்திடவோ குருதி கொட்டிடவோ முக்கி மலமிருந்து "ஈன்று சாகும்" பிரசவப் பொழுதை "சுகப் பிரசவம்"என அஞ்சல் செய்யும் கணவனுந் தேவையில்லை. தொட்டிலிடவோ தோளில் சுமந்திடவோ தாலாட்டுப் பாடிடவோ தாயாகித் தந்தையாகி மோந்திடவோ கால்பிடித்து மூக்கிழுத்து முழ...

ஈழத்தாய்

ஈழத்தாய் அம்மணம்! புறத்தே வீசியடிக்கும் சோழகம் பெயரளவிலான கூதல் மதியம் மடிந்து மௌனிக்கும் சூரியனுக்குக் கீழே நெருப்பெறிந்து இதயத்தைப் பற்றவைக்கும் ஈழச் சவாரி! கர்ப்பத்தில் கனவுதரித்திருக்க இச்சைப் பாலைத் தர மறுத்தவள் கெந்தகப் பொதிக்கு இரையாக்கி விடுதலை கொடுத்தாள் மறுப்பதற்கும்,தடுப்பதற்கும் மனிதராய் இருந்தபோது முடிந்தது சுமையைக் காவும் ஒட்டகமாய் மாறிய மண்டையுள் இதற்கெல்லாம் பதிவறை ஒதுக்கப்படவில்லை! இருப்பது,நடப்பது உண்பது,உறங்குவது உயிர் நாற்றமடிக்கும் உடற்கந்தைக்கல்ல மறவன் மன்னன்தம் மனக்கதவின் ஒற்றைத் துவாரத்துள் மெல்லப் புகுந்திடுவதற்குள் கட்டிய குண்டின் அதிர்வொலி ஒப்பாரும் மிக்காருமற்ற மறவனுக்கு மனதாகும்போதே "மாவீரத் தாலாட்டு"மடைதிறக்கும் பங்கர் வழியால் நெடிய அழுகுரலில் அமிழ்ந்துபோன வாழ்வின் சுருதி அநாதையாய்த் தெறித்த குருதித் துளியில் விகாரமாய் கிளர்ந்தெழ கிடப்பில் கிடக்கும் மூக்கறுந்த மூக்கு (முன்னைய)ப் பேணிக்கு ஈயம் உற்றும் ஒரு செயலாய் "இது" மெல்ல நடக்கிறது! மூக்கிருந்தாலாவது நொடிந்துபோன ஆசையோடு நெஞ்சு வலிக்க நெருடிக் கொண்டிருக்கும் பழையகுருதிக் குடத்துக்கு நீ...

மே தின ஊர்வலமும்,புலிகளும்...

மே தின ஊர்வலமும்,புலிகளும் சில (சுவாரஸ்ய)-துயரமான நிகழ்வுகளும்! இன்றைய மே தின(01.05.2006)நிகழ்வுகளில் நான் பெற்றுக்கொண்ட சில அநுபவங்களைப் பகிர்வதென்பது ஊருக்கு உபதேசம் செய்வதற்கல்ல.உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதும்,நமது நிலைமைகளை(புலிப்பாசிசத்தை) உலகத்தமிழ் வாசகர்கள் புரிவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வலைப்பதிவில் சாத்தியமாக்குவதற்குமே! எனக்குப் பிடித்த நிகழ்வுகளில் "மே தின ஊர்வலமும்"ஒன்று. இந்த ஊர்வலத்தில் எப்பவும் பங்குகொள்வது எனது மனதிற்கினியவொரு துடிப்புடைய செயலாக இருப்பதும் ஒரு காரணமாக அமைவதால், ஒவ்வொராண்டும் இதில் ஆர்வத்தோடு இணைந்து கொள்வேன். இம்முறை வீட்டிலிருந்து வெளிக்கிடும்போதே மல்லுக்கட்டித்தாம் புறப்படவேண்டிய நிலை.குழந்தைகளையும் கூட்டிச் செல்லும்படி என் பொண்டாட்டியின் அழுங்குபிடியில்,அவர்களையும் அழைத்துச் செல்லும்படியாகி,அவர்களும் வெளிக்கிட்டு வருவதற்கு ஆயத்தப்படுத்தியபோது, நேரம் ஒன்பதைத் தாண்டியது.அத்தோடு அவர்களும் வருவதானால் நிச்சியம் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டும்.வீடுமீள மதியம் மூன்றைத்தாண்டுமென்பதால், காசு கேட்டு மனைவியுடன் மல்லுக்கட்டிப் பணம் கிடைக்காதபோது,மூத்த பய...