பு திய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியினது அஜந்தாவை இனியொரு தளம் மீளப் பிரசுரித்தது .அதுள், எனது கருத்துக்களைக் கூறியதிலிருந்து பிடுங்கி எனும் வாசகரது கருத்துக்கள் மேலும் மனித சமூகத்தைக் குறித்த பால்யப் பாடத்தைப் புகட்டுவதான தோரணையில் எழும்போது,அதையிட்டுச் சிலவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியாக வேண்டும்.நாம்,மனிதர்கள் கடந்த பாதைகளை நிலவுகின்ற வாழ் நிலைகளிலிருந்து புரியாது வேடிக்கைத் தனமாகப் புரிவது ஒருவகை அபத்தம்.
தமிழுக்கு மேலும் வலிமை சேர்க்கும் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை"கூட இன்றைய வாசகர்களுக்குத் துணையில்லாது போய்விட்டபோது,நமது வாசிப்பு-கற்கையின் நிலைமை புரிகிறது. இது குறித்துச் சில குறிப்புகளை எழுவதென்பது கருத்து முதல்வாத்தின்மீதான பொருள்முதல்வாதப் பாச்சிலென்பதில்லை! " சமூக வாழ்வே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்ற உண்மையை" உரைத்துப் பாருங்களேன் என்ற அறை கூவலாக...
"பிரச்சனையின் உண்மையான தீர்விலிருந்து தானும் விலகி,மற்றவர்களையும் வேறு திசையில் இட்டுச் செல்வதன் மூலமாகக் கருத்துமுதல்வாதம்,இச் சுரண்டல் அமைப்புத் ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்