Skip to main content

Posts

Showing posts from 2005

அவசியம் அறிந்து கொள்வோம்.

இதையும் அவசியம் அறிந்து கொள்வோம். உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது. ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா? போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் பூராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது. நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழங்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அ...

அன்னையின் மடி தேடி...

அன்னையின் மடி தேடி... அந்நியர்களின் விருப்பாய் அழிவு வந்தது ஈழமென்று! குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின் செல்லக் கால்கள் எங்கள் தெருவெங்கும் ஒடிந்து கிடக்கின்றன. அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத் தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி, தங்கை சிரசுகள் இழந்து நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்! எம் முன்னோர் தோணிவிட்ட வளம் நிறைந்த எங்கள் கடலை வழித்து நக்கும் அந்நியன் எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே இன்னுமெமது சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு மாவீரர் பாட்டோடு தீராத கொலை வேட்கையுடன் அலைகிறான். இந்த நிலையில் என் தேசக் குஞ்சுகளுக்கு சில வற்றைச் சொல்வேன்: மற்றவர்களின் விருப்புக்காய் மடிந்தது போதும்,மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு வயதாகிப் போகவில்லை! அதோ, வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல் துள்ளி விளையாடத்தக்க உங்கள் மனதைக் கெடுக்கும் கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள். 'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்' என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில் வாழ்வின் உண்மையையும் வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும் நான் தரிசிக்கிறேன். ஏழைத் தாய் ...

ஈர விழிகளும்,இதய வலியும்...

ஈர விழிகளும் இதய வலியும்... உ லக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி! போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது. அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமிய...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமியத் தகவமைப்பும்... >>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை, மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்- மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது, அது விருப்பையும் ஏற்படுத்துகிறது' இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம்(இவர் 'யூரோ இஸ்லாத்தை' முன் மொழிபவருங்கூட) இங்ஙனம் உரைத்தார்,கடந்த இலண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னரான உரையாடல் ஒன்றில். அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி எங்ஙனம் நிகழ்தது என்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின்...

எச்சம்!

எச்சம்! பனியுதைக்கும் அதிர்வில் விறைத்தொதுங்கிய உணர்வும் இளமைக்கு விடைகொடுக்கும் உடலும், இழப்பினது கனவுகளுமாக இந்தக் குளிர் காலம். சற்று முன் நிலாவின் ஒளியை நுகர்ந்த என் மனது மௌனித்துக் கிடக்கிறது! மாலை நேரத்துப் பொலிவுகளை சிறார்களின் துள்ளலிலும், சிரித்தொதுங்கும் 'அம்மாக்களின்' விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை! இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு எந்தப் பொலிவுமில்லை! இது கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் மௌனித்த காலத்தின் அதிருப்தியாய் மனதைக் கிளறிவிடும் கார்த்திகையில் விளக்கிட்டு தேவாரம் பாடிய மனதும், வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய எனது தீபமும் நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு. அந்த மனதின் நினைவுத் தோப்பில் தீராத வடுவாய் நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம். தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும் பேசவெழுந்த நாவின் முனகலும் குருதியின் அதிர்வில் நிலைமறுத்திருக்கு என் தேசத்து முற்றத்தில். இருண்டவெளியின் நெடும்பாதையில் தேசத்தை நோக்கிய நெஞ்சு வனப்பிழந்து கிடக்க, பார்த்துப் பழகிய பூமியும் பாய்விரித்துப் படுத்த முற்றமும் பாட்டுச் சொன்ன குயிலும், பக்குவமாய...

தமிழுணர்வு:அரசியல்.

போராட்டம்,வாழ்வு,தமிழுணர்வு:அரசியல். இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு 'வாழ்வியல் மதிப்பீட்டைக்'கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம், நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட'ஜனநாயகம்' எனும் கருத்தாக்கத்தால் உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் 'ஒப்பாரி' எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் 'பிரதிநித்துவப்படுத்தும்' ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது. இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை. இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய'அரசியல்-பொருளியல்'வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீ...

'மகனும் ,ஈ கலைத்தலும்'

"வனத்தின் அழைப்பு" அஸ்வகோஸ்:'மகனும் ,ஈ கலைத்தலும்' (சிறு குறிப்பு) '...என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்...' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான் துயருற வேண்டி. சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்! படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி. 'இறுதியாக என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்களை அண்ட நான் விடவில்லை' சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள். என்னயிது? சவப்பெட்டி நட்டநடுவே. ஒன்றல்ல, பல. ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி. என் கைகள் நாலாபக்கமும் வீசியடித்தபடி,வேகமாயின. முடியவில்லை. அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன். யாருமேயில்லை! எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள்? இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு. சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈ...

'ம்'-நாவல் விமர்சனம்!

சோபா சக்தி: 'ம்' அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்! '............', ம்.... ஆமா,ஓம்-ஓம்! ம்..... இது? (1) கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்!இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல்'ம்'சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு ம...