Skip to main content

Posts

Showing posts from November, 2008

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும். இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம். "பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக! இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிக...

தலைவரின் உரையைக்கடந்து...

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும். -புரிதலுக்கான உரையாடல். 2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை மேலும் போராட்டத்தோடும்,புலிகளோடும் ஈழத்தைக் கனவுகாணவும்,நிதிப் பங்களிப்புச் செய்யவும் அவர் தனது பங்களிப்பைச் செய்துவிட்டார்.எனினும்,சிங்கள அரசு போரை நிறுத்தி மக்களினது நலன்களைக் கவனிக்கப் போறதில்லை!அது,இந்திய மத்திய அரசின் சொல்படி யுத்தத்தில் முனைப்புற்றுப் புலிகளைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்துவருகிறது. தேசியத் தலைவரின் உரை மிக உருக்கமானதாக இருக்கிறது.எப்போதும்போல நாம் அதை இப்போது,உடைத்துக்கூத்துக்காட்ட விரும்பவில்லை!அவர் புலம் பெயர்ந்த இளைய தலைமுறையை மையப்படுத்துகிறார்.இது சரியானதே.எனினும்,தமிழ்பேசும் மக்களைப் புலித் தலைமை ஏமாற்றிய தவறை அவர் இன்னும் உணர மறுக்கிறார்! இந்த நிலையில்,இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே ...

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகள்

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகளும், பட்டுக்கோட்டைப்பாணிபாட்டுத் தத்துவத் தட்டைப்போடும் நாமும். "டையன் பின் பூ-ஜெனரல் கியாப் ஈறாய் ஈழத்துக்காகப் புலிகள் செய்த போராட்டம்வரை ஏறி-இறங்கிப் பாய்தல்" இ ன்று விடுதலைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்கள் போராட்டச் செல் நெறிக்கமையவேனும் தன்னைத் தகவமைத்து ஆயிரக்கணக்கான தேசபக்த போராளிகளையும்,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்தையும் காத்தாகவேண்டும்.இதிலிருந்து ஒருபடியேனும் புலிகள் பின்வாங்குவார்களேயானால் நிச்சியம் புலிகள் பூண்டோடு துடைக்கப் படுவார்கள்.பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் இன்று, மக்களோடான புலிகளின் பிழையான-தவறான உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட புலிகளின் போராட்டம் மீளவும்,மக்களைத் தம்மோடு அணைப்பதற்கான முயற்சியில்,அதே மக்களைக் கட்டாயத்துக்குட்படுத்துகிறது.இது,எதிரிக்குச் சார்பான மக்கள் மனங்களைத் தொடர்ந்து உற்பத்திபண்ணக் கிளிநொச்சியிலிருந்து புலிகள் மூட்டைகளைக் கட்டுகிறார்கள்.கூடவே, மக்களையும் பார்சல் செய்து முல்லைத்தீவை நோக்கி அனுப்புகிறார்கள். இது மிகவும் கொடுமைய...

புலிகளின் புதிய பிறப்பு என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய பிறப்பு என்ன? "இயக்கவாத மாயை உருவாக்கிய "விடுதலைப் போராட்டம்"முடிவுக்கு வருகிறது,அதன் மீட்சியாக இன்னொரு வகையிலான புதிய அரசியல் கோரிக்கை முன்னெழும்.அது,முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக இருக்கும்.தென்கிழக்காசியிவில் நிலவிய புரட்சிகர அபாயத்திலிருந்து கிழக்காசிய ஆளும் வர்க்கங்கள் தற்காலிகமாக விடுபடுகின்றன.இனி நிகழப்போகும் புலிகளின் மீள் உருவாக்கத்திலிருந்து,புதிய தெரிவுகள்-புதிய பாணிலிலான இயக்க அமைப்பாண்மையைக் கோரிக் கொள்ளும்?." இன்றைய ஈழப்போராட்டச் சூழலில் களத்தில் போராடுவதாகச் சொல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலத்தினதும்-இன்றையதுமான இராணுவ-அரசியல் தோல்விகள் உண்மையில் தவிர்க்கமுடியாத ஒன்றா?,புலிகளின் கட்டமைப்புச் சிதைந்து,அந்த இயக்கம் உண்மையிலேயே அழிந்துவிடுமா? இவர்கள் எந்த வகையில் இத்தகைய நிலைமைக்கு உள்ளானார்கள்? இத்தகைய கேள்விகள் நமக்குள் தொடர்ந்து எழுகிறது அல்லவா,இவைகள் உண்மையில் நமது மக்களின்மீதான கரிசனையின் வெளிப்பாடுகளால் மட்டுமல்ல எழுகிறது.மாறாககச் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின்ம...

எமக்குப் பெரு வழியாகினாய்

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க! அண்ணாவுக்கு அகவை ஐம்பது ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு அன்பொழுகும் உங்கள் அகத்தை என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள் வாழ்வுப் பெரு வெளியில் ஐம்பது சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில் பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள் அகவை ஐம்பதென்பதும் ஒரு படி நிலை பார்ப்பதற்குக் கனிவும் பழகுவதற்கு இனிமையும் ஏந்தப் பெற்ற என் அண்ணா எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து எவருக்கும் இரக்கமுறும் இதயம் பெற்றாய் இன்புற்று இனிதாய் உணரும் உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள் நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி! எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள் வாழத்தக்க முறைமைகள் தாங்கி வருவோருக்கு இன்முகமாய் இனித்தே இதயம் திறப்பாய் இன்றுனக்கு ஐம்பது! அளப்பெரிய புருஷனாகி அகவை ஐம்பதுக்குள் அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய் இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும் உன் இதயப் பெருவெளியின் இருப்பை உறுதி செய்ய உலகின் உய்விப்புக்கு இப்படியும் ஒரு வடிவம் நீ,இந்தப் பயணத்துள் என்றும் இளையவனாய் இளைப்பறியா எங்கள் வழித்துணையாய் இருக்கக் கடவாய்! இதயத்தின் அதிர்வுகளனைத்தும் உன்னுறவின் பெரு வியப்பில் எமையாழ்த்தும் ஒ...

தீராத யுத்தம் தீர்க்க முனையும் தீர்வு-என்ன?

இலங்கை-இந்தியப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதுமுடியாதிருப்பினும்,அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் பாரிய மனித அவலம்,பிராந்தியப் பொருளாதார மற்றும் கேந்திர அரசியல் இலக்குகளின் வழிப்பட்டதே. "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்-பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக இவர்களின் ஊடாக நமக்குள் வந்துகொண்டபின், யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை-பிராந்திய நலன்களை எட்டுகின்றன.யுத்தத்துக்குள் மூழ்கிய தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு நகர்த்திய இந்திய அரசு, இப்போது ஒன்றுந்தெரியாத பாப்பாவாக நடிக்கிறது. வாய்ச் சவடால் விட்ட புலிகளோ மரணத்தின் விளிம்பில் மக்களைத் தள்ளிவிட்டுத் தாமும் அழியும் அரசியலைக்கொண்டியங்கித் தமிழ் நாட்டிடம் உதவி கேட்கும் போராட்டத்தோடு தமது கதையை மெல்ல முடித்துவருகிறார்கள்.தேசியத் தலைவர்,தளபதிகள்,அரசியல் ஆலோசகர்கள்,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் மண்டியிட்டுத் தமது உயிர்வாழ்வுக்காக உயிர்பிச்சை எடுக்...