மானுட நேசிப்பும்,'நான்' சாகடித்தலும்-மனித உறவுகளும். மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.திரு. தமிழ்வாணன் அவர்களது மடலுக்கான விளக்கமாகவும்-எம்மீதான கேள்விக்குமான பதிலீடாவும்,எதிர்வினையாகவும் இந்தக் குறிப்பை வளர்த்துக்கொள்வது எமது தவிர்க்கமுடியாத வினையாக இருக்கிறது! காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும். திரு.தமிழ்வாணன் அவர்கள் கேட்கின்றார்:'மேலும் நீங்கள் உங்கள் பதிலில் நாங்கள் நாங்கள் என ஒரு பக்கமாக ஒரு அணியின் பிரதிநிதியாக பதில் அளித்துள்ளீர்கள். அது தவறுதலாக ஏற்பட்டது என நான் நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அந்த அணி எது என நான்...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்