Skip to main content

Posts

Showing posts from June, 2007

யுத்தமற்ற வாழ்வு: "அழகானது".

யுத்தமற்ற வாழ்வு: "அழகானது". இந்தவுலகத்தின் இன்றைய சமூகவுளவியலானது வெறுமனமே கனாக்காணும் மனதை எல்லோருக்கும் வழங்கியுள்ளது.திட்டமிடப்பட்ட இந்த மனோபாவமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமாக வளரும் ஒரு நிலையை எய்திடுவதற்கு எந்த வழியுமில்லை.இருக்கின்ற வழிகளெல்லாம் ஒவ்வொரு பெரும் தொழில் நிறுவனத்துக்கோ அல்லது பெரும் கட்சிக்கோ சொந்தமான வழிகளாக இருக்கின்றன.அந்தந்தக் காலங்களில் அந்தந்த அமைப்புக்குச் சாதகமானதாக இருந்த நிறுவனங்களின் காலங்கள் போய்,இப்போது ஒவ்வொரு பெரும் குடும்பங்களுக்குச் சொந்தமான உடமையாக இருப்பவைகளைக் காப்பதற்காகவே குடும்ப நிறுவனங்களாக-மேல்மட்ட அமைப்புகளாக இவை நிலை பெற்றுவிடுகின்ற சூழலில், கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகின்றன.மொத்தமான கூட்டு அமைப்பானது எவ்வளவுதாம் நாகரீகமான அமைப்பாண்மைக் கொண்டிருப்பினும் அது ஆண்டான் அடிமைச் சமூகத்தின் அதியுயர்ந்த அடக்குமுறையைக் கொண்ட சமுதாயமாக விரிவுற்றுள்ளது.இங்கே மனித சமூகத்தின் முழு ஆக்கத் திறமையும் மிகவும் கேவலமான சந்தையாக வடிவுற்றுள்ளது.இந்த அமைப்புள் தோற்றிவைத்துப் பூசி மெழுகும் எண்ணவோட்டமானது எப்பவும் இந்தவுலகத்தின் ஆளும் வர்க்க...

அரசு-புலிகளின் யுத்தங்கள்...

அரசு-புலிகளின் யுத்தங்கள்:யாருக்கு அவசியமானவை? இன்றையவுலகில் "எது,எப்படி"என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.இதிலிருந்து மீண்டு விடாதவரைக்கும் இந்த அமைப்புக்குப் பாதகமில்லை.அப்படி இருத்தி வைப்பதற்கான தொடர் நிகழ்வுகள் மனித உடலை மையப்படுத்திய அரசியலாக விரிவுற்றுத் தொடரும்போது சமீபகாலத்து எல்லாவகைச் சமூக முன்னெடுப்புகளும் அந்தச் சமுதாயத்தின் அதீதத் தேவையோடு முரண்டுபிடிப்பதில் "பொது ஜனநாயகம்"பொலிவுறுவதாகவும் சுட்டிக் கொள்ளப்படுகிறது.இதன் தாத்பரியம் இன்னொரு வதைக்கான தொடர் நியாயங்களைச் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வகைப்பாடுகளை நமது சிந்தனா முறைக்குள் திணித்து விடுவதில் இன்றைய பொது அப்பிராயத்துச் சிந்தனா வகைப் பெறுமானங்கள் பாரிய பங்கை வகிப்பதாலும், அதன் அத்துமீறிய வகைமாதிரியானவொரு கருத்துத் திணிப்பாலும் நமது சமூக வாழ்வு எந்தப் பெரிய ஆர்ப்பாட்டமுமின்றித் தனித்தவொரு திசை(இருள்)வெளியில் தாந்தோன்றித்தனமாக விரிந்தபடி. நாங்கள் தின...