தமிழகத்தில் காவிச் சாயம் காயப்படுமா?,குஜராத்து முஸ்லீமின் கண்ணீரும், குருதியும் கண்ட தமிழகத்தில் பார்ப்பனப் பாசிசத்துக்குப் பாடம் புகட்டலாம். "தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன இந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப் பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில் நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன் அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் சிதைப்பதில் இத்தகைய தாக்குதல்கள் வழிசமைக்கும்." மு.கருணாநிதி அவர்களின் தலைக்கு விலைபேசும் சனாதனவாதியான இராம்விலாஸ் பாசிஸ்டின் கருத்துக்கு எதிரானதாகத் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறும் எதிர்ப்புணர்ச்சிச் சம்பவங்கங்கள் யாவும் ஏதோவொரு மனிதரின் தனிப்பட்ட கூற்றுக்காகவும்,அது முழுக்க முழுக்க இன்னொரு தலைவரின்மீதான வன்முறையாகவும் கட்டப்பட்ட கருத்தின் வாயிலாக இடம்பெறுவதாக நிகழும் சம்பவங்கள், ஒருவகையில் அதன் உட்பரிணாமத்தை மறுக்கும் இன்னொரு பக்க விளைவுக்குக் காரணியாக இருக்கலாம்-இருக்கப் போகிறது. இந்தச் சம்பவத்தை வெறும் தனி நபர்களுக்கிட...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்