Skip to main content

Posts

Showing posts from May, 2008

மகெஸ்வரி வேலாயுதம் மற்றும் கொலைகளும்!

பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும்... நே ற்றுப் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் போன்று பல்லாயிரம் உயிர்கள் "தேசிய விடுதலையின்"-இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அந்நிய நலன்களுக்காக இலங்கையரசாலும் ஆயுததாரித் தமிழ் குழுக்களாலும் பறிக்கப்பட்டுவருவது மக்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது! இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினது "அரசியல் தீர்வு" எவ்வளவு நடத்தைகெட்ட ஆளும் வர்கத்தால் தமது இருப்புக்காக இழுத்தடிக்கப்பட்டு வருவதும் அதன் வாயிலாகக் கொலைகள் அரசியலாக மாற்றப்பட்டதென்பதை நாம் உணரும்போது,உண்மையில் தமிழ்பேசும் மக்களோ அல்லது சிங்களம் பேசும் மக்களோ இலங்கையில் எதுவித உரிமையுமற்ற மக்கள் கூட்டமாக மாற்றப்பட்டு, குடிசார் சமூகத்துக்குரிய அனைத்துப் பண்புகளையும் இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடந்தேறுகிற அரசியல் கொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாரிய சதியுடன் நடந்தேறுகிறது!தினமும் கொல்லப்படும் மனித உயிருக்கு விடுதலையின் பெயரால் "துரோகி"எனும் பட்டம் கொடுக்கப்படுகிறது.பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்...

உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

எந்தையும் தாயும் எனத் தொடர... "இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்" இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில் இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்? காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து காவிச் செல்லு என் கண்ணீரை கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய் தந்தையுமாகி நின்று தமிழ் செய்யும் எனது மனதில் நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு தர்க்கத்துள் நிலைக்காத உறவில் என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்! பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய் தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும் தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும் போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப் பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான் நிலவொடு வானம் பொருந்தும்? முகிலொடு பொழிவு நள்ளும் புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும் அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய் தக்கதே செய் என...

ஞானம் மற்றும் பிள்ளையான்:கிழக்கின் மாற்றுச் சக்திகள்?

பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது! இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் யுத்தஞ்செய்து இலட்சம் மக்களைக் கொன்றுதள்ளித் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தைத் துண்டாடிய நிலையில், யாழ்ப்பாணம்-வடக்குச் சிங்கள ஆதிகத்துள் வீழ்ந்தபின் கிழக்கு முதல் மன்னார்வரை ஒவ்வொன்றாகச் சிங்கள ஆதிக்கத்துள் வீழ்ந்து வருகிறது!புலிகள் ஈழத்தை கடந்த 25 வருடமாக விடுவிப்பதன் அழகு இந்த இலட்சணத்தில்...இன்று,கருணாவின் பிளவுக்குப் பின்பான கிழக்கிலிருந்து வெருட்டியடிக்கப்பட்ட புலிகள் கிளிநொச்சிக்குள் மரணப்பொறிக்குள் சிக்குண்டபின் கிழக்கில் தேர்தல் வேட்டை சூடுபிடிக்கிறது! இலங்கையின் வடக்குக் கிழக்கில் மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.இதைத்தான்ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் இந்தப் பிள்ளையான்-கருணா மற்றும் சின்னமாஷ்டர் என்ற ஞானம் வகையாறாக்களின் அரசியலும் தனிநபர் தேவைகளும் எ...