Sunday, December 27, 2015

அணுப் போர் அபாயமும்;மூன்றாவது உலக மகா யுத்தத்தை அண்மித்தலும்!


அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன்.

முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது.

இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்"மகாத்துமா"என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது.

இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

"உண்மையான அமெரிக்கன் எப்படி இருப்பானென்றால்,அவன் ஜனாதிபதி வில்சனைப் போல் இருப்பான்".என்று சாதாரண அமெரிக்கச் சிப்பாய் சொல்லுமொரு காலம் அமெரிக்காவில் தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.கரிபியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் வலயத்திலும் தனது ஆதிக்கத்தை நிறுவிய அமெரிக்கா முதலாம் உலக யுத்தத்தில் மூழ்கிய-மூட்டிய ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பமானது அமெரிக்காவை வலுவான தேசமாக உருவாக்கிய நூற்றாண்டின் திறவுகோலாகும்.

இன்றிருக்கும் அமெரிக்காவானது இன்றைய அதன் ஜனாதிபதியால் இத்தகைய நிலையை அடைந்துவிட்டதாக யாராவது கணித்தால்-கருதினால் அது மிகப் பெரும் கொடுமை!அமெரிக்காவினது தொழிற்றுறையைக் கட்டுப்படுத்தித் தமது குடும்பச் சொத்தாக மாற்றிய அமெரிக்க வெள்ளையினக் குடும்பங்கள் சில அந்தத் தேசத்தை மனித விரோதிகளின் கூடாரமாக்கிய பின் தேசங்கடந்த வழிப்பறிப் பயங்கரவாதிகளாகத் தமது மக்களை உருவாக்கி விட்டுள்ளது.இந்த அமெரிக்காவுக்கென்றவொரு "நீதி-நியாயம்",அடி-கொள்ளையிடு என்றபடியே அர்த்தமாகிறது.

1990 செப்டெம்பர் 11 இல் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய சீனியர் புஷ்:"...ஒரு புதிய யுகம்,பயங்கரவாதத்தைச் சுதந்திரமாக எதிர்துத் தாக்கத்தக்க மற்றும் சமத்துவத்தைப் பலமாக நிலை நாட்டத்தக்க, நிச்சியமான சமாதானத்தை உறுதிப்படுத்தத் தக்க புதிய யுகம்.ஒரு புதிய யுகம்,கிழகத்தைய மற்றும் மேற்கத்தைய கூடவே வடக்கத்தைய மற்றும் தென்னக இனங்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமாகவும் இசைந்தும்(...)வாழத் தக்கதான புதிய யுகம்.இன்றைக்கு அதற்காக உழைக்கின்றோம்.அது உதயமாவதற்காகப் போராடுகிறோம்.ஒரு புதிய யுகம்,அது அனைத்து வித்தியாசங்களுடனும்,ஒவ்வொருவருடையதுமான வித்தியாசங்களுடன் இருப்பதை நாங்கள் அறிவதற்கும்.சட்டத்தின் ஆளுமையை பலத்தோடு நிறுவுதற்கும்(...) ஒரு புதிய யுகம்,பலவீனர்களினது பலமான சட்டங்களைப் பலமானவர்கள் மதிக்கத் தக்க புதிய யுகம் உருவாக்க வேண்டும்."(Joshua Frank : 'Left Out! How Liberals Helped Reelect George W. Bush', ) 11 செப்ரெம்பர் 2001 உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்கு முன்பான அமெரிக்காவின் புதிய உலகுக்குக்கான அடித்தளம் இது.இந்த அரசியல் அபிலாசை உலகத்தின் வளங்கங்களைக் கட்டுப்படுத்தி விடுவதோடு இருக்க வில்லை.மாறாக அமெரிக்காவின் அனைத்து நலன்களையும் முதன்மைப் படுத்திய உலக மக்களை உருவாக்குவதில் அதன் போராட்டம் மேலும் சீனியர் புஷ்சின் உரையோடு அண்மித்திருந்தது.

பனிப்போர்: 2

ஏலவே இரண்டவது யுத்தத்தின் பின்பான அதனது அணுவாயுதத் திமிரானது உலகத்தைக் கம்யூனிசச் சக்திகளின் கைகளில் தவறியும் சேர்த்துவிடாதிருக்கப் பெரும் இராணுவத் திமிராக வெளிப்பட்டது.இதன் தொடர்ச்சியாக உலகு தழுவி 400 இராணுவப் பாதுகாப்பு முகாங்கள் நிறுவப்பட்டன.பல இலட்சம்(கிட்டத்தட்ட 200.000.படைகள்)இராணுவத்தினர் இதற்காக வெளி நாடுகளில் அமெரிக்க அரசியலை முன்னெடுத்தனர்.




இந்தத் தருணத்தில் உலகை ஏப்பமிட முனைந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் ,இரஷ்சியாவுக்கும் மூண்ட பனிப்போர் குருஷ்சேவைப் படாதபாடு படுத்தியது. வலிந்துருவாக்கிய அமெரிக்காவின் இராணுவப் பொறிக்குள் வீழ்ந்த இரஷ்யா அனைத்தையும் இழந்து,தனது பொருளாதாரக் கட்டுமானத்தையே சிதறடிக்கும் அளவுக்கு இது வலியதாக இருந்து. சமீத்துள் வெளியாகிய  இந்த அறிக்கையில் [ http://nsarchive.gwu.edu/nukevault/ebb538-Cold-War-Nuclear-Target-List-Declassified-First-Ever/  ]  ,அமெரிக்காவானது எப்படி யுத்த வியூகம் அமைக்கின்றதென்பதை ( U.S. Cold War Nuclear Target Lists Declassified for First Time :According to 1956 Plan, H-Bombs were to be Used Against Priority “Air Power” Targets in the Soviet Union, China, and Eastern Europe Major Cities in Soviet Bloc, Including East Berlin, Were High Priorities in “Systematic Destruction” for Atomic Bombings Plans to Target People (“Population”) Violated International Legal Norms .SAC Wanted a 60 Megaton Bomb, Equivalent to over 4,000 Hiroshima Atomic Weapons )யோசிக்க  அதிர்ச்சியாவிருக்கிறது!நாம் பாசிசத்தின் நிழலுக்குள் வாழ்கிறோம்.

இந்தவொரு நிலை மீளவும் உருவாகிறது.இருசியாவைச் சுற்றி வளைக்கிறது நேட்டோ அணி.மேற்கு - கிழக்கு ஐரோப்பியத் தேசங்களில் அமெரிகப் போர்த் தளபாடங்களும் ;அணுக் குண்டுகளுமா நிறைக்கப்படுகிறது!இருசியாமீது பெருந் தாக்குலைச் செய்வதற்காக இருசியாவைப் போரை முதலிற்றொடக்குவதற்காக அதனது SU-24 போர் விமானத்தைத் துருக்கியைப் பயன்படுத்தி நேட்டோ இராணுவஞ் சுட்டு வீழ்த்துகிறது!பூட்டின் இந்த வியூகத்தை மிக நேர்த்தியாத் தோற்கடித்தாலும் எழப்போகும் போரில் இழக்கப்படும் மனிதவுயிர்களை அவரால் தடுக்க முடியாது!

இது ஏன்?

இப்போது "கம்யூனிச" இரஷ்சியா இல்லை!

அமெரிக்காவுக்கு எதிரான-பலமானவொரு வல்லரசு உலகில் எதுவுமில்லை.

என்றபோதும் அமெரிக்கா போலந்தில் பத்து ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் மற்றும் செக்காயில் ரேடர் கருவிகளையும் நிறுவிக் கொள்ளும் முனைப்பில் இறங்கிப் பாரிய படையணிகளை உருவாக்கி மீளவும்,பனிப் போரைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பல ஆதரிக்க, அவர்களின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்  CIA முலம் வழிநடாத்தப்பட்டு -நேட்டோவின் தலைமையை ஏற்று இருசியாவைத் தான்க முனையும்  ஐரோப்பிய ஒன்றியம்  "முதலில் பொருளாதாரத் தாக்குதலெனத் தடுமாற" , இந்தப் பனிப் போர் வழி செய்கிறது.

இரஷ்ய அதிபர் பூட்டின் சொல்கிறார்: அமெரிக்கா அரசியல் எல்லையை மீறுகிறது!(Putin: "USA haben politische Grenzen überschritten" -Russlands Präsident Putin kam bei der Münchener Sicherheitskonferenz sofort zur Sache. Er warnte massiv vor einer amerikanischen Weltherrschaft und drohte: Russland verfüge über Waffen, gegen die die geplante US-Raketenabwehr für Osteuropa wirkungslos wäre.)


இது-இந்த முரண்பாடு ஏன்?

அமெரிக்கா சொல்கிறது:"ஈரானின் நெடுந்தூர ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைக் காப்பதற்கு இது(National Missile Defense)அவசியம்."

உண்மை வேறு வடிவமானது.

இருஷ்சியாவுக்கும் ஈரானுக்கும் மற்றும் ஜேர்மனிக்கும் ஈரானுக்குமான வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் காரணங்கள்,யுரோவுக்கு மாற முனையும் ஒபேக்கின்;(OPEC)மன விருப்பு-வற்புறுத்தல் போன்ற பல் வகைக் காரணிகள் இந்த விசயத்துள் அமெரிக்காவுக்கு ஏவுகணைத் திட்டமாக விரிகிறது.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் பின்னைய காலங்களில்(1997-2001)அமெரிக்காவின் வெளித்துறை மந்திரியுமான மெடாலின் அல்பிறைட்;(Madeleine Albright)அம்மையாரை பலர் அறிந்திருப்பார்கள்.அமெரிக்கா என்பது முதலாளித்துவத்தின் மிகக் கொடு முடியென்பதும்,அதன் ஒவ்வொரு அசைவும் நிதி மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கும்,உலகை அடியோடு சுரண்டுவதற்கும் என்பது பொதுவான கருத்து.ஆனால் அமெரிக்காவானது உலகை மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர முனையும் அபாயகரமான விஞ்ஞானப் பலம் கொண்ட நாடு.இந்த அமெரிக்காவை நிலை நிறுத்தியது அவர்களின் கொடூரமான இராணுவமோ அல்லது அந்த நாட்டின் நிதி மூலதனமோ அல்ல.அந்த நாடு தன்னை மேல் நிலைப்படுத்தத் தொடங்கிய தாக்குதலை விஞ்ஞானப் பலத்தோடு கட்டியமைத்த ஆண்டு 6.ஓகஷ்ட்டு 1945 ஆகும்.அன்றுதாம் இவ்வுலகைக் கரியாக்கும் அணுக் குண்டை அமெரிக்கா மனிதப் பெரும் பரம்பலுக்குள் வெடிக்க வைத்துப் பரிசீலித்த அதி துயரமான நாளை உலகுக்கு அமெரிக்க முதலாளிகள் அறிமுகப்படுத்திய நாள்!கீரோசீமா(Hiroshima)குலைந்து எரி பிண்டங்களாகச் சிதறிக்கிடந்த இந்த நாளை நிஜப்படுத்திய கொடியவன் ஓப்பன் கைமர் என்பது என் கருத்து.பின்னாளில் அவன் மனம்வருத்தி அதிபெரும் அணுக்குண்டை(The basic principle of the Teller–Ulam configuration for a thermonuclear weapon  ) அமெரிக்கா தயாரிப்பதற்கு ஒத்துவரதாபோது ஓப்பன் கைமர்  இருசியாவின் ஒற்றன் என்று குற்றஞ் சுமத்தப்பட்டு
ஓரங்கட்டபட்ட நிலையில் வீலர் தலைமையில் எட்வார்ட் ரெலர் மற்றும் இசுராலிச்சுலாவ் உலம் ( Edward Teller and Stanislaw Ulam  ) கணிப்பின்படி( http://nsarchive.gwu.edu/NSAEBB/NSAEBB94/tb37.pdf  )  அதிபெரும் அணுக்குண்டு தயாரிக்கப்பட்டு( 60 Megaton Bomb, Equivalent to over 4,000 Hiroshima Atomic Weapons ) மனித இனம் அழிக்கப்பட அமெரிக்கா தயாராகிறது

உலகின் இன்றைய நிலைக்கு இந்த விஞ்ஞான அறிவே முழு முதற்காரணமாகும்.முதலாளியமென்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடுதாம் இது நாள் வரைத் தன்னை நிலைப்படுத்த முடிந்திருக்கிறது.இந்த விஞ்ஞானத்தின் அதீதக் கைவைப்பு அணவாயுதத்தை மனிதப் பரம்பலுக்குள் வெடிக்க வைப்பது மட்டுமில்லை.இன்றைய நிலையில் மரபணு மாற்றங்களால் இயற்கையே மாற்றியமைக்க முனையும் இந்த மரபணு அறிவே உலகின் மிகப் பெரும் அழிவாக நாளை வருவது உண்மையாகப் போகிறது.இதை மிக வலுவாகச் சொல்வேன்.இன்றைய உலக நிலவரத்தின்படி உலகில் என்றுமில்லாதவாறு ஆயுதப் போட்டி ஒருபுறம் மறுபுறம் மரபணு மாற்றம் மூலம் இந்தவுலகத்தின் பூர்வீக இனங்களை அழித்து இயற்கையையே மாற்றி வரும் மிகப் பெரும் அழிவுக்காலத்தை அமெரிக்க ஆதிக்க வெள்ளையின வெறி விஞ்ஞானமாக விரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் நாம் அமெரிக்காவினதும் மேற்குலக முதலாளிகளினதும் போட்டிச் சந்தை மற்றும் மூல வளங்களுக்கான முரண்பாடுகளைப் பார்க்கப் போகிறோம்.முன்னாள் வெளித்துறை மந்திரி அல் பிறைட் அம்மணியிடம் 12 மே 1996(12. Mai 1996)அன்று தொலைக்காட்சி நிகழ்வுக்காகன சந்திப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லெஸ்லி ஸ்ரால்(Moderator Lesley Stahl)கேட்கிறார்:"ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடையினால் ஐந்து இலட்சம் குழந்தைகள் மரித்ததாகக் கேள்விப் படுகிறோம்,இத் தொகையானது கீரோசீமாவில் உயிரிழந்த குழந்தைகளைவிடப் பலமடங்கு அதிகமானதென்றே நான் கருதுகிறேன்.இது குறித்து நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்,இது விலை மதிக்கத்தக்கதா?(Wir haben gehört, dass eine halbe Million Kinder wegen der Sanktionen gegen den Irak gestorben sind. Ich meine, das sind mehr Kinder, als in Hiroshima umkamen. Und - sagen Sie ; ist es den Preis wert ?) அல்பிறைட் அம்மயார்(Madeleine Albright )சொல்கிறார்:"நான் நினைக்கிறேன் இது மிகக் கடினமான முடிவு என்றே, எனினும் ,இந்த விலை,நாங்கள் கருதுவதின்படி மிகவும் விலை மதிகத் தக்க விலையே."(Ich glaube, das ist eine sehr schwierige Entscheidung, aber der Preis - wir glauben, es ist den Preis wert.)


ஆக அமெரிக்காவின் நியாயத்தின் படி ஈராக்க இந்த விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்.இது அமெரிக்காவுக்கு விலை மதிக்கத்தக்க அரசியல் ஆதாயம்.இதை இன்னொரு வடிவில் பாருங்கள் ஆர்த்தூர் ஒப்பன்கைமரின் அணுக்குண்டைக் காவிச் சென்று கீரோசீமாவில் வெடிக்க வைத்த மனித பயங்கரவாதி அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை விமானி பவுள் ரிபெட்ற்(Paul w.Tibbets)ஜேர்மனியத் தொழிற் சங்கம் மெற்றாலுக்கு(Metall) அளித்த பேட்டியொன்றில் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா?


தொழிற் சங்கம் மெற்றால்(Metall):"இன்று கீரோசீமா குறித்தும் அணுக் குண்டு வெடிப்புப் பற்றியும் என்ன எண்ணுகிறீர்கள்?,உங்களது அன்றைய பாத்திரம் குறித்து மனவருத்தம் அடைகிறீர்களா?"(?"(Metall:Wie denken Sie heute ueber die Bombardierung von Hiroshima und ueber Ihren Auftrag-bedauern Sie es?).Paul W.Tibbets:"நான் பூரணமாக இது குறித்து வருத்தப்படவே இல்லை.அந்தக் காலத்தில் போடப்பட்ட அணுக்குண்டும் அதன் அவசியத்தையும் ,நம்பிக்கையின்படியேதான் நான் செயற்படுத்தினேன்.அது குறித்து இன்றுவரை எந்த மாற்றமுமில்லை(Ich bedauere absolut nicht.Zum Zeitpunkt des Bombenabwurfs war ich von seiner Notwendigkeit ueberzeugt,und daran hat sich bis heute nicht geaendert.)- Krieg und Friden von Willi Dickhut.Seite:35.

மேலே பதில் கூறியவர்களில் ஒருவர் அரசியல்வாதி.மற்றவர் அமெரிக்காவின் விமானப்படை விமானி.இருவரின் கருத்துகளுக்கும் இடையில் ஏதாவது அடிப்படை வித்தியாசம் உண்டா?

அதாவது மனிதர்களை அமெரிக்க அரசியல் கொல்வது பற்றி-தனக்குச் சம்பந்தமே இல்லாத நாடுகளைத் தாக்கி அந்தந்த நாடுகளின் குடிகளைப் பூண்டோடு அழிக்கும் அமெரிக்கப் பயங்கர வாதத்தைப் பற்றி இவர்களின் அரசியலில் அந்த(அமெரிக்காவினது) நாட்டின் குடிகளிடமுள்ள அகமன விருப்பு எப்படியுள்ளது? இது முன்னாள் ஜனாதிபதி வில்சனின் மன விருப்பை பிரதியெடுத்த ஆதிக்கத் திமிராக வெளிப்படவில்லையா?.வில்சனின் "அமெரிக்காவே முதன்மையானதென்பதன்" நீட்சியாகத் தெரியவில்லையா? இங்கேதாம் வருகிறது அமெரிக்காவின் ஜனநாயகம் என்னும் முக மூடி.இதை அளவு கோலாக வைத்துக் கொண்டு மேலே போவோம்.

அன்று ஈரக்கின்மீது தாள்கதிரியக்க்க அணுக் குண்டுகளை "Typ CBU-89 of Typ Gator,Splitterboms""மற்றும் யு 838 இரகத் தாள் அணுவினைக் குண்டுகளைக் கொண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவைக் கடிந்து கொண்டவுலகம்- இந்தக் காலத்தில் பல விவாதங்களைத் தொலைக்காட்சியில் நடாத்தியது.இப்படியொரு தொலைக்காட்சி நிகழ்வொன்றில்(ஏ.ஆர்.டி. ஜேர்மன் தொலைக்காட்சியென்றே நினைக்கிறேன்.கருத்துக்கள் ஞாபகம் இருக்கிறது.அதில் பங்குபற்றிய அமெரிக்கப் பத்திரிகையாளிரின் கருத்துக்கள் ஞாபகத்தில் இருக்கிறது.அவரது பெயர் மறந்தாச்சு.)அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி"கீரோசீமாவில் அணுக்குண்டைப் போட்டு மனிதரைக் கொன்றீர்கள்,இப்போது ஈராக்கில் இவையெல்லாம் பயங்கரவாதமில்லையா?" பத்திரிகையாளரின் பதில்:"இவையனைத்தும் பயங்கரவாதமல்ல!இவைகள் யுத்த அளவு கோலாகும்".

எப்படியுள்ளது நிலைமை?

ஈரக் குழந்தைகளின் சாவு ஈராக் கொடுக்க வேண்டிய அமெரிக்காவுக்கான பெறுமதிமிக்க விலை.

கீரோசீமாவின் இழப்பு அவசியமானது அமெரிக்கச் சிப்பாய்க்கு.

இத்தகைய மனிதக் கொலைகள்-அணுக் குண்டு வீச்சுக்கள் எல்லாம் அமெரிக்காவின் யுத்த அளவு கோல்கள் அமெரிக்க அறிவாளிகளுக்கு.

ஆக நான் வைப்பதே நியாயம்.நீ பயங்கர வாதியென நான் சொன்னால் அதை இல்லையென்று சொல்லும் உரிமை உனக்கில்லை.-இதுதாம் அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் இன்றைய பனிப்போர் உலகைக் கவ்வும் மிகப் பெரும் யுத்த அபாயம் மட்டுமல்ல.அது உலக நாடுகளின் இறைமைகளோடும்,அந்த மக்களின் உரிமைகளோடும் அமெரிக்கா தொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதாரப் போராகும்.இந்தப் பனிப் போரினால் அமெரிக்கா அடைய விரும்பும் நிலையென்ன?

மீளவும் பனிப்போர்:National Missile Defense வடிவத்தோடு:

அமெரிக்காவினது அன்றைய வெளித்துறை மந்திரி கொண்டி றைஸ்US-Außenministerin Condi Rice(பெயரில்கூட ஒரு கவர்ச்சி இருக்குது,மனதில் ஒரு எதிர்ப்பால் ஊக்கம் வேறு வந்து போகுது)தீடீர் திடீரென அண்மைக் கிழக்கு நாடுகளுக்குப் பிரயாணிக்கிறார்.தனது நீண்ட நெடுங் கால்களைப் பின்னிப் பின்னி நடை காட்டுகிறார்!எகிப்துக்குப் போகிறா அப்படியே சவுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு சிரியாவுக்கு டுபாய்க்கு இன்னும் எங்கெங்கோ போகின்றார்.இரண்டு மாதங்களுக்குள் இரு தடவைகள் நடையாய்ப் பவனி வருகிறார்.என்ன பிரச்சனை?

ஆகா! ஒபெக்(OPEC-Länder;) என்ற எண்ணை வள நாடுகளின் கூட்டு அமெரிக்க டொலர்களுக்கு மாற்றைக் கோருகின்றன.ஈரானின் நீண்ட நாள் கனவான எண்ணைப் பங்குச் சந்தை மார்ச்சு 2006 இருந்து இயங்கத் தொடங்கியாச்சு(Oil Exchange Program).அமெரிக்காவுக்கு மீளவும் ஒரு தலையிடி, இப்படி உருவாகுமென்றே ஏலவே தெரிந்தபோது அது காய்களை அரசியலூடாக மட்டுமல்ல இராணுவ வியூகத்தோடுமே நகர்த்தத் தொடங்கியது.அமெரிக்க இராஜ தந்திரத்தை இராணுவ வியூகதைத் தவிர்த்துப் பார்ப்பது கடினம்.இதுதாம் "துப்பாக்கிக் குழலிலிருந்து அரசியல் பிறப்பதாக"அன்றைய சீனத்தின் சிற்பி சொன்னதாக ஞாபகம்.என்னவோ இன்றைய இந்தப் பனிப் போரை எவருமே முடிவுக்குள் கொண்டுவர முடியாதபடி இருஷ்யாவின் இராணுவ நகர்வுகளும்,ஜேர்மனியின் விஞ்ஞானப் பரிமாற்றங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.இந்தவிடத்தில் இன்றைய அமெரிக்க வெளியுறுவ மந்திரி கெரி -பூட்டின் சந்திப்பைத் தனியே சிரியாவின் ஆட்சி மாற்ற வியூகத்துக்குள் பார்த்தால் அது தவறாகும்!

போலந்தில் நிறுத்தி வைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்புப் கணைகள்(என்.எம்.டி.)மற்றும் செக்காயில் நிலைப்படுத்தப்படும் ரேடர்கள் மூலமாக அமெரிக்கா அச்சுறுத்தும் அரசியல் இன்னொரு இரணுவத் தன்மையிலான ஐரோப்பாவையும் இவர்களுக்கு இரையாகும் தொழிலாள வர்க்கத்தையும் உருவாக்கி விடுவதும் இதன் வாயிலாக சுய வளர்ச்சிகள் சிதறடிக்கப்பட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வாழ்வு மதிப்பீடுகளையும் இராணுவ மயமாக்க முனையும் அமெரிக்கா தன்னை எப்போதும் அண்மைக் கிழக்கு நாடுகளின் தலைவனாகவும் அந்த நாடுகளின் எண்ணை வயல்களைத் தனது மேற்பார்வையோடுதாம் கொள்ளையிட்டுத் தான் போடும் பிச்சையை மற்றவர்கள் பெறும்படிதாம் கோரிக் கொள்கிறது.இதை மீறிய எல்லா வகை அரசியல் நகர்வையும் தான் எந்தக் கோலத்திலும் அழித்துவிடும் திறன்மிக்க நாடு என்பதை அமெரிக்கா மேற்குலகத்துக்குச் சொல்வதே இந்த National Missile Defense ஊடாகவேதாம் சாத்தியமாகிறது.சிரியாவின் ஆட்சிமாற்று பின்கதவுப் புரட்சி இங்குதாம் மையங் கொள்கிறது!




இன்றிருக்கும் உலக வர்த்தகப் பொறி முறையில் "மசகு எண்ணையின்றி ஒரு மசிரும் அசையாதென்பதே" உண்மையாகும்இந்த உண்மையானது எப்பவும் எண்ணைக்காக எதையும் இழகத் தயாராகும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியலில் இவர்கள் நடாத்தும் இராணுவச் சகசம் அப்பாவி மக்களையும் அவர்களது பண்பாட்டையும் சாம்பலாக்கும் அளவுக்கு யுத்தம் அவசியமாக முனைப்புறுகிறது.இது விரும்பத் தக்க விளைவில்லையெனினும் இதைவிட வேறு வழி இந்த நாடுகளுக்குத் தெரியவில்லை.இந்தத் தெரிவெல்லைக்குப் பின்னால் மேற்குலக வெள்ளைத் திமிர் மறைந்திருக்கிறது.தாம் எவரும் குடியில்லையென்பதும்,தாமே மற்றவர்களுக்கு எஜமானர்களென்பதும் இந்தத் திமிருக்குள் இழையோடுகிறது.

ஈரானின் அணு ஆயுத முயற்சி,நெடுந்தூர ஏவுகணைகள் என்ற பூச் சுற்றலுக்குப் பின்னால் ஈரானின் உலர்ந்த எண்ணை வயல்களே அமெரிக்காவினதும் மற்றும் மேற்குல நாடுகளினதும் சீனாவினதும் அரசியல்-இராணுவ வாதத்துக்குக் காணமாகின்றென.

2005 ஆம் ஆண்டு Oil and Gas Journal' ன் கணிப்பின்படி ஈரானில் உள்ள எண்ணை இருப்பானது 125.8 பில்லியன்கள் பெறல்களாகும்.இது அமெரிக்காவின் எண்ணை வளத்தைவிட ஐந்து மடங்கு அதிகமானது .இது உலகத்தில் இரண்டாவது பெரிய எண்ணை வளமுமாகும்.இன்றைய நிலையில் இருப்பிலுள்ள இந்த எண்ணையை உறிஞ்சிக் கொள்வது அவசியம்.இல்லையேல் ஈரானின் பாத்திரம் எண்ணைவள நாடுகளின் கூட்டில்;(OPEC -Organisation der erdölexportierenden Länder)இரண்டாவதாகவே தொடர்ந்திருக்கும்.இது அமெரிக்காவுக்கு என்றும் பாதகமானது.சோவியத்துக்குச் சாதகமானதாகவும் சீனவுக்கு நேசமாகவும் இருக்கும்.எனவே, எக் காரணங்கொண்டும் ஈரானை யுத்தத்தால் வென்று அதன் முழு எண்ணை வயல்களையும் அமெரிக்கா கட்டுப் படுத்தியாகவே வேண்டும்.இதுதாம் இன்றைய அமெரிக்க எண்ணை முதலாளிகளின் கனவு.இது பலிக்குமா என்பதை பின்பு பார்ப்போம்.இதற்கு முன் வேறு சில வற்றையும் பார்ப்போம்.

சீனா-இருஷ்யா-ஈரான்:

ஈரானின் அநேகமான எண்ணை இருப்பு நிலப்பரப்புக்குள் கீழேயேதாம் இருக்கிறது.இந்த நிலப்பரப்பில் முக்கியமானது Khuzestan பகுதியாகும்.இது ஈராக்கின் எல்லைக்குப் பக்கத்தில் அமைந்திருப்பதாலும் இங்கே ஈரானின் மிகப் பெரும் எண்ணை ஊற்றுக்களான இரண்டு வயல்கள் இருக்கிறது.ஒன்று:Yadavaran¦ மற்றது:¦Azadegan இப்போது சிந்திப்பவர்களுக்கு அமெரிக்க எண்ணைக் குஞ்சுகளின் இதயத்தின் "படீர் படீர்-யுத்தம்,யுத்தம்-அணுக்குண்டு,அணுக் குண்டு-ஆபத்து ஜனநாயகத்துக்கு" என்ற அடிப்புக்கு-அரிப்புக்கு என்ன காரணமெனப் புரிவது கடினமில்லை!

அன்று , ஐ.நா.வின் பாதுகாப்பு மாநாட்டின் தொடர் இருக்கைக்கு ஈரானிய ஜனதிபதிக்கு மிகவும் சுணக்கியடித்து விசா வழங்கிய அமெரிக்காவின் நரித் தனமானது வீட்டோ உரித்துடைய இருஷ்சிய மற்றும் சீனாவின் ஒத்திசைவான வீட்டோ பயன் படுத்தலைக் கண்டு தடுமாறியதன் விளைவாகவும் மேலும் குழப்பத்தோடு அம்பலத்துகு வந்துள்ளது.என்றபோதும் ,தற்போது குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஈரானுக்கான பொருளாதாரத்தடையை மீளவும் Wien ஒப்பந்தத்துக்குப்( http://www.cicero.de/weltbuehne/atomdeal-mit-iran-eine-hypothek-auf-die-zukunft/59561  )  பின்னும் கோரிக் கொண்டிருப்பினும் இது ஈரானை மெல்லப் பாதிப்புக் குள்ளாக்கினும் அமெரிக்காவின் திட்டமானது ஈராக்கின் எல்லையிலுள்ள ஈரானின் எண்ணையைக் கையகப் படுத்தும் ஒரு அத்துமீறிய யுத்தமே.

இன்றைய ஈரானிய எண்ணை வயல்களில் முக்கியமானYadavaran எண்ணை வயலில் 50 வீதமான பங்கை சீனா கட்டுப்படுத்துகிறது.சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சீனப் பெற்றோலியம அன்ட் கெமிக்கல் கோப்பிரேஷனிடம்;;.(Das staatliche chinesische Erdölunternehmen China Petroleum & Chemical Corporation hält 50% der Aktien des großen Yadavaran-Ölfelds)இந்த ஐம்பது வீதப் பங்கு இருக்கிறது.இது இந்த எண்ணை வயல்மீதான சீனாவின் கழுகுக் கண்ணுக்கு நல்ல உதாரணமாகும்.

இருஷ்சியாவோ 2003 ஆம் ஆண்டளவில் தான் போட்டுக்கொண்ட திட்டத்தின்படி ஈரானின் எண்ணை வளமிக்க தொழிற்சாலைகளுள் மிகப் பெரும் நிதியிட்டுள்ளது.கூடவே தனது சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ஈரானின் மொத்த தேவைக்காக அனுப்பி வைக்கின்றபோது அதேயளவு மசகு எண்ணையை ஈரானிடமிருந்து மீளப் பெறுகிறது.இந்தக் கூட்டு முயற்சியானது வருங்காலத்தில் ஈரானின் மொத்த எண்ணையிருப்பையும் கணிசமானளவு சீனாவும் இருஷ்சியாவும் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் ஈரான் இதை முழுவிருப்போடு செயற்படுத்த விரும்புகிறது.அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த முயற்சியைத் தொடர விரும்பும் ஈரானுக்கு இந்த இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதில் வியப்பில்லை.

ஈரானின் எண்ணை டொலர்கள்:

ஈரான் இதுவரை மிகப் புத்திசாலித்தனமாக அமெரிக்க ஆசாமிகளை கலங்க வைத்தே வருகிறது.அது செய்த இரண்டு காரியம், ஒன்று:தனது பெருந்தொகையான அன்னியச் செலவாணியை குவித்து வைத்திருக்கும் மேற்குலக வங்கிகளிலிருந்து பெரும் பகுதியை மீளத் தனது நாட்டுக்குள் இழுத்துவிட்டது.இது அமெரிக்கப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தையே பாதிக்குமளவுக்குச் சென்றிருக்கிறது.மற்றது ஈரானின் நீண்ட நாட் கனவான எண்ணைப் பங்குச் சந்தையை ஐரோப்பிய எண்ணை நிறுவனங்களின் பங்குச் சந்தையோடு இணைத்து இயங்க வைப்பது.இந்தச் செய்கையால் இதுவரை எண்ணை டொலர்களாக இருந்த பணமாற்று இனிவருங்காலத்தில் ஐரோப்பிய யுரோவுக்கு மாற்றவேண்டிய நிலையை ஓபெக் நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது.இது அமெரிக்காவுக்கு மிகவும் கேடான செய்தி.எனினும் இத்தகைய நடவடிக்கைகளை முதன்மைப் படுத்துவதால் அமெரிக்காவை வீழ்த்தமுடியாது.இதை அமெரிக்கப் பேய்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளத் தக்க மொழிகளில் ஈரானுக்கும் அதன் வர்த்தகத் தொடர்பு நாடுகளுக்குஞ் சொல்வதில் இந்த என்.எம்.டி.ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டமும் தற்போதைய Hydraulic fracturingஅதற்குக் கை கொடுக்கிறது.இதன்முலம் எண்ணை விலையைக் 50 % செயற்கையாய்ச் சரிய வைத்த அமெரிக்கா இயற்கையைச் சூறையாடுவது மட்டுமல்ல சூழலைக் கெடுத்துப் புவிப்பரப்பை நாசமாக்குகிறது!

ஈரானின் இத்திட்டம் வெற்றி பெறுந் தறுவாயில் டொலர் மூலமாகப் பரிமாறப்பட்ட எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு முழுதாக மாறுந் தறுவாயில் டொலரின் சரிவு நிகழ்ந்துவிடும்.இதை அமெரிக்கா மேற் சொன்னபடி தடுத்தாலும்  தொடர்ந்து இதை முறியடிப்பதில் அமெரிக்காவுக்கு ஒரு யுத்தம் ஈரான்மீது தொடுத்தாக வேண்டும்.இதுதாம் அமெரிக்காவின் இது நாள் வரையான யுத்த அளவுகோல்.இதுவன்றி அமெரிக்க மூலதனம் பெருக முடியாது.அதன் முரண்பாடுகளை அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.எனவே, அமெரிக்க மூலதனத்தின் இருப்பு அமெரிக்காவின் அத்து மீறிய யுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது!

எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு மாறுந் தறுவாயில் பயன் பெறும் முதலாளிகள் நிச்சியம் ஐரோப்பிய முதலாளிகளே!சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமே இது பாரிய பின்னடைவை வழங்கும் .இதுவரை டொலரில் பரிமாற்று நிகந்த வரை தமது மூலதனத்தின் மூலம் உபரிகளை தேடிக் கொண்ட இவர்கள் இனிமேல் யுரோவுக்கும் டொலருக்குமான சம நிலையற்ற போக்கால் பாரிய துண்டு விழும் நிலைக்குள் தமது மூலதனத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் சீனா மதில் மேல் பூனையாக இருந்து கொள்ள முனையும்போது ஜப்பான் அமெரிக்காவுக்கு வக்காலத்து வேண்டும்.அது அமெரிக்காவோடிணைந்து ஈரான்மீது தாக்குதல் தொடுக்கும்.இங்கே ஐரோப்பிய நாடுகளின் தலைமை நாடான ஜேர்மனி அமெரிக்கப் படுகொலை யுத்தத்தை எப்படியும் ஒரங்கட்டும் அரசியலை நகர்த்த முனையும்போது அதை உடைப்பதற்காகவே போலந்தோடு ஏவுகணைக் கூட்டை அமெரிக்கா செய்கிறது.கூடவே ,ஜேர்மனியையும் இருசியாவையும் தொடர்ந்து முரண்பாட்டுக்குள் சிக்க வைத்துப் போருக்குத் தயார்படுத்துகிறது.இதற்காக அமெரிக்க உளவு நிறுவனம் ஜேர்மனியின் அளைத்துப் பெரு ஊடகங்களையும் நிதிகொடுத்துக் கைப்பற்றியுள்ளது!;இந்தவூடகங்கள்தாம் யுத்த முனைப்பூட்டி ஜேர்மனியர்களை இருசியாவோடு நடக்கும் யுத்தத்துக்கு ஒத்துழைக்கத் தயார்ப்படுத்துகிறது!

உலகில் பேற்றியர் லோஞ்சர் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.இது அமெரிக்காவின் அற்புதமான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்.அமெரிக்கா தன் நேச நாடுகள் இரண்டிற்கு மட்டுமே அந்த ஆயுதத்தை வழங்கியது.அந்த நேச நாடுகள் இஸ்ரேலும் ஜேர்மனியுமாகும்.இப்போது ஜேர்மனிக்கு எச்சரிக்கும்படி போலந்தை வளைத்துப் பிடிக்கும் அரசியலை அமெரிக்கா முன்னெடுப்பதால் ஜேர்மனி கையைப் பிசைந்தபடி "நேட்டோ,நேட்டோ"என்று அலம்புகிறது.இங்கே வெடித்திருக்கும் இந்தப் பனிப்போரானது எண்ணையை முதன்மைப் படுத்திய அதுவும் ஈரானிய எண்ணையிருப்பைக் கொள்ளையிடுவதோடு சம்பந்தப்பட்ட மாதிரித் தெரிந்தாலும் அதற்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.அதுதாம் 3 வது உலக மகா யுத்தத்தை வெவ்வேறுபாணியில் -முகத்தோடு தொடர்ந்து நடாத்தியபடி அதை இருசியாவை -மேற்குலகை  யுத்தத்துக்குள் சிக்க வைத்து முடித்துவிட்டுப் பேரரசாக மாறிவரும் சீனாவைத் தனது காலடிக்குள் வீழ்த்துவது; இங்கே, உக்கிரைன் இத்திட்டத்தின் மையமாகும்.

இறுதியாச் சில :

நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் - இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது)பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு-இயக்கத்துக்கு;அதன் வீரியத்துக்குட்பட்ட வுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம்பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம். இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு "தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம்; சுயாண்மை; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் "என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.

இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் "என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.
உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த "அகதி"ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.ஜேர்மனியில் நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு மற்றும் மரபணமாற்றப் பயிர்களுக்காக புதிய தேடல்கனளுக்காவும் இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : "நாம்  இருஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் இருஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்" (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! - EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?
பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு "கொபற்ற  கொல்லையிற் குப்பை"  கொட்டுவதில் "டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்" எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

உசாத்துணைகள் :
Attac-Mailingliste
die tageszeitung 19.03.2007
Konkret 2.2007
Krieg und Frieden von Willi Dickhut.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.12.2015

Thursday, September 10, 2015

எது பயங்கரவாதம்?

அதிகாரம் என்பது வியூகமாகுமா?

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை  அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும்  நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.


ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில். அதிகாரத்தைக் குறித்துச் சர்வதேச அளவில் பேசும்போது,அது நீண்டவொரு கருத்தாளுகையைக்கொண்டவொரு தளத்துக்கு நம்மை நகர்த்திச் செல்வதாகும்.இன்று,நாம் மூன்றாவது உலக மகா யுத்தத்தின் அழிவைச் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்க-ஐரோப்பிய அதிகாரத்தின் மையவலு அழிப்பு யுத்தத்தின் வெற்றிவரை அவர்களை அழைத்துச் செல்வதை ஈராக்-அவ்கான்-லிபிய மற்றும் சிரியா -உக்கிரைன் யுத்தங்கள்வரை உணர்ந்துகொண்டோம்.இந்த அதிகாரமானது முழுக்கமுழுக்கப் பொருளாதரத்தைச் சுற்றிய இலாபவேட்கை-தொடர் மூலவளக் கொள்ளையென அதன் அத்துமீறிய தளங்களிலான ஆதிக்கமானது வளர்ந்த தொழில்நுட்பப் போரர் தளவாடங்களின் வருகையோடு உலக மக்களைக் கணிசமாகக் கொன்று நிலைப்படுத்தி ,விரிவாக்கப்படுகிற இன்றைய தருணத்தில்தாம் உலகத்துள் 60 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உலகெங்கும் அலைகிறோம்.

இத்தகக் கேடுகெட்ட பாசிச ஆதிக்கவாதிகளது தேவைகள் என்னத்தைத்தாம் நடக்கு விட்டு வைக்கும்?


,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert"  [ எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் ] -அமெரிக்காவில் இருந்து ,1918 இல் பிரஞ்சுப் பிரதமர் Clemenceau   ஒரு உரையாற்றலில் கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.


எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத் தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம் தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக [ "Oil is much too important a commodity to be left in the hands of the Arabs." --Henry Kissinger ] பேய்போல் அலைந்து  துரகிழக்கு - அண்மைக் கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது;இன்றும் ஈராக் , அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று நேட்டோ பயங்கரவாதக் கூட்டணியூடாகப் பாசிசப் போரை அப்பாவி மக்கள்மீது  அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கட்டவிழ்த்து விடுகிறது.



இஃது சமகால -நிகழ்கால வரலாற்றைக் கடந்து , நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினத்தும் வாழ்வாக நம் முன் அச்சத்தைத் தருகிறது..



11 செப்ரெம்பருக்குப் பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள்  உலகரங்குக்கு வந்தன..அமெரிக்க| ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.இவர்கள் ஈராக், அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று பல் தேசங்களை அழித்தபடி இருசியாவோடு அணுயுத்தம் நடாத்தக் கருத்துக் கட்டுவதில் தமது அனைத்து வளங்களையுமின்று பயன்படுத்துகின்றனர். இதுவே தற்போதைய நிகழ்ச்சி நிரலாகவுங் கூட இருக்கின்றது.



'இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்[ The War on Terror and  "Global War on Terrorism" ]!, இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.' ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற் தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம் அதன் நேட்டோக் கூட்டணிப் பயங்கரவாத அரசுகளிடம் இருக்க, நமது அப்பாவிகளோ முளைத்து மூன்றிலை விடுவதற்குள் அமெரிக்காவுக்கான அடியாளாகப் போவதில் நாட்டமாகின்றனர்.இந்த அமெரிக்காவனது உலகத்துள் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தித்தித் தனது காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து நியாயப் படுத்திவிடுகிறது.இதற்காக எவரையும் - எந்தக் குஞ்சு குருமானையும் அது தனக்கேற்பத் தயார் செய்து ஒவ்வொரு துறைகளுக்குள் தொடாந்து நுழைத்து விடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள 13 வயதுத் தமிழ்ச் சிறுவனின் பெயரில் வந்த இந்த நாவலும் ( Flug-747) தற்போது சாட்சி!

" Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten."" Flug-747 By Sagithjan Surendra

" Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! " - Flug-747

" Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal." - Flug-747


உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!

இன்றைக்கு அமெரிக்க அரசை முதலாவது "அதிவல்லரசு" என்றால் இரண்டாவது அதிவல்லரசு இருசியவோ அன்றிச் சீனாவோ அல்ல என்கின்றார் சுவிச்சர்லாந்து வரலாற்றுப் பேராசிரியர் டானியல் கன்செர் ( Prof.Dr. Daniele Ganser).மாறாகப் பொது அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்தி உருவாக்குபவர்களே இராண்டாவது பெரிய வல்லாதிக்கம் என்பது அவரது கருத்து.இது சரியானது.மார்க்சு கருத்தியற் போராட்டங் குறித்து மிக விரிவாகவும் அதன் பலத்தையும் நமக்குச் சரியாகவே சொல்லிச் சென்றதால் இது ஆச்சரியமில்லை!


இந்த அளவுகோலுக்குட்பட்டு அமெரிக்க - ஐரோப்பியர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் இந்த அழகிய "மனிதாபிமானம் "உலக அரங்குக்குள் வரும்.இதுவே அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌன அஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக் கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.ஆனால் Charlie Hebdo மீது தாக்குதல் தொடக்கப்பட்டால் உடனே உலகைக் கூட்டி "Je Suis Charle" எனக் கத்தும் உலகப் பயங்கரவாத நேட்டோ அணியானதுதாம் ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகளைப் பொருளாதாரத் தடையாற் கொன்றழித்தவர்கள்; இப்போது ஈரானிலிருந்து இருசியாவுக்குத் தமது பொருளாதாரத் தடைகள் மூலம் மனிதாபிமானத்தை வகுப்பெடுக்கின்றனர்.


ஆனால்' 11 செப்ரெம்பர் ' என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற் களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த' பதினொன்று' மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.இதைச் செவ்வனவே மேலே சொன்ன நாவல் அருமையாக நகர்த்துகிறது!


அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது குழந்தைகளையே விட்டுவைக்காது அவர்களையும் ;அவர்களது திறமைகளையும் கணக்கிலெடுத்து அமெரிக்கப் புலானாய்வுத் துறை தன் தேவைக் கேற்ப அவர்களையும் தயார்ப்படுத்துகிறது.இந்நிலையில் , உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு.'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எம் மூதோர் கூறியதும் இஃதே!


ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. தனது சுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.இதனாற்றாம் கீழ்வரும் நாவலின் கருத்தை CIA இன் குரல் என்கிறோம்.

(" Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten."" Flug-747 By Sagithjan Surendra)


இது எப்படிச்சாத்தியமாச்சு? ,இந்த 'உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' எனும் அரசியற் கருத்தாக்க உளவியலுக்கும் இந்தத் தமிழ்ச் சிறுவனுக்கும்  என்ன தொடர்பு?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும் செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு?சிரியாவில் தொடர்ந்து நடாத்தப்படும் பயங்கரவாதக் கூட்டணிகளது தாக்குதலுக்கும் உக்கிரைனில் நெறிகட்டும் நேட்டோவின் இராணுவ முஸ்த்தீப்புக்கும் (Military exercise/War game )என்ன தொடர்பு???


'யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல் நலன்களுக்குள்ளும் தேடணும்'


இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதி நவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும். அப்போதுதாம் நமது சிறார்களைக்கூட இந்தப் பாசிசப் பயங்கரவாத அமெரிக்காவிடமிருந்து காக்க முடியும்.


அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக?; இதுவரை சிரியாவில் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்படுவது  எதற்காக.??உலகத்துள் 60 மில்லியன்கள் மக்கள் அகதிகளாப்பட்டு அலைவதும், 13 மில்லியன்கள் குழந்தைகள் ஆரம்பப் பாடசலைக்குச் செல்ல முடியாது துரத்தப்பட்டதும் எதற்காக???

எது பயங்கரவாதம்? அமெரிக்க -ஐரோப்பிய பொருளாதார -ஆதிக்க வன்முறைக்குப் பலியாகப்பட்ட இத்தகைய அரச பயங்கரவாதத்தை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒரு சதாம்--பின்லாடன் மற்றும் The Islamic State வகையறாக்கள் தேவைப்படுகின்றது.


வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்--நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும் ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பிய அமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான, மானுடவிரோத யுத்தத்தை, பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை'யுத்த அளவுகோல்' என்று விவாதிக்கிறார்கள். இது பயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர்கள்) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்த அளவுகோல்|சமன்:யுத்தநெறி. அதையே மற்றய  இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.

" Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! " - Flug-747

(...)

ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.


வரலாறு நெடுக மூலதனமானது  தன் கரங்களை குருதியில் நனைத்தபடியே...இன்று சிரியாவில் ; உக்கிரைனில்  புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.


மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.

அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக்கள்  நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ் அணுயுத்தங்களுக்கு 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் ( " Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal." - Flug-747
 ) வலுவாக்கப்பட்டுள்ளது.


இது சாரம்ஸமான 'ஜனநாயகம்' என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான 'ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்'எனும் கருத்தாக்கம் இப்போது 'பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்' என்பதில் போய்முடிந்துள்ளது.


இதன்படி பார்ப்போமானால் இன்று நடைபெறும் அனைத்து யுத்தங்களும் வர்க்க ஒடுக்குமறையாக விரிந்து உலகு தழுவி உழைப்போரை ஒடுக்குதலே!

ஆக , நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:


இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா  - உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா,  ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான மீள்-பனிப் போரும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம் மூலதனப் பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும் கொய்தெறிவதே.

இந்த யுத்தங்களின் விருத்தி 'பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு' என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!


ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக் குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும் பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்|எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக் கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை 'பயங்கரவாதிகளின் கூட்டு'வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன.


இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விச வடிவிலான அராஜகக் கூட்டுணர்வு.



ப.வி.ஸ்ரீரங்கன்

Thursday, January 08, 2015

நாளை மகிந்தாவுக்கும் ,மைத்திரிக்கும் ஓட்டுப் போடுவோம்!


ன்றுவரை சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக்கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது.தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் மகிந்தாவை ஆதரித்தும் ,மைத்திரிபால சிறீசேனாவை ஆதரித்தும் தமிழ்த் தலைமைகள் செய்யும் பெருந்துரோகம் தமிழ் மக்களுக்கானவொரு அரசியல் வெளியை இல்லாமற் செய்ததே!அடையாள அரசியலை மறுத்த  தெரிவில் தமிழ்மக்கள் தமது அரசியலைத் தீர்மானிக்கவே முடியாதபடி நம்மை அரசியல் அநாதைகளாக்கிவிட்டு, நாளை நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரியின் பின்னால் நம்மை அழைத்துச் செல்லும் நரித்தனமானது, மேற்குலக நலன்கட்கமைய கணிசமானமுறையில் வியூகத்தைச்செய்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!

இதைவிட தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப்புரட்சிகரச் சக்திகள் சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும், அதன்அரசியல்ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்பு களோடிணைத்துள்ளனர். இவர்களது அன்றைய அரசியல் தெரிவானது நாளை 08.01.2015 அன்று,  நடைபெறும்இலங்கை அதிபர்த் தேர்தலுக்கான தெரிவுகளை இலக்காகக் கொண்டிருந்ததென்பதை நாம் இப்போதாவது உணர்கிறோமா?






தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே அன்றி முதலாளித்துவச் சட்டவாத அல்லது நல்லாட்சி-ஜனநாயக மறுப்பு முரண்பாடல்ல!


சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் அது சார்ந்த அடையாள அரசியல்  வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணைபோபவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் தமித் தேசியச் கூட்டமைப்பு மைத்திரியை அல்லது மகிந்தாவை ஆதரிப்பதென்ற "அரசியல்" நகர்வில் மேற்குலச் சதியின் இலங்கை முகவர் மைத்திரியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.இவர்கள் இப்போது தமிழ் மக்கள்சார் அரசியற் கோரிக்கை அனைத்தையும் கைவிட்டு ஜனநாயகம்,நல்லாட்சி,சட்டத்துக்குட்பட்ட அரசு என்று தமிழ் மக்களது தலைவிதியை அதே புலிப்பாணியில் முட்டுச் சந்தியில் நிறுத்தியிருப்பது தற் செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்ட மேற்குலக வியூகமாகும்.


தமிழ் மக்கள்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமர்த்தனமான" இனவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த அடையாளமும் - வெகுஜன அரசியலும் தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.இதை மையப்படுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களது வாக்குரிமையைத் தமிழ் அரசியலது அடையாள எதிர்ப்பாக்க மறுக்கும் மேற்குலக லொபி அரசியலது தெரிவே நமது சாபக் கேடாகிறது.அதை(அடையாள அரசியல்) மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து, அவர்களது அடியாளகவே இந்தத் "தமிழ்த் தலைவர்களது" "வகை மாதிரி" அரசியல் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.இதைத் தயார்ப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அந்நியத் தேசத்து இராஜதந்திரிகளாகவே இருக்கும்போது நாம் ஏலவே அந்நிய நலன்களுக்காகக் குருதி சிந்திய வரலாற்றின் இன்னொரு "மாதிரி துரோக அரசியலை" இப்போது காண்கிறோம்.இதுவே நமக்கு இனிவரும் காலுத்துள் மிகப் பெரும் ஆபத்தாக மாறப்போகிறது.


ஸ்ரீரங்கன்
07.01.2015

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...