Skip to main content

Posts

Showing posts from March, 2020

மதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம்

மதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம் மதமாற்றம் எனும் பெயரிலான வியூகம் -சில குறிப்புகள்! - ப.வி.ஶ்ரீரங்கன்     ஈழத்துக்குச் சமீபகாலமாக வந்த பிரத்தியேகக் கிறித்துவ மதப்பிரிவுகள் -பைபிள் பயங்கரவாதம் ( "Religiösen Sondergemeinschaften" ) எம் பண்பாட்டு - சமூகவுணர்வு ;தேசியவுணர்வு;சனநாயகவுணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு உள்ளிட்ட புலன்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகமிகப் பெரியது. இந்த அபாயகரமான பண்பாடுச் சிதைப்பு - உளவியல் தாக்கம் மிக மோசமான விளைவுகளை மக்கள் சமுதாயத்துள் ஏற்படுத்தப் போகிறது,எனலாம்!இந்த மோசமான பைபிள்சார்ந்த வன்முறை நமது வரலாறு நிலைப்பட்ட மரபுப் பண்பாட்டை கொன்றுபோட்ட விளைவுகளையும் ; தாக்கங்களையும் மிகக் கவனமாகவும் ;நுட்பமாகவும் விளங்க முற்படுதலே இக் கட்டுரையின் நோக்கம். இதை மனதிலிருத்தி தொடருங்கள். ஈழமக்களது வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும்,ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்...