Skip to main content

Posts

Showing posts from March, 2008

தடா பொடா தமிழச்சி தமிழ்மணம்.

"தமிழ்மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்" வலைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் தமிழ் மணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்?.இ·து,தற்செயல் நிகழ்வல்லவென்று நாம் உணரத்தக்கபடி தமிழச்சிதம் தனிநபர்சார் காழ்ப்புணர்வு இயங்கி வருகிறது.இது,அவரது செயற்பாட்டிற்கு ஒருபோதும் அழகல்ல.சமூகச் சீர்திருத்தம் என்பதை அவர் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்த"அழகு"இங்கே முன் வைக்கப்படுகிறது!தொடர்ந்து பெயரிலியைத் தாக்கி விசனிப்பதன் வெளி "சகவோடிகளால்"நிறுவப்படும்போது-அங்கே,தமிழச்சிமீதான சுய செயற்பாடு அடிபட்டு,முன்னைய எதிர்பார்ப்பு எவரெவருக்காகவோ நிறைவேற்றப்படுகிறது.இதை இனம் காண மறுக்கும் தமிழச்சி தொடர்ந்து தனிநபர் தாக்குதலக்கு "இலக்கு"வைத்த பதிவுகளையே-பின்னூட்டங்களையே எழுதுகிறார். நாம், புரிதலில் நீண்ட பயணத்தைத் தொடரவேண்டும்.எமக்குப் புரியாதவைகளைச் சிறுவர்கள் ம...

அல்லகண்டம் தொலையா இலங்கை

பேரப்பூச்சி. ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும் அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும் ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து நெடுக அழிந்தது பேரப்பூச்சி அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள் அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில் அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள் அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும் அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு இதயம் சிதைத்துக் கொன்றது அவளை கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும் அப்பனின் அசையாத பொழுதுகள் அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற முகம் தொலைத்தான் முந்தைய வினையில் மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு அன்னை மண்ணின் அபலைக் கோலம் ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற அவள் இதயத்தின் துடிப்பாய் அடி மனதெங்கும் குடிதுவங்க வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை! பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில் ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி மெல்லச் சிதறியது அல்லகண்டம் தொலையா இலங்கை இழவோலை வரையும் ஈழம் அவகடமுடையச் சிங்களச் சினம் அழிகடை எல்லாம்! என்ன நம் இழுதை! ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும் எண...

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்? இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகா...

இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்

இன்னொரு கொசோவா உருவாகிறது! இன்றைய தினம்வரை திபேத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்,கொலைகள்,கைதுகள் குறித்துரைக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாகவே இருக்கிறது.உலகத்தின் பெரும் பகுதிகளிலும் சீனத் தூதுவரலாயங்கள்முன் அணி திரண்டுவரும் திபேத்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பின்னே உலக மூலதனவாதிகள் மறைந்திருந்து சீனாவுக்கு அம்பு விடுகிறார்கள்.இதற்கு அகிம்சை-காந்திக் குறியீடுகள்வேற துணையாகின்றன.அன்றுஞ்சரி இன்றுஞ்சரி காந்தியைச் சரிவரப் புரிந்தவர்கள் ஐரோப்பியர்களே! இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்-ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை வகிப்பவர் தலாய் இலாமா என்பது எல்லோராலும் கூறப்படும் ஒரு மாதிரிப் பதில்கள்தாம்.எனினும்,இன்றைய பிக்குகளின் ஆர்ப்பாட்டத்திலும்,அதன்வாயிலான அரச படைகளின் எதிர்த் தாக்குதல்களாலும் சிலர் இறந்துள்ளார்கள்.திபெத்துக்கான எக்ஸில் பாராளுமன்றம் இந்தியாவில் கூறுகிறது கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் வரை சீனாவால் கொல்லப்பட்டதாக,மேற்குலகம் சீனாவுடன் இன்னொரு அடுக்கு மொழியையும் கூடவே இணைக்கிறது,அது கொம்ய+னிசச்சீனா என்பதாக இருக்கிறது.சீனாவோ உலகத்தில் ஏற்றுமதியில் இரண்டா...

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்... இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் அனைத்துச் சிக்கல்களும்-அது சிந்தனைத் தளமாகட்டும் அல்லது சமூக மாற்றத்துக்கான கருத்தாடல்கள்,வேலைத்திட்டமாகட்டும்-அனைத்தும் தனிநபர் வாதக் கண்ணோட்டத்தோடு தன்முனைப்புக்கொண்டே எதிர்கொள்ளப்படுகிறது.இத்தகையவொரு சூழலில் முன்தள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் இன்னுஞ் சொல்லப்போனால் செயலூக்க முனைப்புகள் யாவும் ஏதோவொரு தனிநபருடைய அறிவுப்பயனாகக் கட்டியமைக்கப்படுவதே நமக்குள் நிலவும் அபத்தம்.இத்தகைய பார்வையின் தொடர்ச்சியான சமூக வறட்சி தனிநபர்களை உச்சியில் தூக்கி வை...