Skip to main content

Posts

Showing posts from June, 2005

பெடியன்களை நோக்கி...

முனியன்,உம்மாண்டி,புதியோன்:பெடியன்களை நோக்கி... இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாகவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட 'மாதிரி பரப்புரைகள்'மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும். எனவே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அதன் வாயிலாகவொரு நீண்ட வலுவுள்ள சிந்தனைக்கான தோற்றுவாயைத் திறப்பதும் சமுதாய வளர்ச...

அநாமதேயங்களும்,அறிவிலித்தனங்களும்...

அநாமதேயங்களும்,அறிவிலித்தனங்களும்... வலைப் பதிவர்கள்-வாசகர்கள் மத்தியில் இன்றிடம்பெறும் அநாமதேய மிரட்டல்,எச்சரிக்கை-அதுசார்ந்த கருத்தாடல்,அநாவசியப் பின்னூட்டங்கள்,திரு.டோண்டு அவர்களை விடாது பின்தொடரும் அநாமதேயமென நாறடிக்கும் இந்த இழி நிலைமையைப் பற்றி நாம் வாழாதிருக்கமுடியாது.கருத்துக்களின்பாலான அரைவேக்காட்டுத்தனமானது ஒருவரையொருவர் மறைந்து தாக்கும் மர்ம மனிதர்களாக-முகமூடிபோட்டுத்தாக்கும் அநாமதேயங்கள் சொந்த முகவரியோடு-முகத்தோடு வரும் தோழர் இரயாகரனைத் தாக்குவது மிகமோசமான வரட்டுத்தனமாகும்.இதை வன்மையாகக் கண்டிக்கும் நாம் ஆரோக்கியமான கருத்துக்களோடு முகமூடி கழட்டி வரும்படி அனைவரையும் அழைக்கின்றோம். இந்த நோக்குநிலையற்ற அநாமதேயங்கள் தமது வக்கரப்புத்திக்கான துணையாக வலைப்பதிவுகளை நாறடித்து வருவது மிக மிகக் கேவலமானது.அதுவும் மாற்றார் பெயர்களில் பின்னூட்டமிடுவது இன்னும் அநாகரீகச் செயற்பாடாகும்.கணினி அறிவை இப்படிக் கேவலமாக செயற்படுத்தும் இவர்கள்,இந்த அறிவில் பின் தங்கியிருக்கும் என்னைப்போன்றவர்களுக்குப் பயனடையும் வகையில் கட்டுரைகள்-செய்முறைகள் போன்றவற்றையெழுதி வலைபதிந்தாலாவது பிரயோசனப்படும்.இது ஆரோக...

வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்!

வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்! இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.இதயவீணை வானொலியும் தன்பங்குக்கு கொழும்பிலிருந்து நம்மை வந்து தாக்குகிறது. இந்த நிலையில் வலைப்பதிவுகளிலும் பெடியன்கள்வேறு தம்மையுமொரு இயக்கத்தின் பிரதிநிதிகளாகப் பிரகடனஞ் செய்கின்றனர்.இதுகள்(தமிழர் போராட்டம்,அடிப்படையுரிமைகள்,இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறல்) இவர்களுக்கொரு முசுப்பாத்தியாகப்போன விடையமாகிப்போய்விட்டது. இப்போது அனைவரும் போராட்ட வாழ்வையும்,மக்களின் இரண்டும்கெட்டான் சமூகசீவியத்தையும் வெறும் கே...