Skip to main content

Posts

Showing posts from June, 2010

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்

கட்டுரைத்தொடர் (2): புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!" குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்: த ற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்"தமிழீழப் போராட்டம்"குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது. புலம்பெயர் தமிழர்கள் தமது அடையாளங்களை இதுவரை புலிவழிப் போருக்குள் இனங்காண முனைந்தபோது,புலிகளால் கட்டியமைக்கப்பட்ட போலிக் கோசமான தமிழீழம் அவர்களை வலுவாகப் புலிகளோடும்"தமிழீழ"த்தோடும் பிணைத்துக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும்.இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் யுத்தம்-கொலை அரசியலிலிருந்து தப்பவே முயன்றுகொண்டனர்.இதுள்,அந்நியத் தேசங்களது அகதிகளுக்கான நெருக்குவாரங்கள் சந்தர்ப்ப வாதமாகத் "தேசம்-தேசியம்" எனும் கருத்து நிலைகளுக்கு முக்...

தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்...

புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!" கட்டுரைத்தொடர்: (1) தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்: இ லங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சியானது பெரும்பாலும் ஒரு பெரும் வரலாற்று அழிவை இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் ஏற்படுத்தி மேலும் தகவமைக்கும் அரசியல் நெருக்கடிகள், மெல்ல உயர்த்தும் முரண்பாடுகள் , இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் குரோதத்தை வளர்த்து இரத்தங்குடிக்கக் காத்திருக்கிறது.இதை ஊக்குவிக்கப் பல தளங்களில் உசாராகும் அந்நிய நலன்கள், இலங்கை மக்களது ஜனநாயக விழுமியங்களைக் காலிற்போட்டுமிதிக்கும் சர்வதேசச் சதிகளை இனங்களுக்குள் இருக்கும் கட்சிகள்-குழுக்களைப் பயன்படுத்திச் செல்லும் அரசியல் திசைவழியானது புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு வகையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அஃது, இது காலவரையான அனைத்து அரசியல் நடாத்தைகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் முன்னெடுத்த பெரும்பகுதி ஆதரவுக்கான புலிகளது அரசியல் கூச்சல்"தமிழீழத்தை"க் கனவுக்குட்படுத்தியபோது,அதை நோக்கிய எதிர்பார்ப்பு பொருட் செலவில் மையங்கொண்டிருக்க இப்போது, அதன் தொடர் நிகழ்வுகள் ...

கட்சிகட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

"கட்சி" கட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம். ம க்களின் எதிரிகள் யார்,நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கு நாம் நமது கடந்தகால இயக்கங்களது தோற்றுவாயையும்,அவ்வியக்கங்களது போராட்ட செல் நெறியையும் பகுத்தாரயவேண்டும். அவர்களது அந்நியவுறவுகள் மற்றும் அவர்களது,அரசியல் பாதையும் அவசியமான இருவுண்மைகளை நமக்குள் இன்னும் பகர்பவை. ஒன்று:இன்றும் அந்நியச் சேவைக்காக விலைபோகின்றவர்கள் கடந்தகால இயக்க எச்சங்கள். இரண்டு:அதை அடைவதற்காக ப்"புரட்சி-விடுதலை"பேசி மக்களைக் இனியும் கொல்வார்கள். - என்பதே அவ்விருவுண்மையும்! இலங்கையையும்,அந்தத் தேசத்து மக்களையும் அடிமைப்படுத்தித் தமது புவிகோள அரசியலை முன்னெடுக்க விரும்பும் ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி , ஒடுக்கப்படும்இலங்கை மக்களைக் காவு கொள்கிறது.இங்கே,புலம் பெயர்ந்து, நாம் வாழும் மேற்குலகத் தேசங்களில், யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது? சமூகத்தின் பெரும்பகுதி மக்களது விடுதலையில் தங்கி இயங்...