Skip to main content

Posts

Showing posts from December, 2015

அணுப் போர் அபாயமும்;மூன்றாவது உலக மகா யுத்தத்தை அண்மித்தலும்!

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 . கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன். முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது. இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்"மகாத்துமா"என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது. இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. "உண்மையான அமெரிக்கன் எப்படி இருப்பானென்றால்,அவன் ஜனாதிபதி வில்சனைப் போல் இருப்பான்".என்று சாதாரண அமெரிக்கச் சிப்பாய் சொல்லுமொரு காலம் அமெரிக்காவில் தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.கரிபியன் தீவ...