சதுரங்கத்தில் ஆனந்து (Viswanathan Anand )மீண்டும் வல்லவன் ஆனார். இம்முறை சதுரங்கச் சாம்பியனுக்கான போட்டி 74 ஆண்டுகளுக்குப் பின்பு ஜேர்மனியப் பழைய தலைநகர் பொன்ணில்(Bonn )ஆரம்பமாகியது.பழமைவாய்ந்த கலைக் கோட்டத்தில் நடந்த இந்தப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்டது.ஆறு வயதிலிருந்து சதுரங்கத்தில் தேர்சியுற்ற சென்னை ஆனந்தை எதிர்த்தவர் இருஷ்சியச் சதுரங்க ஆட்டக்காரர் திரு.விலாடிமியர் கிராம்னிக்(Wladimir Kramnik).மிக இளைஞர்.உலகத்தில் தலைசிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்று நம்பப்பட்டவர். இவோராடான போட்டியில் ஆனந்து தோற்றுவிடுவார் என்றே மேற்குலகச் சதுரங்க ஆட்டக்காரர்கள்(Helmut Pfleger,Topalow)ஆரூடம் கூறினார்கள்.நேற்று வரையும் கிராம்னிக் ஆட்டத்தை மாற்றி 12வது ஆட்டத்தில் வெற்றியீட்டுவாரென்றே மதிப்பிட்டார்கள். எனினும்,கடினமான ஆட்டங்களையெல்லாம் மிகச் சாதுரியமாகச் சரிசெய்து ஆனந்து வெற்றியீட்டியுள்ளார்(6,5:4,5). ஒரு தமிழர்.ஆனந்துவின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதென்று சொல்வதைவிட இந்திய மக்கட்கூட்டங்கள் குறித்த மேற்குலகச் சகதி மனதுக்கு மீண்டுமொரு அடியைப் போட்டிருக்கிறார் ஆனந்து. ஆனந்த...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்