Skip to main content

Posts

Showing posts from October, 2005

'ம்'-நாவல் விமர்சனம்!

சோபா சக்தி: 'ம்' அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்! '............', ம்.... ஆமா,ஓம்-ஓம்! ம்..... இது? (1) கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்!இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல்'ம்'சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு ம...

சுதந்திரம்!

சுதந்திரம்! மெல்லிய கூர்வாள் கொடு நெஞ்சில் தைக்க மெல்லவரும்பும் குருதி கண்ணிமையெங்கும் தெறித்தொதுங்க மெல்லச் சிரிக்கும் மனமும் உணர்வும் எனக்கில்லை! எதிரியையும் வாழவிடு இந்த மண்ணில்! அவன்(ள்) தன் சுயத்தை மதிப்பீடு செய்வதற்கொரு வாய்ப்பை இல்லாதொழிக்க நீ யார்? கொஞ்சும் மழலையையும் கோலாச்சும் உன் நெட்டூரம் குடல் தெறிக்கச் சிதறடிக்கிறது. எதற்காக? எதிரியின் குழந்தையென்றா, பிறப்பினுள் பெயர்த்து வைத்த உயிரினிளுறைந்த இயக்கம் விரிந்து நின்றது? அந்தவொரு புள்ளியில் மட்டும் எவரும் தமது விறைத்த மூளையை உரசக் காணோம் பின்னைய பொழுதொன்றில் பேசிக் கொள்ளப்போகும்'பெரிசுகளின்'உலர்ந்த உதடுகள் ஐயோ,ஆண்டவனே! என்பதாகமட்டுமிருக்கா! குறிதவறிய கோணங்கள் குதறிய புணத்தின் விறைத்த நெற்றியில் விடுதலைப் பிரசுரம் ஒட்டிக்கொள்ளும் நெஞ்சாங்கட்டைக்கு நொடுந் தொலைவில் கிடக்கும் ஒரு கழித்தெறிந்த காகிதத்தை தேடிச்செல்லும் சில கூட்டம்! எடுப்பதற்கு யாருமற்ற பொழுதில் அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும்,மாவும் தின்னக் கொடுத்து வைக்காத மக்களைக் கனவு காண்கிறது தீவுக்குள்ளே. உயர்ந்த பாதுகாப்பு வலையங்களாகவும்,முட்கம்பிச் சிறைகளாகவும் த...

புரியுமா உனக்கு?

புரியுமா உனக்கு? வடக்குமறியாய் கிழக்கும் அறியாய் இருந்தும் நீயோ எனைப்பார்த்து 'தமிழர்களின் குருதியைக் குடிக்கப் போ!'என்கிறாய். நான் எதற்காம்? அதுதாம்,நீயும் உனைச் சேர்ந்தவர்களும் போதுமே!... அன்று அல்பிரேட் துரையப்பா,ஆனந்தராஜா இன்று இராசதுரை,சிவகடாட்சம் என்று சன்னங்களால் சதிராடும்... கவனித்திருக்கிறாயா? நீ, நுகத்தில் பூட்டிய எருதாகவே செக்கைச் சுற்றுகிறாய், உன் நுகத்தடி ஒடிப்புக்காய் நாம் சிலுவை சுமப்பதறியாய் புரியுமா உனக்கு? உனது இனத்தின் ஆணிவேர் அறுபட்டுக் கொண்டிருக்கிறது! கல்வியாளர்களைக் கொன்றுவிட்டு துரோகியென்றாய் அன்று, இன்றோ கொன்று குவித்த கல்வியாளர்களின் உடல்களின் மீதிருந்து ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று. அவசரப்படாதே! 'நாம் தமிழரின் குருதியைக் குடிப்பதும், இந்தியக் கைக்கூலியாய் மாறுவதும் இருக்கட்டும்.' நீ, எப்போது கொலைஞர்களின் கைக்கூலியானாய்? சொல், உன் மனம் திறந்து! அறிவைக் கொன்று குவிக்கும் உன் செயல் தீராத வடுவைச் சுமக்கும் உன் மன வெளியில் தேசத்தின் நலனைத் தின்றுகொண்டிருக்கிறாய் என்றறிவாயா? இரணங்களின் மத்தியில் நின்று புணங்களைக் கருவாடாக்கிக்கொள் நாளையுந்தன் க...

காலாற நடத்தலென்பது ...

காலாற நடத்தலென்பது ... கனவுகளோடு காலாற நடத்தலென்பது எனக்கென்றும் விருப்புடையது,அல்லது இன்பமயமானது. இயற்கை அள்ளித் தந்த சுகங்களைச் சுவைப்பதில் எனக்கு அலாதிபிரியம்.அவசரமாக எதையும் செய்வதும்-செய்தபின் கோணலானால் அது குறித்துக் கவலையுறுவது எனக்குக் கிடையாது. எப்படியும் இந்தக் கானல் நீராகவிருக்கும் இந்தத் தேசத்தோடு(ஜேர்மனியோடு) ஒன்றித்தல் கைகூடுவதில்லை.எனினும், என்வரைக்கும்- இந்த அற்புதமான வளர்ச்சியால் நிறைந்த வளங்களைப் பெற்றுவிட்ட தேசத்தை வெறுமனவே வெறுத்தொதுக்குவது மிகவும் கோணல்த்தனமானது.எனவே அப்பப்ப ஆசைகொள்வதும்-வேலைசெய்யும்போது வரும் பிணக்கினால் வெறுப்பதும்,இத்தேசத்தின் பூர்வீகக் குடிகளின் குறிதவறிய கூற்றுக்களால் அடியோடு இவ்மண்ணை மறக்க முனைவதுமாக ,நான் என் தேசத்தில் ஒரு காலும்,இம்மண்ணில் இன்னொரு காலுமாகக் கனவுகளோடு வாழ்கிறேன். இன்று அற்புதமாக நிலா வானத்தில் ஊஞ்சலாடுகிறது. ஒளித்தெறிப்பு அற்புதமாய் மனதில் மிளிர்ச்சியை மிகுதியாக்கியபடி. வூப்பெற்றால் மலைகளின் ஒரு பகுதி எனது இருப்பிடத்தில் கரையொதுங்கி கவனிப்பாரற்று விரிகிறது.நிலவினது ஒளித்தரிசனம் அற்புதமாக உரசப்படும் மலைகளின் சரிவுகள் மங்கையின...

கொரில்லா: நாவல்

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா: நாவல்எழுதியவர்: ஷோபா சக்தி) 'தொட்டிலுக்குள் போட்ட குழவி தொலைந்துவிடும் ஒரு நொடியில் தோள் கொடுக்கப் போனதாக சேதி வரும் மாலைதனில் மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய் மனது மடி கடித்த நினைவுகளும் மங்கலாக வந்து போகும் வார்த்தையின்றிச் சோர்ந்து விடும் வந்து போகும் உணர்வுகளும் வானுயர்ந்த நோக்குக்காகவா வாழ்விழந்தோம் இன்று வரை?' இன்று வரை கேட்கப்படும் கேள்வியிது. ஈராயிரம் ஆண்டுகளாய் தாழ்தப்பட்டு 'தாழ்ந்தவர்கள்'என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வுமீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை-சேறடிப்புகளை,கள்ளப்பட்டங்களை-தீண்டாமையை சுமத்திய 'மேல் சாதிய சைவ வேளாள அரசியலை' இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞானபூர்வமாகக் கைகூடிவரவில்லை.அத்தகையவொரு நிலமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும்,அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதையெமக்குத் திட்டமிட்டே சுமத்தியது! இந்த நிலம...

எனது தேசத்தை நோக்கி...

எனது தேசத்தை நோக்கி... >>>>>ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தடை விதித்திருப்பதை உணர்வுப்பூர்வமாகவோ அல்லது அலட்சியப்படுத்தும் விதமாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்விழந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தபோது அடைக்கலம் கொடுத்தவர்கள் அவர்கள். அதனால் அதனை ஒரு வழிகாட்டும் அறிவுரையாக எடுத்துக்கொண்டு இலங்கை அரசோடு நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். இவரது பதிவுகளில் விவாதம் தொடர்வதற்கான எந்த வழியுமில்லை. அவர் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொண்டே கருத்திட முனைகிறார்.இன்றைய வாழ்சூழலில் தமிழ் மக்களின் வாழ்வு-வளர்ச்சி-எதிர்காலம் குறித்து எதையும், எப்படியும் எழுதலாமென கருத்தாடுவது எனது நோக்கமல்ல.புலிகளைத் தடைசெய்வதற்கும்,அவர்களது தலைவர்கள் ஐரோப்பாவுக்குள் பிரயாணிப்பதைத் தடைசெய்வதற்கும் பாரிய வித்தியாசமுண்டு.இந்தத் தளத்தில் நின்றுகொண்டு விவாதிப்பதும் எனது நோக்கமில்லை. மாறாக வேறொரு தளத்தை நோக்கியது. ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்தற்காக அவர்கள் போடும்,கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்புச் செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடம...