Skip to main content

Posts

Showing posts from December, 2007

திசையெல்லாம் கேளீர்

வா, புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து! குறுவிழி காண் மரணம் கருமனங் கொண்ட இருள் சுருங்கு நட்பறியா இதயம் மூன்றுங் காணிடம் மறைக பூவும் புகையும் பிணைவுறும் நோவும் சாவும் கொண்ட ஈழம் போரிடை கருகும் நெஞ்சும் நிலமும் பாரிடை இனியும் வேண்டாம்! தேரும் திரி வடமும் மோரும் முது கையும் பாலும் பசுவும் மண்ணும் நெல்லுமாக பொலிக ஈழம் செம்பு நீரும் செம் மண்ணும் கோலந் தரும் முற்றமும் பொங்கற் பானையும் திசை பார்த்த சரிவும் நிறைக தமிழர் இல்லம் மைவிழி மகளிர் நீராடி தாவிக் கூத்தாடித் தமிழ்பாட நிலமகள் மதித்து நிமிர வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து குலமுதற் கிழத்தி குடிமுதல் உழவன் மண் வளத் தேட்டம் மலர்ந்த பொழுதாய் வா புத்தாண்டே பாற் சோறு வேகும் தரும் கைகள் வலுக்கும் கொடுங் கோன் மறையும் வான் கொடை வளரும் கண்மாய் நிறையும் மண்வாய் திறந்து மணிமுத்துப் பெருகும் மழலைகள் தவழும் மண் வினைப் பயனால் மண்ணுடையான் தழைக்க நெடுமாரி சூடி குக்கிராமம் கூடிய பொலிவில் சிறக்க தெருவெல்லாம் கூடும் திசையெல்லாம் கேளீர் நமக்கு இனி அழிவு இல்லை வா புத்தாண்டே வயலும் வயிறும் வாழ்த்த! ப.வி.ஸ்ரீரங்கன் 01.01.2008 பின்னிரவு:0,35

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ... ஆவீன மழை பொழிய இல்லம் வீழ.... இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும் என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள் உருண்டன. கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது. ஆவீன மழை பொழிய இல்லம் வீழ... நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள.... இருப்பைக் காக்கத்தான் யாவும். ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய கனவின் உந்துதலால்தாம். நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை. சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல். மனைவி. ஒலி. எதிரொலி! என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது. பிரபஞ்ச இரைச்சல். ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது. ஒலியே அநாதி! சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது. ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ! அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக.... என் அகத்தடியாள் அழுதாள். மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள். அடிமை? இவ் லோகத்தின் அடிமை?? தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது. என் வீரியத்தின் மகுடம் துவண்டு க...

இயற்கையெய்திய சிந்தனைப் பராவின் இறுதி அஞ்சலி...

இயற்கையெய்திய சிந்தனைப் பராவின் இறுதி அஞ்சலி... மனம் பரதவிக்கத் தாங்காத அழுகையில் மண்டபம் அலற அகம் உடைந்து போனது.சிந்தனைப் பரா அவர்களின் மரண இறுதி அஞ்சலி நிகழ்வில் மண்டபம் நிறைந்த அவரது உறவு வட்டத்தோடே இறுதிப் பந்திகொண்டார் பரா அவர்கள்.நெஞ்சை உடைத்தெறியும் துக்கம்.மரணவீட்டில் அவர் துணைக்கு ஆறுதல் சொல்லியபோது மல்லிகா அம்மா விக்கியடி மெளனமானார். மரணம்,கொடியதுதாம்!எனினும்,தவிர்க்க முடியாதது. மண்டபம் நிறைந்தவர்களின் மனங்களிலெல்லாம் மரணத்தின் வலி தெரிந்திருந்தது. பரா அவர்கள் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து ஆயுளை நிறைவு செய்துள்ளார். இது, நேருகின்ற தரணத்தை எதிர்கொள்வது அவசியமே. திரண்ட மக்களின் திறந்த வாய்களில் மரணத்தின் வலியைவிடத் தாம் கொண்ட அரசியலை முன்னிலைப்படுத்தும் ஒரு எண்ணப் பாங்கு இவ்வஞ்சலி நிகழ்வில் விரிந்துமேவியது.ஒரு நிமிடம் பேசுபவர்கள் ஒன்பது நிமிடமென்ன அது தாண்டி, மணிநேரம் உரை சொல்லும் நிலையை அடைந்தனர்.சிலர் மேடைப் பேச்சை உருப்போட்டபடி முஷ்டியை மேல் நோக்கி உயர்த்தி நுனி நாவு ஆங்கிலத்தில் அரசியல் விரிவுரை வைத்தார்கள். ஆனால்,குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த கவலை பரா மாஸ்ரரின் குடும்பத்த...

தனிநாட்டுப் பிரகடனம்(2)

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள் (2) "Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன.இலங்கையில் நிகழும் அரசியல் சித்துவிளையாட்டில் தமிழக-இலங்கைத் தமிழ் பாராளுமன்றச் சகதிகளின் குழிப்பறிப்போ சொல்லி மாளாதது.எனினும், நாம் மேலே செல்வோம். இன்றைய தரணத்தில் தமிழீழ அரசு உருவாகுவதற்கும்,அது தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்லாது அனைத்துச் சிறுபான்மை மக்களுக்குமானவொரு அரசாக அமையுங் காரணத்தில் ஒரு முற்போக்கான தேசிய விடுதலைப் போரை முன்வைத்திருக்க முடியும்.பேரினவாதச் சிங்கள அரசுக்கும் அதன் பாசிசக்கட்டமைப்புக்கும் அந்தக் கட்டமைப்பால் முன்தள்ளப்பட்ட சிங்களவெறி இராணுவத்துக்குமான மாற்றீடாக-முன்னுதாரணமாக ஈழம் மக்களை நேசிக்கும்,உழைக்கும் மக்களைக்கூறுபோடதாவொரு முற்போக்கான நாடாக உருவாதற்கான பெரும் சாத்தியப்பாடுகள் இலங்கையில் இருந்தது.இத்தகையவொரு சாத்தியப்பாடானது உலக அரங்கில் எமக்கான பாரிய அநுதாபத்தையும்,நம் மக்களின் நியாயத்தையும் நிலைப்படுத்தியிருக்கககூடிய சாத்தியப்பாடே அன்றிருந்து.இத்தகைவொரு அரசியல் சாதகமான...

தனிநாட்டுப் பிரகடனம்

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள் திரு.பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது.கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் அது வரலாற்று ரீதியாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறானது துருக்கிய ஒஸ்மானியச் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடர்வதும் நாம் அறிந்த வரலாறுதாம்.முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களும் அதற்குப் பின்பான சோசலிசத்துக்கெதிரான பனிப்போர்கள்-சூழ்ச்சிகளும் கிழக்கைரோப்பாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிகளைத் திட்டுமிட்டுத் தாக்கி அழித்த வரலாறும் இந்த மேற்குலக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குமான தொடர்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த வகையானவொரு அரசியல்,இனவொதுக்கல்-அழிப்புகளுக்கும் நிகராகத் தமிழ் பேசும் மக்களும் (ஒத்ததன்மையோடே) இலங்கையில் முகங்கொடுக்கிறார்கள்.எனினும்,எமது போராட்டத்தைப் பயங்கரவாதமெனச் சொல்வதற்கான அரசியற்காரணங்களுக்கும் இன்றைய கொசோவோ அரசியல் தீர்வுக்கான அரசியில் பரிந்துரைப்புகளுக்குமான மேற்குலக ஆர்வங்கள் வெவ்வேறான திசைவழிகளில் நகரும் தரணத்த...

கிட்லர்!

சின்னக் கனவின் செல்லக்கை கொடுப்பு . தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா! "தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது. "மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?" பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை. இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது. "தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை. "அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான். பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நா...

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி... தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் அந்தக் குறிப்பிட்ட மக்களே இப்போது பலியாகி வருகிறார்கள்.மக்களின் அதீத வாழ்வாதாரத் தேவைகளுக்காக-இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று ஓங்கியொலித்த ஒரு குரல் ஓய்ந்து-பந்திகொள்கிறது!,தோழர் புஷ்பராஜாவுக்குப் பின் புலம் பெயர் சூழலில் இன்னொரு ஆளுமையை நாம் இழக்கிறோம்! மிக அமைதியான மனிதரும்,கருத்தாளுமை மிக்க சிந்தனையாளருமான தோழர், சிந்தனைப் பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 காலமாகியதைத் தோழர் இரயாவின் மூலமாகவே நான் முதலில் தெரிந்து,அறியக்கூடியதாக இருந்தது. எனக்கும் சிந்தனை ஆசிரியருக்குமான தொடர்பு 1989ஆம் வருடமே ஆரம்பமாகிறது.தெரியாதவரைக்கூடத் தெரிந்தவராகக் கருதிப் பழகும் அவரது முதற் சந்திப்பே எனக்குச் சுகமான அநுபவமாக இருந்தது.அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை"ஐயா"என்றே அழைப்பதுண்டு!எனது தந்தையாரைப் பார்ப்பதுபோன்றவொரு உணர்வு அவ்வப்போது எழுவதுண்டு.மல்லிகா அம்மாவையும்,பரா மாஸ்டரையும் 89 ஆம் ஆண்டு அவர்களது (முன்னர் வதிந்த) ஸ்ரூட்கார்ட் வீட...

புலிகளின் தரப்பில் யுத்தமென்பது...

இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும். உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன. பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது.நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது.சிங்கள இனவாத அரசு அதை நோக்கியே நம்மைத் தள்ளி நமது முழு வலுவையும் சிதைப்பதில் உலக உதவியையும் நாடியுள்ளது.இதன் தொடர் நிகழ்வில் நிர்பந்தமாக முன்வைக்கப்படும் பாரிய யுத்த முன்னெடுப்புகள் ...

நமக்குள் மெல்ல ஊடுருவித் தமது உளவுப்படைகளை வைத்து...

என்னயிது?-குறியீடா? நடக்கப் போவதன் முன்னெச்சரிக்கையா? இ ப்போதெல்லாம் மிகக் கடினமானவொரு சூழலில் மாற்றுக் கருத்துடையோரின் வாழ்நிலை இருக்கிறது."கரணம் தப்பினால் மரணம்" எனும் நிலையில் எமது வாழ்சூழல்.எவரெவரோ எத்தனையோ முறைமைகளில் நம்மை எச்சரிக்கிறார்கள். ஜெகோவாவின் சாட்சிகள் நவம்பர் மாதத்துக்கான தமது "காவற் கோபுரத்தையும்,விழித்தெழுவையும்"நம்மைக் கேட்கமாலே நவம்பர் மாதம் தபாற்பெட்டியில் தள்ளிவிட்டார்கள். இன்று,02.12.2007 இன்னொரு வேடிக்கையானதும், அச்சம் தரும் நிகழ்வொன்று நெருங்குகிறது நமை நோக்கி! இரண்டு தமிழர்கள் வீட்டின்முன் வந்து கதவைத் திறக்கும்படியும்,தாம் என்னோடு உரையாடவேண்டுமென்கிறார்கள். நான் வீட்டில் இல்லையென்று கூறப்பட்டு, எங்கிருந்து வருகிறீர்கள் என்பது கேள்வியாகிறது. ஒருவன்: "எசன் நகரத்திலிருந்து வருகிறோமென்கிறான்." மற்றவனோ: "இல்லை நாங்கள் வூப்பெற்றாலில் இருந்தே வருகிறோமென்கிறான்." "எதற்காக வந்தீர்கள்?" "மதம்சார்ந்து உரையாட வந்தோம்!" "நல்லது கதவைத் திறப்பதற்கில்லை.உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை." "கதவைத் திறவ...