இ ந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்: ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ... என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த முறையில் வந்துள்ளது .அவர் எமது கையறு நிலையிலும் சளைக்காது எழுதுகிறார். என்னால் முடியவில்லை! புலிகளின் தலைமையை நயவஞ்சகமாகச் சரணடையவைத்துக் கொன்றவர்கள் நமக்குள்ளேயே மீளவும் சதி அரசியலை முன்னெடுக்கின்றார்கள். இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம்...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்