Skip to main content

Posts

Showing posts from April, 2008

இலங்கையில் யுத்தம்:அறுவடையாகும் இந்திய-உலக நலன்கள்.

"எலிக்கறி உண்பவன் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம் கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!" உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.யுத்தம் தவிர்கப்படவேண்டும்.ஆளும் சிங்கள அரசின் மிலேச்சத்தனமான கொலைகள் நம்மை நடுங்க வைப்பவை.அதுபோலவே இயக்க அரஜகங்களும்.நமது தாயகத்தில் சுதந்திரமான-யுத்தமேயற்ற சூழலில்-அடிமைவிலங்கொடித்த வாழ்வைத் துய்க்க மனம் அவாவுற்றபடியே வாழ்வு நகர்கிறது!எமது மக்களின் அவலமானது வெறும் அரைவேக்காட்டுத் தனமான குறுந் தேசிய வெறியாகவும் அதுவே அரஜகமாகவும் மாறமுடியாது!ஆனால்,இதுவரையான அனைத்து நகர்வுகளும் எமது மக்களுக்கெதிரானதாகவே நடந்து முடிகிறது.எங்கும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வடக்கென்ன கிழக்கென்ன-அனைத்து மக்களும் அராஜ-இயக்கப் பயங்கரவாதத்துக்குள் தமது அடிப்படை உரிமைகளை மெல்ல இழந்து வருகிறார்கள்-குடும்ப ஆட்சிகள் நாட்டின் ஜனநாயகச் சூழலையே இல்லாதாக்கி வருகின்றது!இன்றைய கிழக்கு மாகாண அரசியற் சூழலில் புதிய புதிய அணித்திரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சி...

டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்

குத்தகைக்கு எடுக்கப்படும் யுத்தம் ! தேசத்தின் வடக்குத் தெற்கு இருமுனையிலும் யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம் ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம் இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது "யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில் மறுபுறம், மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்! எவருக்குத் தெரியும் தாய்மையின் பிரசவ வலி? சுருங்கக் கூறிவிடலாம், சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில் சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும் சிலகாலம் உயிர்த்திருக்கும் மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் பூக்கொண்டோட பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி தேசங்கள் தேவ தூததர்களின் தயவில் இரும்புகளைக் காவித் திரிவதில் மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும் எலிக் கறியுண்பவன் தேசம் சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில் அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி இலங்கையின் இறைமையை ஏந்தி பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்...

தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்...

அத்தான்:சின்னக் கனவின் செல்லக்கை கொடுப்பு. "அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இதைச் சொன்ன என்ர ஆசான் இன்று மூச்சை நிறுத்தி விட்டதாக அவனது மகள் சொல்ல நான் உருகிறேன்.அத்தான்-ஆசான்,அறிவிட்டவன்,அடித்தவன்-அணைத்தவன்.அவனது சாக்குக் கட்டிலில் முழு இடத்தையும் நான் எடுத்துத் தூங்கியபோது எனதருகில் ஒண்டியவன்... தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா! "தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது. "மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?" பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை. இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது. "தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொ...

உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு...

தானியங்களைக் குறிவைக்கும் ஊக வணிகம். உலகம், வர்த்தகத்தில் மனித அத்தியாவசியத் தேவைகளையே ஏலமிட்டுக்கொள்கிறது.அது, குறித்து இலக்காக வைத்திருக்கும் அதிமானுடத்தேவையான உணவு "இன்று" புவிப்பரப்பெங்கும் மட்டுபடுத்தப்பட்ட நிலையில், அதன் உற்பத்திப் பொறிமுறை இயங்குகிறது.எங்கும் விலைவாசி-தானியப் பற்றாக்குறை, பண்டமாற்றுக்கான ஊடகத்தின் மிகமிக பற்றாக்குறையான சுற்றோட்டம் உலகத்தில் பலகோடி மானுடரைப் பதம்பார்த்துவருகிறது.எங்கு நோக்கினும் உணவுப் பொருட்களின் விலை வானைத் தொடும் நிலைக்குச் சென்றபடி.ஆப்பிரிக்காவில் மணிக்குப் பல்லாயிரம் உயிர்கள் பட்டுணிக்கு இரையாகிவருகிறார்கள்.90 கோடி ஆபிரிக்க இன மக்கள் வரும் பத்தாண்டுகளில் சரி அரைவாசியாகக் குறைவார்கள்!இதற்கு,எய்ட்சும் உணவுமே காரணமாக இருக்கும். இது உண்மையிலேயே ஒரு சோகமான நிலையா?, உலகின் தானிய உற்பத்தியில் தேக்கமுள்ளதா? அல்லது, போதாத விளைச்சல் மிகுதியாக உலகை வேட்டையாடுகிறதா? உண்மையில் தானியத்தின் கையிருப்பும்-விளைச்சலும் திட்டமிட்டு அமுக்கப்படுகிறது!. செயற்கையான தானிய அழிப்பால் சந்தையைத் தக்க வைக்க முனைந்த சந்தைப் பொருளாதாரமானது இன்று தானியத்தை உலகின் ...