Skip to main content

Posts

Showing posts from March, 2009

புலம்பெயர்ந்தோம் அகதியென...

அ ரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம். இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப...

வன்னியுத்த அழிவுக்குப் பின்பும்...

நேற்றைய தவறும் இன்றைய விடியலும். "முடமாகக் கிடக்கும் காலத்துள் நினைவு முறிக்கும் உண்மைகள் ஏற்க மறுக்கும் தடங்களில் இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும் எந்தத்தேற்றமும் ஊன்று கோல் தருவதற்கில்லை முடங்கிக் கிடக்கும் உருவமிழந்த இதயத்துள் எலி(உண்மை)பிராண்டும் பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது." பாசிச மகிந்தா குடும்பத்து வன்னி யுத்தத்துக்குப் பின்பான புலிகளது "தேசவிடுதலைப்போர்" அரசியலில், பிணங்களை எண்ணும் போராட்டமாகத் "தமிழீழத்துக்கான"போராட்டம் வந்து நிற்கிறது.இலங்கையை ஆளும் மகிந்தா குடும்பம் பாசிசம் என்றால் என்னவென வினாவும் ஆரம்ப "அரசியற்கல்வி கற்கும்" மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக உலகில் தன்னை முன்னிறுத்துக்கிறது.மகிந்தாவின் தம்பி "அன்னை"இந்திராகாந்தியின் மகன் சஞ்சாய் காந்தியை நினைவுப்படுத்துகிறார். சுடரொழிப் பத்திரிகை ஆசிரியர் குறித்த கோத்தபாயவின் கருத்தும் ;அவரது உடல் மொழியும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.இவரது மனோபாவத்துக்கான உத்துதல் என்னவாக இருக்கும்?அந்நிய தேசங்களது ஊக்கமின்றிப் பேச முடிந்திருக்குமா? இந்த இனவழிப...

தேசியம் புலிகள் அல்ல,தேசமும் சுயநிர்ணயமல்ல

இலங்கை அரசுபுரியும் பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம். "உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின் அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்குள் திணித்து இன-அடையாள அழிப்பில் முடிவடைவதில் முடியும்." இலங்கை அரசு சொல்லும் யுத்தம்சார் சித்தாந்தம்-அரசியல்,"அமைதிக்கானது,சமாதானத்துக்கானது,ஜனநாயகத்துக்கானது"என்பது உண்மையானதாக இருக்க முடியுமா? இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை! புலிகளது தவறான போராட்டத்தின் முடிவில் தத்தளிக்கும் தமிழ்பேசும் மக்களை அடியோடு மொட்டையடிக்கும் அரசியலைப் பலர் முன்னெடுக்கும்போது-அந்தப் பலருள்,இந்தியாவும் ஏகாதிபத்திய உலகமும் மட்டுமல்ல அவைகளைத் தாங்கிப்பிடிக்கும் நாமுமே காரணமாக இருக்கின்றோம்.அந்நியர்களுக்கு அடியாட்படையாக மாறிய புலிகள், எங்ஙனம் தமிழ்பேசும் மக்களை அழிவு யுத்தத்துக்குள் திணித்தாகளோ-அதையே நியாயமா...

புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

மூன்றாவது அணியும்,மூக்கணாங் கயிறும். மாத்தறையில் தற்கொலைக் குண்டு வெடிக்கிறது ,வன்னியில் போர் மக்களைக் கொல்கிறது,நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று, அவர்களது உடலைக் கைப்பற்றுகிறது இனவாதச் சிங்கள அரசு.அவைகளைப் பயங்கரவாதிகளது உடலாக இணையத்தில் காட்டுகிறது.மக்கள் சாவதைச் சொல்லும் தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கணக்காகப் பலியாகும் தேசபக்த இளைஞர்களை அம்போவென மறைக்கிறது.புலியினது தலைமையின்பின்னே திரண்டதால் அவர்களுக்கு இந்த அவமரியாதை.இது,தொடர்கதையாகிறது. நமது அரசியலின் சூழ்ச்சிகள் யாவும் வர்க்கஞ்சார்ந்த நலன்களோடு நம்மோடு உறவாடுகிறது.இது,குறித்து எமது நிலையென்ன?ஆளும் சிங்கள அரசைத்தாங்குபவர்கள் ஒருபுறும்,புலிகளைத் தாங்குபவர்கள் மறு புறமுமாக நம்மைச் சூழ்ந்து அரசியல் நடாத்தும்போது,இந்த மூன்றாவது அணி தனக்குள் அடிபட்டுச் சாவதில் ஆயுதங்களுக்காகக் கருத்தைப் பயன் படுத்துகிறது? இலங்கையில்-தமிழ்ப்பிரதேசங்களில்,கடந்தகால அரசியற்றெரிவில் உருவாகிய இயக்க அரசியலானது பாரிய பிளவுகளைத் தந்து இளைஞர்களை வேட்டையாடியது.இலங்கை அரசினதும்,அதன் எஜமானர்களதும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான இனவழிப்பு அரசியலில் அணிதிரண்ட தமிழ்பேசும் இ...

வாருங்கள் தமிழீழக் கோசத்தை...

இளையோரே,தமிழீழக்கோசம் போடுவதற்கு முன்... அன்பு வாசகர்களே,மீளவும் ஒரு கட்டுரையூடாக உங்களோடு பேசுவதற்கு நெருங்கி வருகிறேன்.உங்கள் மனங்களைத் திறந்து என்னை அணுகுங்கள்.இது,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரசியற்றெரிவில்லை.இன்று, நமது அரசியற் பலம் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு அநாதையாக விடப்பட்டுள்ளது.இந்த அநாதைக் குழந்தையை எவரெவரோ தத்தமது விருப்பத்துக்கமையக் கைகளில் எடுத்துக் கிள்ளி விளையாடுகிறார்கள்.இக் குழந்தையின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது.இதன் பின்னே தத்தளிக்கும் முப்பது இலட்சம் தமிழ்பேசும் மக்கள் தமது கையலாகாத அரசியல்-சமூகவாழ்வையெண்ணிக் கவலையுறுவதைத் தவிர அவர்களால் எதுவும் முடியவில்லை. நுகர்வு மறுப்புப் போராட்டம்: கிழக்கிலும்,வடக்கிலும் மக்கள் வாளாது கிடக்கின்றார்கள்.டக்ளசும்,பிள்ளையானும் இவர்களது விடிவெள்ளிகள் அல்ல.இவர்களது தயவில், இழந்த தமது உரிமைகளை மக்கள் பெற்றுவிடவும் முடியாது.இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் சிங்களம் பேசும் பெரும்பான்மை மக்கள் சமுதாயத்தோடு தோள்சேர்ந்து இந்தத் துயரமான அரசியல் வாழ்வைத் துடைதெறிவதற்கானவொரு சூழல் இப்போது நெருங்கிவரவேண்டும்.இந்த அரசிய...

புலிகளின் தாகம் தமிழீழம்:சரணடைகிறது?

புலி இயக்கக் இருப்புக்கான அரசியல்: "The lessons of history are that actually there is nothing called ethnicities winning and losing. It is always forces of oppression and liberation losing and winning."- tamilnet இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவரெவரோ தமிழ் மக்களது நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஊர்வலம் எடுக்கிறார்கள் பல தமிழர்கள்!புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் "தமிழரின் தாகம் தமிழீழம் "எனக் குரலெடுத்துப் புலிக் கொடியோடு வன்னியில் மக்களைக் கொல்கிறார்களெனச் சொல்லி ஊர்வலஞ் செய்வதில் உந்தியபடி, "எழுக தமிழ்-பொங்கு தமிழ்"எடுத்த அநுபவத்தோடு எகிறிக் குதிக்கினம்.இன்னுஞ் சிலர் தீயுள் கருகிச் சாம்பாலாவதில் தமீழீழத்தின் விடிவைக் குறித்துக்கடிதங்கள் எழுதித்தள்ளுகினம்! வன்னியில் யுத்தக் கிரிமினல்களால் பாதிக்கப்படும் மக்களோ ஒருசில நேரமாவது உயிர்த்திருக்க முடியுமாவெனப் பேயாய் அலையும் நிலையில். புலம் பெயர் நாடுகளில்"இப்படி...