Thursday, March 26, 2009

புலம்பெயர்ந்தோம் அகதியென...


ரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.



இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!


இங்கே, எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம்.


தேசியச் சக்தியாகவோ,ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச்
சக்தியாகவோ மதிப்பிடலாம்.ஆனால்,விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை
ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள்.தங்களைத் தவிரப்
போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு துரோகி சொல்லி
ஒழித்துக்கட்டுவதே அது.




மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.


நடசேனின் பேட்டியாக இருந்தாலென்ன இல்லைப் பிரபாகரனின் "மாவீரர்தின"உரையாகவிருந்தாலென்ன அனைத்தும் மிகப் பித்தலாட்டமான அரசியலைப் பேசுகிறது.நிபந்தலையின்றி இலங்கை அரசசோடு பேச விரும்புவதாகத் தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகள் சார்பாக நடசேன் அறிக்கைவிட்ட கையோடு,அவுஸ்த்திரேலிய வானொலிக்குப் பேட்டியளிக்கிறார்.அதையும் ஐரோப்பியத் தமிழ் வானொலி ஜேர்மனியிலிருந்து மறு ஒலிபரப்புச் செய்கிறது!


புலிகளது நிலை தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான தமிழீழமே முடிந்த முடிவென்றுஞ் சொல்லும் நடேசன், இலங்கை அரசோடு எந்த மக்கள் நலன் சார்ந்து நிபந்தனையற்ற பேச்சுக்குச் சம்மதிக்கின்றார்?


ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் புலிகளுக்குப் புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் புலிகளைக் காத்துச் சுயநிர்ணயத்தேடு முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோவதையும் குறிகத்தவறுவது நியாயமாகிறதா?


தமிழீழத்தின் நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?


எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த நடசேன் வகையறாக்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது அன்றைய வரலாறு அல்லவா?





இன்றோ அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகள் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.பற்பல ரூபங்களில் இஃது அரசியல் முனைப்பைக்கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இது,புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் புரட்சிகர அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.


இன்றைக்குப் புலிகளெனும் இயக்கத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான இந்தியாவின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது.இதற்கான முன் தயாரிப்பாக அது வன்னியுத்தத்தைப் பலவாறாகப் பயன்படுத்துகிறது.


1:புலிகளை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது,


2:அரசியல் பேரம் பேசமுடியாத தரகுக் கட்சியாக்குவது,


3:பிரபாகரனது தலைமைக்கு நிகராக புலிகளுக்குள் இருக்கும் ஒருவரை முன் நிலைப்படுத்துவது,


4:இலங்கை அரசோடு நிபந்தனையற்ற பேச்சுக்குச் சென்று அரைகுறைத் தீர்வோடு சரணாகதியடைய வைப்பது,


5:அத்தகைய நிலைமையில் அரசியல் அதிகாரத்தைப் புதியவகைப் புலிகளோடு பங்கீடு செய்வது எனும் அரசியல்.


வன்னி யுத்தத்துக்குப் பின் இத்தகைய நிலையைப் புலிகள் அடைந்து வருகிறார்கள்.



இதை நடசேன் அளித்த வானொலிப் பேட்டியில் நாம் குறித்துணர முடியும்.எனினும்,இதை அவர்கள் அடைவதற்காக இன்றுவரையும் மக்களைப் பலியிடுவதில் பேரம் தலைமையைக் காத்தலோடு சம்பந்தமுடையதாகவும் இருக்கிறது.இது,தமிழீழத்தின் பேரால் நடப்பது சுத்த அரசியல் மோசடி.இதைவிட மோசடி ஜனநாயகத்தினதும்,சுயநிர்ணயத்தினதும் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவது!

மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள் புலிப்பாணித் தமிழ் அரசியல் தரகர்கள்.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய
ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது
எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது
இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தக் காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!

இத்தகைய மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

இத்தகையவொரு சந்தர்பத்தில் இந்தியா,சிங்கப்பூர் என்று ஊர் சுற்றித் திரியும் புலியாதரவு-புலியெதிர்ப்புக் கபோதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களக்கான "தீர்வுப் பொதிகளை"தயாரித்து தீர்வு நோக்கிச் செல்வதென்பது இந்தியாவின் நலனை முழுமொத்தத் தமிழ்மக்களது ஒத்திசைவோடு இலங்கையில் ஊன்றுவதற்கானதாகவே பார்க்கலாம்.

இப்போது, உலகஞ் சுருங்கிவிட்டது.இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இரு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றி வருகிறார்கள்.இவர்களே தமது பழைய பெரிச்சாளிகளை ஐரோப்பாவெங்கும் சந்தித்து அனைத்து ஒத்துழைப்பையும் மக்களின் பெயரால் செய்து தரும்படி காத்துக்கிடக்கிறார்கள்?

இந்த அரசியல் நிரலுக்குள் புலிகளின் போராட்டம் தொடர்கிறது,மக்களைக் கேடயமாக்கியபடி!


இது, ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!


இங்கே, மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்கிறது தமிழீழப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது, இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.இதையேதாம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் "மாற்றுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவல்படைகள்-குழுக்கள் செய்துவருகிறார்கள்.இவர்கள் மத்தியில் நாம்...


ப.வி.ஸ்ரீரங்கன்
26.03.09

1 comment:

Anonymous said...

for Udaippu

ஆம் கொள்ளையில் போவாரே> நாசமாகப்போவாரே> பாடையிலபோவாரே> தாலி அனுப்பான்களே

ஆம் கொள்ளையில் போவாரே> நாசமாகப்போவாரே> பாடையிலபோவாரே> தாலி அனுப்பான்களே இவ்வாறுதான் மக்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பிணங்களின் எண்ணிக்கையை வைத்தே அரசியல் செய்யும் போராட்ட அமைப்புத் தான் தமிழ் மக்களின் உரிமைக்காக போராவதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்கள். ஆனால் பிணங்களின் அரசியல் பின்னால் உள்ள கபடத்தனத்தை இன்னும் உணராதவராக இருக்கின்றார்கள்.

பணத்தின் அருமை தெரியாதவர்கள்> உடலுழைப்பை வழங்காது மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்களின் ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் மக்களின் உணர்வு என்றால் என்னவென்று தெரியாத நடைபிணங்களாக போராளிகளின் தலைமை இருக்கின்றது. இவர்களே மக்களின் உரிமையை மறுத்தவர்கள். தமது இருப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த எதிர்கருத்துக்களையும் ஏற்க மறுத்தவர்கள் தமது சட்டங்களின் மூலம் மக்களின் வாயை அடைத்தவர்கள்> இந்தப் போராட்டம் என்ன இலக்கிற்காக தொடங்கப்பட்டது என்பதையே அழித்து> குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட அதிகாரவர்க்கத்தின் நலனுக்காக இன்று மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்கா இனவாத பாசீசம் என்வாறு மூர்க்கத்தனமாக இருக்கின்றதோ அதற்கும் குறையாமல் தமிழ் குறுந்தேசிய பாசீசம் தமிழ்மக்களையும்> இளம் தேசபக்கதர்களையும் தமது இருப்புக்காக கொல்கின்றனர்.


வன்னியில் சில மைல் நிலப்பரப்பில் வாழும் மக்களின் அவலம் நாளாந்தம் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது. ஒவ்வொருநாளும் கடனுக்கு வாங்கிய பொருளுக்கு கடனைக் கட்டுவது போல தவணை முறையில் மக்களின் உயிர்களை நாளாந்தம் சாகடித்துக் கொண்டிருக்கின்றனர் யுத்தவெறி அரக்கர்கள். நாம் யாருக்காக போராடுகின்றோம்? போராடுகின்ற மக்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு விடுதலை அமைப்பு புரிந்து கொண்டதாக இல்லை. இன்று சிறிய பகுதியில் இருக்கின்ற மக்களின் ஒரு பகுதியினர் அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்த காரணத்தினால் யுத்தம் தொடங்க முன்னர் வெறியேற முடியாது பலவந்தமாக புலிகளின் கட்டுப்பாட்டினுள் வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்களின் நிலையாது புலிகளின் தவறான நடவடிக்கைதான் காரணம். (முன்னர் குறிப்பிட்டது போன்று அரசினால் ஏற்பட்ட வடு> உறவினர்கள்> காயப்பட்டவர்கள்> அங்கவீனமான போராளிகள் அடங்கும்).

இவ்வாறு பலசில நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்ற போது முழு கடல்பாதையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களை பாதுகாப்பாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி இருக்கலாம். மற்றைய மக்களை அவர்கள் போக்கிற்கே வாழ அனுமதித்திருக்க முடியும். இவ்வளவு நிலப்பரப்பை வைத்துக் கொண்டவர்கள் இன்று எவ்வித பாரிய எதிர்ப்பும் இன்றி முல்லைத்தீவு> புதுக்குடியிருப்பு வரை மக்களைக் கொண்டு செல்லும் வரை பாரிய எதிர்ப்பை புலிகள் காட்டவில்லை. மாறாக கிளிநொச்சி போனால் எந்த இழப்பும் இல்லை என அறிக்கை விட்டனர்.
இவர்கள் செய்திருக்க வேண்டியது.
மக்களை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்ல அனுமதித்திருப்பது.
தமிழ் நாட்டில் குடும்ப உறவுகளை> காயப்பட்டவர்கள்> அங்கவீனமான போராளிகளை கொண்டு சென்றிருக்கலாம்.
மற்றைய போராளிகளும்> தலைமையும் தமக்குத் தெரிந்த வகையில் புதிய தளங்களை நோக்கி சென்றிருக்க முடியும். ஏனெனில் ஒரு கெரில்லா அணி என்பது சிறு குழுக்களாக வாழ்ந்திருக்க முடியும்.
இவைகளை இராணுவரீதியாக எவ்வித அனுபவமும் இல்லாம் எம்மால் சிந்திக்க முடிகின்றது என்றால் உலகின் தலைசிறந்த கெரில்லா அணியும் அதன் தலைமையும் இவ்வாறு ஏன் சிந்திக்க முடியவில்லை?
தமிழ் நாட்டில் அங்கவீனமான போராளிகள்> நோயாளிகள்> வயதுவந்த தேசபக்தர்கள் வாழ்ந்திருக்க முடியும். ஏன் இப்பவும் முடிகின்றது. ஆக புலிகளின் தலைமையும் அதன் போராளிகளும் தமது அமைப்பு வடிவத்தை மாற்றிப் போராடியிருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன எதிர்ப்பைக் காட்டாது முல்லைத்தீவு> புதுக்குடியிருப்புப் பகுதியைச் சென்றவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பயன்படுத்தாதது விட்ட காரணம் என்ன? இன்று அந்த ஆயுதங்கள் பல இராணுவத்தின் கைகளில் பிடிபட்டுள்ளது. இவைகளை ஏன் பயன்படுத்தவில்லை? மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிட்டு இருக்கின்ற ஆயுதங்கள் முடியும் வரையாவது தமது எதிர்ப்பைக் காட்டியிருக்க முடியும். அவ்வாறு எதிர்தாக்குதலைத் தொடராது சிறிய பிரதேசம் வரை மக்களை கொண்டுவந்துவிட்டு சர்வதேசமே திரும்பிப்பார் என கூக்குரல் இடுவதன் மூலம் எந்த சர்வதேசமும் எம்மை எட்டிப் பார்க்கப்போவதில்லை.

சிறு பிரதேசத்தில் வைத்துக் கொண்டு சர்வசேதம் தலையிடவேண்டும் என கோரிக்கை விடுகின்றீர்கள். சர்வதேசம் எவ்வாறாக பிரச்சனைகளில் தலையிடுகின்றன என்ற பார்வை விடுதலை இயக்கத்திடம் இல்லை என்பதே தற்கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.

சர்வதேசத்திடம் புலிகளை அங்கீகரிக்கக் கோருவது
புலிகளே மக்களின் ஏகப்பிரதிநிதி
எமக்குத் தேவை தமிழீழம்
தடையை நீக்கு
தலைவர் பிரபாகரன்

இதில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடக்கியிருக்கின்றனவா? ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருக்க வேண்டிய இலக்கு> கோரிக்கைகள் எல்லாம் சாதாரண மக்களிடம் செல்லப்பட வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சாதாரண மக்களிடம் தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகள் சரியான வகையில் சென்றடையவில்லை. அவ்வாறு சென்றடையவேண்டும் என்றால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைள் அவசியமாகும்.
புலம்பெயர்நாடுகளில் உள்ள அதிகாரவர்க்கத்தின் விசுவாசிகள் தமது தலைமையிடம் நற்பெயர்வாக்குவதற்கா தலைவரின் படத்தையும்> புலிக்கொடியையும் ஏந்துகின்ற போராட்ட வடிவமாக உருவாக்கிக் கொள்கின்றனர்.
புலம்பெயர் தமிழ்மக்கள் அரசியல் ரீதியான பார்வை பூச்சியமாக இருக்கின்றதும் அவர்களின் உணர்வுகள் இழப்புக்களினால் ஏற்படும் துயரமும் பிற்போக்கு அரசியலுக்கு இரையாகின்றனர். தமிழ்மக்களிடம் இருக்கின்ற இரக்கமும்> தமது உறவுகளின் பாசமும்> இழப்புக்கள் மீதான அனுதாபமும் நீண்டகாலப் போக்கில் எவ்வித அரசியல் விழைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. மக்கள் தமது எதிரியை அறியும் வண்ணமான கோரிக்கைள்> போராட்டங்களே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வெற்றியடையச் செய்யும்.
இன்று வணக்கா மண் என்ற திட்டத்திற்கு பொருள் கொடுப்பவர்கள் தமது உறவுகளின் மீதா பாசமும்> இழப்புக்கள் மீதான அனுதாபமும் இருப்பதானால் தான் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார்கள் கொடுப்பார்கள். கொடுப்பவர்கள் இருக்கின்ற வரையில் வருவாயை தம்முள் பகிந்து கொள்வதற்கு ஒரு கூட்டமும் உருவாகிக் கொண்டே இருக்கும். வணங்கா மண்ணுக்கு உதவுபவர்களை சொச்சைப்படுத்த முடியாது. அவர்களின் உணர்வை மதிக்கப்பட வேண்டியதுண்மையே. ஆனால் விலையுயர்ந்த இவ்வாறான போராட்ட வடிவத்தை முன்கொண்டுவந்த மேதாவிகளைத் தான் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கின்றது. இவர்களின் போராட்ட முறை கூட பலஆயிரம் மக்களுக்கு நிவாரணம் கொடுக்கக் கூடிய தொகையை தின்று விழுங்கி விடுகின்றது.

புலிகளின் விலையுயர்ந்த போராட்டத்தை நடத்தத் தான் தெரியும். ஒன்று மக்களின் உயிர்> அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் வன்னியின் சிறுநிலப்பரப்பில்
புலம்பெயர் நாட்டிலோ விலையுயர்ந்த போராட்டவடிவமாகிய வணங்கா மண் நிவாரண உதவிகள் கூடிய கப்பலை அனுப்புகின்றனர். இதுகூட ஒரு வளர்ந்த வர்க்கத்தின் போராட்ட முறையே ஒழிய உழைக்கும் மக்களுக்காக போராட்ட முறையல்ல. யூதர்களிடம் இருந்த நிதி மூலதனத்தின் மூலம் தமது தேசத்தை விலைக்கு வாங்கும் நோக்குடன் சென்ற கப்பல் பயணமேயன்றி மற்றைய இனங்கிடம் நேசக்கரம் நீண்டும் அரசியல் யூதர்களின் பணம்படைத்த வர்க்கத்தவர்களிடம் இருக்கவில்லை.


இன்று சர்வதேசமே எம்மை பார் என்று அழுது புலம்புகின்றோம். ஆனால் அவர்கள் எவரும் எம்மை நோக்கி வரப்போவதில்லை. இன்று இழக்கப்படுகின்ற வளங்களை (மனித வளம்> சொத்துக்கள்) பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால் அவைகளை அழித்துக் கொண்டு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாக பிரச்சாரம் செய்கின்றனர். பிரச்சனையை திடீரென முத்திவிட்டதாக காட்டுகின்றனர். பழத்தினை புகைப்போட்டு பழுக்க வைக்க முடியும் ஆனால் ஒரு போராட்டத்தை வலுக்கட்டாயமாக உக்கிரமடைந்ததாக உருவாக்க முடியாது.

கிழக்கைரோப்பிய நாடுகளில் மேற்கு தேசங்கள் தாம் கொண்ட திட்டத்தை நிகழ்த்துவதற்காக பல சதித்திட்டங்களை நடத்தி முடித்தனர். அங்கு மேற்குல நிகழ்ச்சி நிரல் தயாராக இருந்தது. அதன் பொருட்டான செயற்பாடுகள் நடைபெற்றன. உதாரணமாக வைத்தியசாலையில் கொலை நடைபெற்றதாக பிரச்சாரம் செய்தனர். கிராம மக்களை கொலை செய்து அவர்களை யூக்கோஸ்லாவிய அரசு நடத்தியதாக செய்திகளை ஊடகவியலாளர்கள் நடத்திக் காட்டினர்.
ஈராக்கில் அழிவை ஏற்படுத்தக் கூடியதாக ஆயுதங்கள் இருந்தாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மேற்கு தேசங்களின் குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிரநிரலுக்கு அமைய இடம்பெற்றது.

இலங்கை தேசத்தைப் பொறுத்தவரை இந்திய உபகண்டத்தின் சந்தையை பலத்தை கொண்டே அமெரிக்க> ஐரோப்பிய நலன்கள் இருக்கின்றது. இங்கு அமெரிக்காவின் அனுசரணை இந்திய தலைமையில் அடிப்படையில் அமைந்ததாகவே இருக்கும். இங்கு அமெரிக்க - இந்திய கூட்டு செயற்பாடு இருப்பதை அவதானிப்பதாக விடுதலைப் புலிகள் இல்லை. இந்திய ஆட்சியாளர்கள் அழுத்தம் திருத்தமாக பின்வருமாறு தெரிவிக்கின்றனர்.

"இலங்கையின் வடக்கு பகுதியில் அனைத்தும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகுஇ அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகஇ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும் தேவையாகும்." " சிவசங்கர் மேனன்குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் புலிகள் தளத்தை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இவ்வாறு இருக்கையில் ஒரு விடுதலை அமைப்பு என்ன விதமான மாற்றுக் பாதையை தெரிவு செய்திருக்க வேண்டும்? முதலில் மக்களை பாதுகாப்பில் வைத்திருக்கும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் அன்னியர்கள் தலையீட்டை தவிர்த்திருக்க முடியும்.
மக்களின் அழிவை தடுப்பதன் மூலம் போராட்டத்தின்பால் போராடி வாழும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுவதை தவிர்த்திருக்க முடியும். பலமுறை இடம்பெயர்ந்த மக்கள்> உங்களை பாதுகாத்த மக்கள் இவர்களை இன்று ஒரு சிறுபகுதியில் கொண்டு சென்று கொல்லக் கொடுப்பதை போராட்டத்தின் நடுவே வாழும் மக்கள் ஏதிர்வினை ஆற்றத்தான் போகின்றார்கள். புலம்பெயர் மக்கள் நேரிடையாக இழப்பை சந்திக்காதவர்கள். ஆனால் போராடி வாழும் மக்கள் இந்த அழிவு நீங்காத வடுவை ஏற்படுத்தும்> இது எந்த வித போராட்டத்திற்கும் தயாரற்ர மக்களைத் தான் நாம் உருவாக்கப் போகின்றோம்.
ஆனால் புலம்பெயர் மக்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து போராடுவதாக கூறுவது கூட ஒரு எல்லைக்குள் உட்பட்டதுதான். இவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் நிலைக்கு ஏற்ப வாழப்பழகிக் கொண்டவர்கள். இன்று இவர்களிடம் இருப்பது இரக்க உணர்வு. இவைகள் ஒரு இழவு நடந்த குறிப்பிட்ட காலத்தின் பின்னராக நடந்த சம்பவத்தை மறக்கும் நிலைக்கு ஒப்பாகவே மறந்து விடுவர்.
புலம்பெயர் மக்கள் நாட்டில் வாழும் மக்களை விட வர்க்க ரீதியாக மாறுபட்டவர்கள். இவர்களின் தேவை என்பது போராடி வாழும் மக்களின் தேவைக்கும் இடையே நிறைவே மாறுபாடு இருக்கின்றது.



அன்பார்ந்த தேசபக்தர்களே
தமிழ் மக்களின் உரிமைப் போர் என்பது ஒரு அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதல்ல. மக்களைப் பாதுகாப்பதே. நீங்கள் அந்த மக்களை விடுதலை செய்யும் போராட்டத்தை தொடருங்கள். இதன் மூலம் இளம் தேசபக்தர்களின் தலைமையில் புதிய விடுதலைப் போர் தொடரட்டும். ஆம் நீங்கள் செய்ய வேண்டியது மக்களை அரச பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப் போராடுவதும்> பின்னர் நீங்கள் புதிய தளங்களை நோக்கி நகர்ந்து நிலமைக்குத் தகுந்தது போல புதிய போராட்ட யுக்தியைப் பயன்படுத்துங்கள். நாம் மக்களையும் உங்களைப் போல உள்ள தேசபக்தர்களின் அழிவை இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் போல நாம் ஆதரிக்கவில்லை.
இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதிரி யார் எனத் தெரியாமல் தனது சொந்தச் சகோதரர்கள் சாகக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இவர்களைப் போல எந்த மனிதர்களும் இருக்க முடியாது. இன்று தளத்தில் அழிவது இளம் தேசபக்தர்களும்> மக்களுமாவர். நாம் ஒரு இனத்தின் அழிவை சிறு தொகுதி கொண்ட அதிகார வர்க்கத்திற்காக பழிவாங்க முடியாது. இறப்பவர்கள் எமது இரத்தங்கள். அன்பார்ந்த இளம் தேசபக்கதர்களே மக்களை விடுவிக்கப்பப் போராடுங்கள். அத்துடன் எம் மக்களை கொல்லும் பாதகர்களை வேறு வடிவில் போராட்டத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் எதிர் கொள்ளுங்கள்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...