Skip to main content

Posts

Showing posts from July, 2005

ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980)

சிந்தனையை சிறப்பாக்கிய சிற்பி! ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980) சாற்ராரும் மானுடவிடுதலையும்-கனவுகளுக்கு விடைகொடுத்த இருப்பின் வலியுணர்ந்த உன்னதம். வரும் 21.ஜுலை 2005 சாற்ராருக்கு 100 வயது,இது நினைவாகி விட்டது. ஒரு பிந்திய- மந்தமுடைய சமூகமாக மானுடம் இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தரணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும். 'சுதந்திரம்-விடுதலை' இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா? இன்னும் யோசிப்பதே விடையாகும். பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி. இங...

வாழ்வு நமக்கருகினில்...

வாழ்வு நமக்கருகினில்... எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம். எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்...

தானாடாது போயினும் தசையாடும்!

தானாடாது போயினும் தசையாடும்! இந்த நிமிஷத்தில் நெருப்பவன் உடலை உண்டுகொள்ளும்! தொப்புள் கொடியாய் தொடர்ந்த உறவு ஒரே கருப்பையுள் மலர்ந்த சொந்தம் ஒரு துளி விசத்தினதும் ஒருசிறு உளத்தூண்டலாலும் நெருப்புக்கு இரையாகிறது இது நீண்ட கதையின் தொடர்ச்சி... என்வீட்டின் சுவர்களில் மோதித் தெறித்த இந்தக் கணத்தில் தவித்தெரியும் உளமோடு தசையாடும் தவிப்போடு இயலாமையின் உச்சம் கண்களில் வெடிக்கும் நீர்த்துளியாய் புகையிலைச் செடிகளுள் மலர்ந்துகொண்ட பாசம் பாய்ந்து பாய்ந்து 'கணு முறித்து' பெருமிதப்பட எதுவுமற்ற அந்தக் காலத்தில் சிறு விவசாயின் குழந்தைகளுக்கு தோட்டத்துச் செடிகள் ஆயிரம் கதைபேசியும் அழகாய்த் தோன்றி வாழ்வாய்ப்போனது புகையிலைப்பாணி தலைகளில்பட்டுக் கொள்ளும் ஒருவர் தலையையொருவர் தடவிக்கொள்வோம் தலைமுடி கம்பிகளாகக் கைகளில் தட்டிக்கொள்ளும் ரவியும் ஜெயாவும் கருணாவும் 'சின்னண்ணா,சின்னண்ணா தலையைப் பார்!' என்பார்கள் நினைவின் கனத்த பொழுதாய்ப்போனதந்தக் காலம் பூப்பறித்துச் சாமிப்பூஜை விளையாடியும் எட்டு மூலைப் பட்டம் கட்டி காற்றிலேற்றி நிலாப்போன நம் மலர்ச்சியெல்லாம் தொடர்ந்து துயர் எறிகிறது ஏன் இந்த ரவி ...