புரட்சி க ரச்சக்தியாக நடிக்கும் ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள். சிறு கவனக் குறிப்பு. "குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும் மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும் தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை தேசமே விருப்புறுதியாகி இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது! புலம்பெயர் நாடுகளில் சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள் கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள் ஊராரின் உயிர்கள் தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பியது! கேட்பாரின்றிக் கோலாச்சிய மொழித் தர்பார் உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொண்டது..." ஒ டுக்கப்படும் வர்க்க மனிதரை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் . நடந்த முடிந்தவை முடிந்துபோனவையாகவும்,முயற்சியில் இது தவிர்க்கமுடியாததாகவும் உரைக்கப்படுகிறது.புலம் பெயர் தமிழர்களுக்குள் கொட்டப்படும் புலிசார் மதிப்பீடுகள் யாவும் பிழையான தெரிவுகளை இளைஞர்களுக்குள் கட்...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்