Skip to main content

Posts

Showing posts from April, 2013

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம். கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்! // Shoba Sakthi : 'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே ' - சுகன் // அ தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீக...

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும். 40 வது , இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்! இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது! பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர். எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்...