Skip to main content

Posts

Showing posts from 2013

(இ)லீனா மணிமேகலைக்கு "எவர் " காட்டுவார் "ஆதாரம்"?

" சி ங்கள-இந்திய ஆளும் வர்க்கங்கள் "ஈழத்தில்" நடந்த இந்திய-இலங்கை-அரசுகளினது யுத்தக் குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை மற்றும் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க இந்திய ஆளும் வர்கத்தின் கொடிய மனிதவிரோதச் செயற்பாடுகளை  மெச்சவும் அரசியல் -உளவுப் படைகளை முடுக்கிவிட்ட இன்றைய நிலையுள், இந்திய ரோவானது பல உப கூலிகளைக் கிழ்வரும்படி தகமைத்து இயக்குவது பரவலாகப் புரியவேண்டும். ஒரு நோக்கு நிலைக்குட்பட்டு  பல்வேறுபட்ட செயற் தளத்தில் தத்தமக்கான கூலிகளை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கையின் இற்றைவரையான அரசியல் போக்கில் பலரது புதிய-பழைய வருகையும், புலிகளுக்குள்ளிருந்து புறப்பட்ட "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" வரையும் கூடவே, இந்தியாவின் அரசியலுக்குத் தகவமைக்கப் போதாதெனப் தமிழக்கத்துப் பல "புரட்சியாளர்கள்-குறும்படக் கோணங்கிகளென" க் கூடிக்கொண்ட அரசியல் அரங்கில், இந்தச் சுண்டங்காய்ப் பெண்ணு, லீனா மணிமேகலை போடும் தனது தனிப்பட்ட...

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம். கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்! // Shoba Sakthi : 'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே ' - சுகன் // அ தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீக...

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும். 40 வது , இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்! இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது! பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர். எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்...

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வா னேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே! சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு? அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்ட...

என்ன செய்யப் போகின்றோம்?

இலங்கையின் தலைவிதி! :என்ன செய்யப் போகின்றோம்? இ ன்றைய இலங்கையின் இனப்பகை அரசியல்-தமிழ்பேசும் மற்றும் சிறுபான்மையினங்களது அனைத்து முரண்பாடுகள்,அரசியல் அபிலாசைகள்அதன் வழியான ஒத்துழையாமை-மறுப்பு அரசியல்,இனவொடுக்குமுறை-பகையெல்லாம் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தும் அரசியலாகப் புத்தபிக்குகள்,மற்றுஞ் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைத் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடாத்தும் அரசியல், நிச்சியம் நமது மக்களது நலனின்பாற்பட்டதல்ல! இது,மீளவும் அந்நிய நலனுக்கானதென்றே கருத வேண்டியிருக்கிறது. சீன-இலங்கை அரச வியூகத்துள் இனங்களுக்கிடையிலான ஒரு மொன்னைத்தனமான  ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முன்னிலைச் சோசலிசக்கட்சி,மற்றும் அதன் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் பொருளாதாரச் சாய்வில் இலங்கைச் சீன வியூகத்துக்கு அவசியமானது.இதை உடைத்து மேற்குலக நலன்களை அறைவடை செய்யும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியலை-அமெரிக்கச் சீ.ஐ.ஏ.க்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாட்டுச் சீமான் வகைப்பட்ட அரசியலது நோக்கம் ம...

அஞ்சு வயதில் ஆனாவுக்கு விடுப்பு

ஈரச் சாணத்துள்ளும்  ஈழவர் வாழ்வு... எ ப்பொழுதினும் எந்தக் கனவைக் காண நேரிடினும் அவை குருதிகொட்டும் சிதறிய சதைப் பிண்டத்தோடு சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த அதே பொழுதுகளாய் தமிழர்களின் முற்றத்தில் வந்து  உறுமும் தீர்வுப் பருவக்காற்று பாடை கட்டியே வெறுத்துப்போன கரங்களோடு நமது பெரிசுகள் ; பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி எத்தனை நாளைக்குத்தாம் இது வாழ்வாய்?... வட்டமேசையிலிருந்து திம்புபோய் பின்பு நோர்வே தாய்லாந்து சுவிட்ஸ்சர்லாந்து என்று தீர்வுதாம் கட்டாக்காலி எருமையாக அலைகிறது இந்தத் தேசங்களில் செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும் அன்று செத்துக் கிடப்பதற்கே செல்லடி பட்டுக் கொண்டதும் சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்! இவற்றையெல்லாம் சகசமாக்கிய சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும் போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய் குடிசைகளின் கூரை ஒழுக்காய் அதிகாரத்தைக் கொட்டித் தீர்க்க ஆத்தைக்கும் அவள் மடியுள் கிடக்கும் "சாணைச் சேலைக்கும் "அடுப் பெரிக்க அஞ்சு வயதில் ஆனாவுக்கு விடுப்பு வைத்து அள்ளிய கல்லுகள்  கஞ்ச...

கணையாழி:கேடயம்,பொன்னாடை-எதற்காக?

Theepachelvan Pratheepan: "புலிக்காய்ச்சலில் பொய்களால் 'புனைவு' செய்து வாழும் அண்ணன் ஒருவருக்கு சமீப நாட்களாக 'தீபச்செல்வன் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.நீங்கள் முதலில் புலிகளை பார்த்து குரைப்பதை நிறுத்திவிட்டு மற்றப் பங்கங்களுக்கும் உங்கள் தலையை திருப்புங்கள்!" ================================================================= தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை. ================================================================ ஒ ரு சமுதாயத்தை ஆணிவேரோடு பிய்த்தெறிந்து, ஓட்ட மொட்டையடித்த புலிகள்,பல இலட்சக் கணக்கான உயிர்களை நாசஞ் செய்து சில குடும்பங்களைக் கோடிஸ்வரர்களாக்கிவிட்டு வன்னியில் சரணடைந்துகொண்ட அரசியலுளெஞ்சிய புலிக்கூட்டமோ மீளவும், மக்களை மொட்டையடிக்கும் தெரிவுகளோடுதாம் அரசியல் செய்கிறது.இலக்கிய வியாபாரி தீபச் செல்வன் அதற்கான சிறு உதாரணமாகும்.இவருக்கு முன் சேரன் என்பது உலகறிந்தது! இஃது மக்கள் விரோதமானது.ஏன்-எதற்காக? இது,குறித்துப் பலருக்குப் புரியும்படி நாம் ஏலவே பல மாதிரிகளாக எழுதிவிட்டோம்! அப...

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்!

யோ சித்துப் பார்க்கிறேன்.எட்டு ஆண்டுகளுக்கு முன் வலைப் பதிவை அண்மித்து அதற்குள் இயங்கியங்கியபோது தமிழ்மணத்தால் அறிமுகமானவர் இந்த டோண்டு இராகவன் அவர்கள்.பெரும்பாலும் தமிழ்ச் சமுதயாமானது படு பிற்போக்கான சமுதாயமாகவிருப்பதும்,அதன் சிந்தனை யோட்டமானது ஆளும் அதிகாரத்துக்கிசைவானதாகவும்,  இருக்கின்றது.இந்தச் சமுதாயமானது தனது முரண்பாடுகளுக்கொப்ப வளர்வுறுதால் அதுள் நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கொப்பவேதாம் மனிதர்களின் உள-அறிவு வளர்ச்சியும் சமூகவுணர்வாகவும்-பண்பாடாகவும் பிரதிபலிக்கும்.எமது சமூக வாழ்நிலையின் குறை நிலைகள் நமக்குள் பிரதிபலிப்பவை. எனவே,ஒரு சக மனிதரைப் புரிந்துகொள்வதற்கு மேலே கூறியவொரு சமூக-உளவிற் பார்வை அவசியமானது.டோண்டு இராகவன் பெரும் பாலும் இந்தச் சமுதயாத்தின் அனைத்துக் குழப்பகரமான முரண்பாடுகளோடும் ஒட்டியுறவாடுபவர்.இதே சமுதாயத்தின் சாக்கடையிற்றாம் நாம் அனைவரும் உருவாகிறோம்.இதுள், பெரிதாகச் சொல்லி , நீட்டி முடக்கத் தேவையில்லை.நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள். டோண்டு அவர்களை,நான் கண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவர் சளைக்காது பல பக்கங்களை நிறைத்து எழுதிக்கொண்டிருந்தார்.என்னோடு ...

இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்! "ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். "-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html இ ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசு...

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்...

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்-ஓடியாருங்கோ,ஓடியாருங்கோ! நா ன், பிறருக்கு "உதவும்-உதவிக்கு"ப் பின் எனது எதிர்பார்ப்புகளை ஒரு  corporate ethics முறையில் தரச் சொல்லி பார்த்திபன் கேட்டிருக்கிறார். அங்ஙனம்,வழங்கும்போது என்னால் நடுச் சந்தியில் ஆசீர்வதிக்கப்படுபவர்களுக்கு(குறிப்பாக: என்னிடம்"உதவி" பெறுகிறவர்களுக்கு) வசதியா இருக்குமென்பது மேன்மை மிக்க பார்த்திபனது வேண்டுகோள். அவ்வண்ணமே,நான் எனது முகநூல் நிலைத் தகவலில் எழுதிய குறிப்பைப் பார்த்திபன் தனக்கேற்ற வகையில் இதை ஒரு பாரிய சுற்றுக்குவிட்டும்[corporate social responsibility ]கூடவே, யசீகரனது சகோதர-சகோதரிகளுக்கும் அனுப்பிவைத்து இப்படியொரு நல்ல வேலையைச் செய்திருக்கின்றதால் யசீகரனது சோதரி ஜெயகலாவும் எனக்குத் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து, "எனது எதிர்பார்ப்பு" [ corporate ethics ]அறிதற் பெருவிருப்பையும் தெரிவித்திருக்கிறார். எனவே,நான் கண்டிப்பாக எழுத்து மூலம் "corporate ethics-சை"  தெரிவித்தே ஆகவேண்டியவொரு சூழலுக்கு "என் முன்னைய பாமர விருப்பான "என்வீட்டிற்கும் வந்தி...