Skip to main content

Posts

Showing posts from July, 2024

"கட்சி" கட்டும் கடைக்குட்டித் தம்பி அருச்சுனாவின் …

  " கட்சி"   கட்டும் கடைக்குட்டித் தம்பி அருச்சுனாவின் அவலத்தின் மீதான கண்ணோட்டம். ம க்களின் எதிரிகள் யார்,நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கு நாம் நமது கடந்தகால இயக்கங்களது தோற்றுவாயையும்,அவ்வியக்கங்களது போராட்ட செல் நெறியையும் பகுத்தாரயவேண்டும். அவர்களது அந்நியவுறவுகள் மற்றும் அவர்களது,அரசியல் பாதையும் அவசியமான இருவுண்மைகளை நமக்குள் இன்னும் பகர்பவை. ஒன்று:  இன்றும் அந்நியச் சேவைக்காக விலைபோகின்றவர்கள் கடந்தகால இயக்க எச்சங்கள்.மற்றும், இளைய கல்வியாளர்கள், முன்னால் இயக்கங்களின் பிரபலங்களது குழந்தைகளான இன்றைய இளைய தலைமுறைத் தொழில்முறைக் கல்வியாளர்கள் .  இரண்டு:  அதை அடைவதற்காக நிலவும் அரசில் உள்ள முரண்பாடுகளான " ஊழல் ; நிர்வாகச் சீர்கேடு ;சுரண்டல் “ குறித்தும் கூடவே , “ உரிமை -விடுதலை-தியாகம் " பேசி மக்களைக் இனியும் கட்சிகட்டி ஏமாற்றுவார்கள். - என்பதே அவ்விருவுண்மையும்! இலங்கையையும்,அந்தத் தேசத்து மக்களையும் அடிமைப்படுத்தித் தமது புவிகோள அரசியலை முன்னெடுக்க விரும்பும் ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப...