ஷோபா சக்தியும் கல்வெட்டும் சேனனும்: -சில கருத்துக்கள். இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம் !எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது.எனது சிறுகதைகளில் பல எஸ்.போ.வை அப்படியே கொப்பி எடுத்ததென்பது உண்மை.ஆனால்,சோபாசக்தி இரயாவுக்குப் பாடிய கல்வெட்டும் அதே எஸ்.போ.வைக் கொப்பியடித்த எழுத்துவடிவமென்பதை நான் அறிவேன்!.இந்தக் கல்வெட்டை இன்று நியாயப்படுத்தும் சேனனின் அரசியல் குறித்து நாம் மௌனித்துக் கிடக்கமுடியாது! உயிரோடிருப்பவனைக் குண்டுகள்கொண்டு கொன்றழிக்கும் இந்தத் தலைமுறையிலிருந்து சோபா சக்தி வருகிறார்.அவரது நியாயத்தின்வழி அவர் இரயாகரனை என்றோ கொன்றொழித்துவிட்டார்.இந்தக் கொலையை இன்றுவரை நியாயப்படுத்தும் சேனன் இன்னொரு கொலைக்கு அத்திவாரம் போடுகிறார்.அந்தத் தெரிவினூடாக மீளவும் இரயாகரனைப் புலம்பெயர் தமிழர்களின் "இன்றைய பெண்ணியத்தின்...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்