Skip to main content

Posts

Showing posts from June, 2024

போரினது நீண்ட தடம்

  போரினது       நீண்ட     தடம்   அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்... அன்புக் குழந்தைகளே! நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை, கவித்துவமற்ற மொழியூடு வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை வழக்கொழிந்த வார்த்தைகளாய்க் கொட்டுவதைத் தவிர நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி ஒளிமிக்க நம்பிக்கையைக் கொணர்வதற்கு எம்மிடம் எந்த மந்திரமுமில்லை இரண்டும் கெட்டான் பொழுதுகளை மெல்ல விரட்டிப் பொழுது புலர்வதற்குள் ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள் முகட்டு உச்சியில் குண்டொலிகளையும் தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள் நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும் குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும் என் செவிகளினூடாகவும் கேட்கிறேன் கண்கள் விரிகிறது அவற்றைப் பார்த்துவிட, எதிர்த்துத் தாக்குவதற்கு - வெறுமை! ஓலமும் எங்கோ நெடும் தொலைவில் பரிகாசிக்கின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக...