Skip to main content

Posts

Showing posts from November, 2011

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பை...

பெயரிலிக்கும் எனக்குமான உரையாடலாக... // அதேநேரத்திலே இரு விடயங்களை நான் தெளிவாக நீங்கள் சொல்லவேண்டுமெனக் கேட்கிறேன்; இயக்கங்கள் எதுவானாலும் உண்மையாக உயிர்களையும் நிகழ்காலவாழ்க்கையையும் இழந்த எத்தனையோ இளைஞர் (இளைஞன் + இளைஞி), மத்தியவயதினர், சார்பான முதியவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்; அதனாலே புலிப்பினாமி புளொட்பினாமி என்று திட்டும்போது, உயிரைக் கொடுத்தவரையும் தேரைக்கொளுத்துகிறவரையும் வகை பிரித்துக் கொஞ்சம் வரையறை செய்வதுதான் நியாயமாகுமா? இல்லையா? இரண்டாவது, /எனது குறிப்புகள். வரலாற்றில் ,"கட்டிப்போட்ட " சிந்தனைக்குட்பட்டு வளர்ந்த இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் இந்தச் சிக்கலைப் புரிந்து மேலெழுவேண்டிய தேவைக்கானவொரு புள்ளியை நான் அண்மிக்க விரும்புகிறேன்./ என்கின்றீர்கள். இதிலே கருத்தார்ந்த தத்துவப்படுத்தலுக்கப்பால், நடைமுறைக்கு என்ன பயன்? ஆற்றுவெள்ளத்திலே ஓடம் கவிழ்கையிலே நீந்தத்தெரியாவிட்டால், பண்டிதரே, அர்த்தசாஸ்திரமும் ஆவிக்குதவாது; தண்டியலங்காரமும் தலைகாக்காது. பின், யாருக்காக, இந்த நோட்டுகளை நாம் வரைந்துகொண்டேபோகிறோம்! "யாருக்காக! இது யாருக்காக! இந்த நோட்டுகள் மார்க்ச...

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள்...

ஊடக வலுவும்,மக்கள் தோல்வியும். த ற்போதைய இலிபிய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.இவற்றையெல்லாம் மக்களுக்கான ஜனநாயகப்படுத்தலெனப் பெரும் ஊடகங்கள் தினமும் சொல்கின்றன. என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற் கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது. இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய,புதிய யுத்தக் களங்களைத் திறக்கிறது.இந்த யுத்தக் ...

தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

யாழ் மையவாதக் குறுந்தேசியம்: வென்றிருந்தால்அஃது, தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு! பு லிகளது கால் நூற்றாண்டுப் பாசிசச் சேட்டைகளுக்குப் பின்பான இன்றைய இலங்கை அரசியலில், பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெற்றுக்கொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதாகக்கொள்ள முடியுமா? புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது.இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கச் சரணாகதியும்,புலம் பெயர் புலிப் பாசிஸ்டுக்களது வெட்டுக்கொத்தும்-கொலையும்இதைப் பலமாக உறுதிப்படு...