பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது !
சந்திரயான் -3 ‘ ம் நம் மக்களும் : பலி ஆடுகள் ! , “ பல்வேறு புரிதலைக் கோரி ”— சிறு சுட்டிக் காட்டல்கள் ! — ப . வி . ஶ்ரீரங்கன் பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘ வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . உருசிய நிலவாய்வுச் செய்மதி இலூனா -25(Luna-25) விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு , இந்திய நிலவு தரையிறங்கும் பணி தீர்க்கமான கட்டத்தில் நுழைந்து , நேற்றுப் புதன் கிழமை 23.08.23 அன்று பாதுகாப்பாக நிலவுத் தரையில் சந்திரயான் - 3 (Chandrayaan-3 ) இறக்கி விடப்பட்டுள்ளது . இதன் , உயிர் வாழும் காலம் இரு கிழமைகளே ! இந...