Skip to main content

கனடா தாயகம் இதழின் அபத்தம் , சிறுபிள்ளை வேளாண்மை : கற்சுறா கடவுளும் அல்ல , கருப்பு ஜூலை கண்ணீருமல்லக் கண்டியளோ ?

 “கற்சுறா கடவுளுமில்லை, கருப்பு ஜூலை கண்ணீரும் அல்ல”  : எந்தக் கடவுளாரும் வர்க்கத்துக்கு அப்~பார்-அல்ல ! 

இலங்கையில் சிங்கள பெளத்த செளனிச அரசபாசிச இன ஒடுக்குமுறையையும் / ஈழப் போராட்ட இயக்கவாத அராஜகம் குறித்தும் கடந்த 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம் . இந்த”தமிழீழம்” எனுங் கருத்தியற் புனைவுக்கும் , அதன் அரசியற் செல் நெறிக்கும் இணைவாக ஒத்துழைத்த அந்நிய தேசங்களது நலன்சார் ஊக்கத்துக்குப் பலியான தமிழ்-இஸ்லாம் , சிங்கள மக்கள் அண்ணளவாக நான்கு இலட்சம் என்பது , மறைக்கப்பட்ட உண்மை !


உட்கட்சிப் படுகொலைகள் ; சகோதர இயக்கப்படுகொலைகள் , >துரோகி—காக்கை வன்னியன்-எட்டப்பன்< புனைவுக் கருத்தியலுக்குப் பலி கொள்ளப்பட்ட தமிழர்கள் ஏராளம்-ஏராளம் . இவைகள் , குறித்து மெளனித்தபடி >கருப்பு ஜூலை—Black July < நினைவு கூர்தலின் அரசியலைப் பேசுதல் என்பது அபத்தம் !


கற்சுறா , அபத்தம் இதழில் உரையாடும் அரசியல் “தமிழீழ அபிமானிகள்” தம் குருதி நாளங்களைப் புடைக்க வைக்கும் ; சிங்கள் அரச வன்முறையை 1977/ 1983 நேரடியாக அநுபவித்தவர்களை (Der gefährliche Aufstieg des buddhistischen Chauvinismus) ; எதிர் கொண்டவர்களைக் கூடக் கலகமடைய வைத்துக் கூச்சப்பட வைக்கும் ! 


1986’ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதம் ரெலோ இயக்கத்தின்( Tamil Eelam Liberation Organisation ) மீதான புலிப் பாய்ச்சல்  அதிக அராஜமுடைய சகோதர இயக்கப் படுகொலையாகும் . இந்த நடவடிக்கையுள் இராணுவமாகப் பயிற்றப்பட்ட 600  ரெலோப் போராளி இளைஞர்கள் வரை 1986’ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள் என்று , அரச/உலக ஆவணங்கள் உரைக்கின்றன !  


83-ஜூலை , சிங்கள அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ; கொதிக்கும் சூடான தார்ப்பீப்பாக்களுக்குள் மூழ்க வைத்துத் தமிழர்களை இலங்கை அரசு கொன்றது . கூடவே , வெலிக்கடைச் சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்களில் 53 தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பின் அதி—உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்  வைத்துச் சக சிங்களக் கைதிகளைக் கொண்டு சிங்கள அரசு  குத்தியும் , வெட்டியும் , கண்களைத் தோண்டியும் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்தது.


1986’ஆம் ஆண்டு புலிகள் , ரெலோமீதான சகோதர இயக்கப்படு கொலை இன்னும் திகில் நிறைந்தது . 


நரவேட்டை செய்த புலிகள் , படுகொலை செய்யப்பட்ட ரெலோப் போராளிகளின் உடல்களை மக்களைக் கொண்டே இரயர் போட்டு எரித்தார்கள் . மக்களும் தம் குழந்தைகளை இரயர் போட்டு எரித்துக் களைத்துப்போன கையோடு கொக்கோ கோலா குடித்தும் , வழங்கியும் மகிழ்ந்தது வரலாறு .இது, கூறும் அரசியல் வெறும் தமிழ்த்  தேசிய -தேச நலன் ; வேளாள ஆதிக்கத் தமிழ்ச் சுயம் அல்ல ! 


இந்த நிகழ்வூக்கத்தின் பின்னான உளவியல் ஊக்கம் என்ன ?


இதன் வரலாற்று நியாயம்/அநியாயம் என்ன புரிதலை நமக்குத் தருகிறது ?


“சிங்களம் -தமிழ் “ இரு மொழிகளுக்குள்ளும் 

சகோதரப்படு கொலைகள் நிகழ்கிறது ; நிகழ்ந்தது .


1971’ஆம் ஆண்டு JVP‘ யின் மீதான இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் உத்தியோக பூர்வமாக 5.000 என்பதை உத்தியோகப் பற்றற்று 50.000 என்று கூற முடியும் —சிங்கள அழகி புஸ்பவதி மனம்பாரியை உரிந்து , “கற்பழித்து” தெருத்தெருவாக அம்மணமாக இழுத்துச் சென்று , சிங்கள இராணுவம் தெருவில் வைத்து எரித்துச் சாம்பலாக்கியது . இதே, இலங்கை அரசின் சிங்கள இராணுவம் தமிழ் மகள் கோணேஸ்வரியைக் “கற்பழித்து” அவள் யோனிக்குள் குண்டு புதைத்து வெடிக்கவைத்தது அவள் யோனியையும் ; உடலையும்  , சிங்கள அரசு . 


1987-1989 வரையான இலங்கை அரசியலுள் பிரேமாதாசவின் தலைமையில் மீள JVP(மக்கள் விடுதலை முன்னணி) மீதான சிங்கள அரசின் வன்முன்றை ஜந்திரத்தின் பாய்ச்சல் , இரு ஆண்டுக்குள் 80.000 சிங்கள இளைஞர்களைக் கொன்று தள்ளிக் களனி கங்கையில் மிதக்க விட்டது ;  பேராதனைப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களைக் கூட்டாகச் சுட்டு JVP அபிமான மாணவர்களெனக் களை எடுத்தது சிங்கள அரசு . இதே அரசு வன்மத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் சிங்களத் தலைவரை (சிங்கள ரோகண விஜயவீர) காலுக்குக் கீழே சுட்டு ,அம்மணமாக்கி அடித்துச் சித்திரவதை செய்து (A rumour circulated that he was taken to a cemetery, shot in the leg and then summarily executed by being burnt alive in the crematorium .) உயிரோடு எரித்துச் சாம்பலாக்கியது , இந்தப் பாசிச சிங்கள அரசின் சிங்கள இராணுவம் . 


இதேபோன்று “அதுராதபுரத்தில் சிங்களத்தின் உச்சி பிளந்து (Operation Ellaalan : The attack happened on 22 October 2007) எல்லாளனைக் காட்டிய பிர~பா~வேலு~கரனுக்கு முள்ளிவாய்க்காலில் உச்சி பிளந்து , கோவணங்கட்டி ; அவன் துணைவி -மகள் முன் கோவணத்தைக் கழற்றிய துட்டக்வைமுனுவைச் சிங்கள அரசு காட்டியது , சிங்கள ஆண்மையை !  


இப்போது , புலி வன்முறை ஜந்திரம் -சிங்கள அரச வன்முறை ஜந்திரங்கள் இரண்டும் ஒரு நிகழ்வுகளைச் செய்துள்ளன . இரண்டுமே , தத்தம் இனங்களின் புதல்வர்களை ஆயிரக்கணக்கில் அழித்துள்ளன. இரண்டும் பிற இனங்களை தாக்கியும் அழித்தன; துரத்தின-நாடு கடத்தின , குடியுரிமை பறித்தன (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க) !


இப்போது சொல்லுங்க என்னங்கடா உங்கள் பிரச்சனை ?


சாதியா , 

மதமா, 

இனமா, 

பிரதேசமா —

“வர்க்கமா ?” 


இங்கு , யார் -யாருக்காக வெட்கப்பட வேண்டும் ? 


கருப்பு ஜூலை நினவு ஏந்தலுடைய வர்க்க அரசியல் என்ன ? 


சாதியை, மதத்தை, இனத்தை, பிரதேசத்தை, பால் வேறுபாட்டைச் சொல்லி சும்மா கடந்து போக முடியாது !


சிங்கள -தமிழ் ஆளும் வர்க்கத்துக்குச் சாதி/மதம்/பிரதேசம் -இனம் ; மொழி உண்டா ? 


ஒடுக்குமுறை வர்க்கத்தை “யாழ் மேலாதிக்கம் , சைவ வேளாளிய ஆதிக்கம் தமிழ்த்தேசிய ஆதிக்கம் “  என்று பார்த்தல் சிங்கள ஆளும் வர்கத்தின் ஆதிக்கத்தையும் , அதன் வன்முறைசார் செல்நெறியையும் , இலங்கை உழைக்கும் வர்க்கத்தின்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் வர்க்க ஒடுக்குமுறையையும் ஊக்கப்படுத்திக் காத்தல் இல்லையா ? 


சிறார் இராணுவம்  ; குழந்தைப் போராளி என்பதை புலிகள் அமைப்பின் குறியீடாக முறித்த பனை மரத்தில் தொங்கவிட்ட இந்தச் சுட்டிகள் ; சொற்பான்கள் கற்சுறா ஆக்கத்திலும் சொல்லும் அரசியல் என்ன ? 


ஐரோப்பிய -அமெரிக்க , ஆசிய , ஆபிரிக்கக் கண்டங்களதும் போராட்ட வரலாறும் ; காலனித்துவ கொடுங் கோன்மையும் சொல்லாத சிறார் இராணுவச் செய்திகளையா தமிழ்ச்சிறார் இராணுவத்தின் குறியீடுகள் பேசுகின்றன ?


கத்தோலிக்கத் திருச்சபைகள் கொல்லாத பழங்குடிச் சிறார்களின் வாழ்வு நாசத்தை விடவா புலிச் சிறார் இராணுவ வாதம் அபாயகரமானது ? இன்றும் , கனடாவிற் பழங்குடிச் சிறார் புதை குழிகள் தோண்டப்பட்டு (Canadian Indian residential school ) வெளியிற் கசியும் இனச் சுத்திகரிப்பைக் கனேடிய அரசு மறைப்புக்கட்ட முனைகிறதே ?


தினமும் கத்தோலிக்கத் திருச்சபைகளும் , தேவாலயங்களுள் , வற்றிக்கானுள் எத்தனை ஆயிரம் சிறார்கள் பாலியல் அடிமைகளாகப் கத்தோலிக்கப் பாதிரிகள் , ஆயர்மார்களால் சிறார் துஷ்ப்பிரயோகம் பல் நூறு ஆண்டுகளாக நிகழும் கொடுமை புரிந்ததா உனக்கு ? . 


இலங்கை-தாய்லாந்துக் கடற்கரைகளுள் எத்தனை இலட்சம் குழந்தைகளை அந்நியச் சுற்றுலாப் பயணிகள் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள் . இவையெல்லாம் கூறும் குழந்தைப்போராளிகள் அரசியல் என்ன ? 


இன்று , உக்கிரைனில் சாகும் ஆயிரக்கணக்கான குழந்தைப்போராளிகள் முதல் அங்கோலாவில் ஏலவே செத்த இலட்சக்கணக்கான சிறார் இராணுவக் குழந்தைகளும் வரை இன்னும் ஞாபகத்துள் வந்தபடி . ஒவ்வொரு மூன்றாவது அங்கோலாக் குழந்தைகளும் அங்கவீனர்களாக்கப்பட்ட அந்நிய யுத்தத்தின் பெயரென்ன ? 


இன்று , உலகத்துள் 164 நாடுகளிற் தடை செய்யப்பட் கொத்துக் குண்டு ( Cluster munition : CBU-87 Combined Effects Munition ; CBU-97 Sensor Fuzed Weapon) பாவிக்க முடியாதென்று உலகமே சொல்லும்போது அதை உக்கிரைனுக்கு அனுப்பிவைத்து, இருஷ்சியக் குழந்தைகளைக் காலம் பூராகவும் வேட்டையாடும் அமெரிக்கனின் அறத்துக்கும் தமிழர்களின் -புலிகளின் குழுந்தைப் போராளிகள் அசியலுக்கும் வித்தியாசம் உண்டா ? 


ஈராக்கின்மீதான அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரத் தடையால் Antibiotic இன்றி  ஈராக்கியச் சிறார்கள் மரித்தார்களே  ; ஐந்து இலட்சம் குழந்தைகள் !! அதையும் , அமெரிக்க அரசு விலைமதிக்க முடியாத பெறுமதி மிக்க தம் அரசியல் வியூகம் என்றதே ! 


ஈராக் பாலுட்ஜா நகரத்தின்(Falludscha) மீதான நேட்டோ இராணுவப்படைகளின் தாழ் அணுக் குண்டுத்தாக்குதலால் (Depleted uranium : The DU penetrator of a 30 mm round) இன்றும் பாலகர்கள் குறைப் பிரவசமாக (Fallujah on cancer, birth defects !!!) இந்தப் பூமிக்கு வருகிறார்களே ?  


அமெரிக்க வானேவித் தாக்குதலைத் துரிதப்படுத்தினான் முன்னாள் அதிபர் ஓபமா . இந்த U.S. Drone Strikes —வானேவித் தாக்குதல்களால் உருக்குலைந்து  செத்த மழலைகள் -சிறார்கள் உலகம் பூராகவும் 4.000 என்பது சர்வதேச மன்னிப்பு சபையின்—Amnesty International அறிக்கையின் தொகுப்பினது சாட்சி . 


ஆக, இப்படி நிறைய எழுதிச் செல்லலாம் . 


இங்கு , சிங்கள இனவாத , பெளத்த பேரினவாத செளனிசத்துக்கு முன் தடுப்பு யுத்தத்தைச் செய்த புலிகள் தம் இருப்புக்காக மக்களை , சிறார்களைப் பலி கொடுத்தது தமிழ் ஆளும் வர்க்க பங்குச் சண்டைக்கே . என்றபோதும் , சிங்கள அரச பாசிசத்தினது தமிழர்கள்மீதான இன ஒடுக்குமுறை இதன் மூலமும் அல்லது, எதன் மூலமும் (சாதி-மத-பிரதேச/தீண்டாமை) நியாயப்பட முடியாது . 


அப்படி , இந்த அரசியலை நியாப்படுத்துபவ(ள்)ன் கெட்ட கிரிமினல் மட்டுமல்ல , மக்கள் விரோதி —ஒடுக்குமுறை அரச பயங்கரவாதத்தின் லொபி —அவ்வளவுதாம் !


—ப.வி.ஶ்ரீரங்கன்      12.08.2023

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...