சமாதானம்,ஜனநாயகம்... உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. "உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusam...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்