இலங்கை அரசும்,ஜோதிட நம்பிக்கைக்கு அப்பாலான சில நகர்வும் சிறு குறிப்பு. "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.அது,தமது தலைமையையே காட்டிக்கொடுத்துக் கொன்றதன்பின்னே இப்போது கதைவிடும் அரசியல் வெளியகத் தமிழீழ அரசென்பதாகவும் விரிகிறது.இந்த நிலையில் தமிழ் ஆளும் வர்க்கத்து இன்னொரு பிரிவு புலிகளது ஐரோப்பியத் தலைமைக்கு மாறாக இலங்கை அரசோடு இணைந்த "மகிந்தாவை நம்பலாமா இல்லையாவென"ச் சரடுவிடுகிறது.இவர்களுக்குள் தமது வாழ்வைப் பறிகொடுத்த தமிழ்பேசும் மக்களது வாழ்வில் துரோகத்தலைமைகளது நெருக்குதலே தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது. இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அன...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்