அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில் தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி! கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது ,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன். இது தமிழ் பேசும் மக்களது வரலாறு. புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது. இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது. மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான க...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்