ஈற்றில், கூட்டாச்சி என்பது நேரப்போக்கிற்கான ஒருவித பேசுபொருளாக மாத்திரம் இருக்கும்நிலைதான் அடையப்பெறும் என்பதை ஏற்பீர்களா? //சுருங்கச் சொன்னால், தமிழர்கள் கூட்டாச்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியும். அதனது நலன்களைப் பேணும் கொள்கையுடைய சர்வதேசத்தினது ஒருவித ஆதரவையும் திரட்டமுடியும். ஆனால், இலங்கை முழுவதிலும் சிங்கள தேரவாத பௌத்தம் தன்னை விஸ்தரித்து, அதனை ஸ்திரப்படுத்துவது தொடரும். ஈற்றில், கூட்டாச்சி என்பது நேரப்போக்கிற்கான ஒருவித பேசுபொருளாக மாத்திரம் இருக்கும்நிலைதான் அடையப்பெறும் என்பதை ஏற்பீர்களா? இது தமிழ் கட்சிகள்தமது நலன்களைப் பேண ஒருவித அரசியலைத் தொடர வழிவகுக்கமாத்திரம் முடியும் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படலாம் அல்லவா?// தனம் வெற்றிவேல் திரு. உதயகுமார் அபிமனசிங்கம் அவர்களின் கேள்வி, ஈழத் தமிழரின் அரசியலின் செல்நெறியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தைத் தொட்டுள்ளது. அவரது , கேள்வியின் மையக் கருத்து, கூட்டாட்சிக் கோரிக்கை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு பேசுபொருளாக மாறி, தமிழ் அரசியல் தனது நலன்களைப் பேணுவதற்கான ஒரு கருவியாக மட்ட...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்