Skip to main content

ரணில் -சஜீத் கூட்டணி , ஐக்கிய தேசியக்கட்சி : Gen-Z அரசியலும் இலங்கையின் புதிய அதிகாரப் போராட்டமும்

 ரணில் -சஜீத்  கூட்டணி , ஐக்கிய தேசியக்கட்சி : Gen-Z அரசியலும் இலங்கையின் புதிய அதிகாரப் போராட்டமும்


Mont Pelerin முதல் அநுரா காலம் வரை


— ப.வி.ஶ்ரீரங்கன்


ஒரு காலத்தில் அரசியல் போராட்டம் என்பது கட்சிகளின் கொடிகளால் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அது தொழிற்சங்கங்களாலும், மாணவர் இயக்கங்களாலும், வர்க்க அமைப்புகளாலும் வடிவமைக்கப்பட்டது. இன்று , அதனுடன் இன்னொரு புதிய அரசியல் சமூக சக்தி இணைந்துள்ளது — Gen-Z.


ஆனால்,  Gen-Z என்பது ஒரு கட்சி அல்ல. அஃது, ஒரு கருத்தியல் அமைப்பும் அல்ல. அது, ஒரே அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒற்றை மக்கள் கூட்டமும் அல்ல. இதுவோ , குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் பிறந்த ஒரு தலைமுறை.


அதன் கோபம் உண்மையானது.


வேலைவாய்ப்பின்மை, வீட்டு விலை, கல்விச் செலவு, வாழ்க்கைச் செலவு, எதிர்காலத்தின் நிச்சயமின்மை, அரசியல் நிறுவனங்களின் மீதான அவநம்பிக்கை ஆகியவை ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்றைய இளைஞர்களை வீதிக்கு அழைத்துவருகின்றன. இவ்ஙாண்டு (2026) ஒக்டோபரில் ஐரோப்பா முழுவதும் பரவிய இளைஞர் போராட்டங்களுக்கும் இத்தகைய பொருளாதார மற்றும் ,  சமூகக் காரணிகளே முக்கிய பின்னணியாக இருப்பதாக ஜெர்மனிய இடதுசாரிகளின் ஊடகங்கள்(Junge Welt : Gen Z regelt )உள்ளிட்ட ஊடகங்கள் பதிவு செய்கின்றன. 


எனவே , முதலில் நாம் ஒரு முக்கியமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்:


Gen-Z’இன் கோபத்தை யாரும் செயற்கையாக உருவாக்க வேண்டியதில்லை.


ஆனால் , அடுத்த கேள்வி அதைவிட முக்கியமானது:


அந்தக் கோபத்தை யார் அரசியலாக்குகிறார்கள்?

அதன் திசையை யார் தீர்மானிக்கிறார்கள்?

அதன் இறுதி அரசியல் பலனை யார் பெறுகிறார்கள்?



இங்குதாம்,  நமது சிந்தனை தொடங்குகிறது. இதுவே , மார்க்சியக் கண்ணோட்டத்தில் மிகமுக்கியமான இயக்கவியற் பண்புக்குட்பட்ட ஆய்வுக் கோட்பாட்டு நகர்வு . நிற்க, 

நாம், மேல் நோக்கி நகர்வோம் . 


1977’ஆம் ஆண்டு : இலங்கையின் பொருளாதாரப் பாதை மாறிய தருணம்


இலங்கையின் நவீன அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள 1977’ஆம் ஆண்டைத் தவிர்க்க முடியாது.


ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான UNP ஆட்சி 1977’இல் ஆட்சிக்கு வந்தபின், இலங்கை முன்பு பின்பற்றியிருந்த கட்டுப்படுத்தப்பட்ட, உள்நோக்கிய பொருளாதார அமைப்பிலிருந்து வெளியேறி, வெளிநோக்கிய சந்தைமயப் பொருளாதாரப் பாதைக்குத் திரும்பியது.


உலக வங்கியின் வரலாற்று ஆய்வும், 1977’ஆம் ஆண்டு நொவம்பரில் UNP அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள் இலங்கையை “inward-looking, closed economy” நிலையிலிருந்து “outward looking and market oriented” பொருளாதாரமாக மாற்றும் நோக்கம் கொண்டிருந்ததாக பதிவு செய்கிறது (The Political

Economy of Poverty, Equity, and Growth Sri Lanka and Mlalaysia —By Henry J. Bruton) . 


இதனை வெறும் ஒரு கட்சியின் தேர்தல் கொள்கை மாற்றமாகப் பார்ப்பது போதாது.


அது , உலகளாவிய பொருளாதாரச் சிந்தனையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தோடு இணைந்திருந்தது.


இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் அரசின் பொருளாதாரப் பங்கு, சமூக நல அரசு, தொழிலாளர் உரிமைகள், திட்டமிட்ட பொருளாதாரம் போன்ற கருத்துகள் வலுப்பெற்றிருந்தன.


அதற்கு , எதிராக உருவான அறிவுசார் வலையமைப்புகளில் முக்கியமான ஒன்றாக Mont Pelerin Society  உலகு தழுவி இருந்தது.

தமிழ்ச்சூழலில் Mont Pelerin Society  என்றால் என்னவென அறியாத பலர் நம்முட் கணிசமான தொகை உண்டு . உலக வங்கி , உலக நாணய நிதியத்தைத் தெரிந்த அளவுக்கு இவற்றைவிட ஆபத்தான Mont Pelerin Society  எனும் அறிவுசார் கருத்தியற் கட்டமைப்பும் அதன் பொருளாதார நகர்வுகளையும் தமிழர்கள் அறியார் . Mont Pelerin Society குறித்து கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்ச் சூழலில் பேசிவரும் நான் மீளவும் , இன்றைய இலங்கையின் நிலவும் அரசாங்கத்துக்கு எதிராக , பதவியிழந்த ஊழல்மிகு எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்துப் பேசுகிறேன் ; புரிபவர்கள் புரிக , இல்லையேல் ஓரம்போங்கள் ! 


Mont Pelerin: ஒரு நிறுவனம் மட்டுமல்ல; ஒரு அறிவுசார் வலையமைப்பு ஆகும் 


1947 ‘ஆம் பிரிடிரீக் காயாக் (Friedrich August von Hayek)தலைமையில் ஜெர்மனிய அன்றைய பொருளாதார மந்திரி இலூட்விக் வில்கெம் ஏர்கார்ட் (Ludwig Wilhelm Erhard ) மற்றும் Maurice Allais, Walter Eucken, Milton Friedman,Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler போன்ற பெரும் பொருளியலாளர்களால் உருவாக்கப்பட்ட Mont Pelerin Society, சந்தைச் சுதந்திரம், தனியார் சொத்துரிமை, அரசின் பொருளாதாரத் தலையீட்டைக் கட்டுப்படுத்துதல் போன்ற கருத்துகளை முன்னெடுத்த அறிவுசார் வலையமைப்பாக வளர்ந்தது.


இதன் உறுப்பினர்களில், அமெரிக்க அதியுச்ச நவலிபரல் பொருளாதாரச் சூரன் Professor Dr. Milton Friedman, James Buchanan போன்ற பின்னாளில் உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்கள் இருந்தனர்.


ஆனால் , இங்கே ஒரு அறிவியல் எச்சரிக்கை அவசியம் , என்று கருதுகிறேன் . அதாவது , 

Mont Pelerin Society’யை “உலக அரசுகளை ரகசியமாக இயக்கும் ஒரு மைய அமைப்பு” என்று வர்ணிப்பது ஆதாரத்தை மீறிய முடிவாகிவிடும் என்பதால் நான் முன்னைய காலத்தில் பிரகடனப்படுத்தியது போதுமானது . தற்போது , இதைவிட்டு நாம் தர்க்கரீதியாகப் புரிவதற்கு முனைவோம் . 


ஆக , இதை ஒரு பரந்த neoliberal intellectual network என்று புரிந்துகொள்வதே சரியானது.


அந்த வலையமைப்பின் உறுப்பினர்கள் பல நாடுகளின் அரசுகள், பல்கலைக்கழகங்கள், think-tanks, ஊடகங்கள் மற்றும்,  கொள்கை நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்தினர். Institute of Economic Affairs வெளியிட்ட வரலாற்று ஆய்வும் Mont Pelerin உறுப்பினர்களில் பலர் அரசுத் தலைவர்களாகவும் , பிரதமர்களாகவும்  இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது; அவர்களில் இலங்கையில் இரணில் விக்கிரமசிங்கேயும் (Ranil Wickremesinghe) குறிப்பிடப்படுகிறார்(SCALING THE HEIGHTS : Thought Leadership, Liberal Values and the History of The Mont Pelerin Society-By Eamonn Butler) . 


ஜெயவர்தன – UNP – திறந்த பொருளாதாரம்


இங்கே , நாம் ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும்.


“மேற்குலகம் UNP’யை உருவாக்கியது” என்று வரலாற்று உண்மையாகச் சொல்ல முடியாது.


ஐக்கிய தேசியக் கட்சியானது (UNP) 1946’ஆம் ஆண்டு உருவான இலங்கையின் சொந்த அரசியல் கட்சி.எனினும் , இக் கட்சியின் தோற்றப்பாட்டுக்கு வல்லரசாகி வந்த அமெரிக்க அரசியல் செல்வாக்குச் செலுத்தியது . 


இந்தச் செல்வாக்கின் நிமித்தம் 1977’க்குப் பிறகு UNP எடுத்த பொருளாதாரப் பாதை, உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த neoliberal பொருளாதாரப் போக்குகளுடன் ஆழமாக ஒத்துப்போனது.


அதுதாம் , முக்கியமான வரலாற்றுச் செய்தி.


அதாவது:


UNP வெளியில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சி என்பதல்ல கேள்வி;

UNP எந்த உலகப் பொருளாதாரக் கருத்தியலுடன் இணைந்தது என்பதே கேள்வி.


இந்த வேறுபாடு மிக முக்கியமானது.


ஏனெனில் , வரலாற்றை “வெளிநாட்டு சதி” என்ற ஒரே சொல்லில் அடைத்துவிட்டால், நமது சொந்த சமூக வர்க்கங்களின் பங்கு மறைந்து விடுகிறது.


ஜே.ஆர்.யிடமிருந்து ரணில்வரை — ஒரு கருத்தியல் தொடர்ச்சி இன்றுவரை உண்டு 


இங்கு , இன்னொரு சுவாரஸ்யமான அரசியல் தொடர்ச்சி தோன்றுகிறது.


ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜெயவர்தனவின் மருமகன் மட்டுமல்ல; ஜே.ஆரின் அரசியல் மரபுக்குள் உருவான UNP தலைமுறையின் பிரதிநிதியும் ஆவார்.


மேலும் , ரணில் விக்கிரமசிங்க Mont Pelerin Society’யின் உறுப்பினராக இருந்ததாகப் பல ஆதாரங்கள் பதிவு செய்கின்றன. 2004’ஆம் ஆண்டு அவர் பிரதமராக இருந்தபோது Mont Pelerin Society இலங்கையில் Kandalama’வில் சிறப்புக் கூட்டம் நடத்தியதாகவும் பதிவுகள் உள்ளன(பக்கம் 62 : The aim of these Special Meetings was to open up new countries to liberal ideas and to scout for potential new members in places where the Society was under-represented, such as Bali, Indonesia (1999), Goa, India

(2002), Colombo and Kandalama, Sri Lanka (2004), Nai robi,Kenya (2007), New Delhi, India (2011) and Fez, Morocco(2012). Alongside the 2011 Regional Meeting in Istanbul . அதே நூல் : SCALING THE HEIGHTS : Thought Leadership, Liberal Values and the History of The Mont Pelerin Society-By Eamonn Butler) . 


இதன் பொருள் என்ன?


ரணில் மேற்குலகின் “கையாள்” என்று உடனடியாக முடிவு செய்வதல்ல.மாறாக ,ரணிலின் பொருளாதாரச் சிந்தனை உலக neoliberal அறிவுசார் வலையமைப்புடன் தொடர்புடையது என்பதே ஆய்வு செய்யக்கூடிய உண்மை.


அதுவே, போதுமான அளவு அரசியல் முக்கியத்துவம் கொண்டது.


2022’ஆம் ஆண்டின்  அரகல (Aragalaya) — மக்கள் கோபமா? அதிகார மாற்றமா?


இப்போது ,மிகவும் சிக்கலான பகுதிக்குள் உங்களை அரைத்துச் செல்ல விரும்புகிறேன் . வாருங்கள் , அந்தக் குகைக்குள் நுழைவோம் . 


2022 ‘இன் இலங்கையின் அரகல (Aragalaya).


அதை , வெளிநாட்டு சதியாக மட்டும் விளக்குவது தவறு. அது முதன்மையாக இலங்கையின் சொந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து உருவான மக்கள் எழுச்சி.பொருளாதார வீழ்ச்சி, எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரத் தடை, விலைவாசி உயர்வு, அரசின் தவறான நிர்வாகம், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை மக்களின் கோபத்தை பெருக்கியன.


Carnegie ஆய்வு Aragalaya’வை அடிப்படையில் organic, spontaneous, leaderless இயக்கமாக விவரிக்கிறது; அதில் பல வயதினரும் இனங்களும் சமூகப் பிரிவினரும் கலந்து கொண்டனர். சமூக ஊடகங்கள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சக்திகள் அதன் இயக்கத்தை வலுப்படுத்தின (Carnegie Stiftung für internationalen Frieden⁠ : The Aragalaya Protest Movement and the Struggle for Political Change in Sri Lanka).


எனவே , அரகலவை (Aragalaya) உருவாக்கியது வெளிநாடு என்று கூறுவது வரலாற்றை அவமதிப்பதாகும்.


ஆனால் , அதற்குப் பிறகு நடந்ததை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.


ஒரு புரட்சியின் விளைவு யாருடைய கையில் விழுகிறது?


Aragalaya’வின் கோரிக்கை “system change”.


ஆனால் , Gotabaya Rajapaksa பதவி விலகியபின் அதிகார வெற்றிடத்தில் யார் வந்தார்?


ரணில் விக்கிரமசிங்க.


அவர் மக்கள் வாக்கெடுப்பில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்வின் மூலம் பதவிக்கு வந்தார்.


இதில் வரலாற்றின் ஒரு முரண்பாடு இருக்கிறது.


ஒரு பக்கம் மக்கள்:


“பழைய அரசியல் அமைப்பே தோல்வியடைந்துவிட்டது”


என்றனர்.


மற்றொரு பக்கம் அந்த அரசியல் அமைப்பின் பழைய, நீண்டகால UNP தலைவர்களில் ஒருவரான ரணில், அதே நெருக்கடியின் இடைவெளியில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார்.


இதுவே , அரசியல் இயக்கங்களின் ஒரு அடிப்படைப் பிரச்சினையை நமக்குக் காட்டுகிறது:


மக்கள் ஒரு ஆட்சியை வீழ்த்தலாம்;

ஆனால் , அந்த வீழ்ச்சிக்குப் பின் அதிகார வெற்றிடத்தை நிரப்புவது யார் என்பதை மக்கள் இயக்கம் தானாகவே தீர்மானிக்காது.


அதற்குத் தயாராக இருக்கும் நிறுவனங்கள், கட்சிகள், அரசியல் வர்க்கங்கள் மற்றும், பொருளாதார சக்திகள் அந்த வெற்றிடத்திற்குள் நுழைகின்றன.இதுதாம் ,சமீபத்தில் சிலியிலும் (Referendum 2023 : Chilenen stimmen gegen neue Verfassung ) நடந்தது , கிரேக்கத்திலும் நடந்தது . 


என்றபோதும் , இலங்கையில் வரலாறு ரணிலின் விருப்பப்படி செல்லவில்லை என்பது கவினிக்கத் தக்கதே .


இங்குதாம் , மிக முக்கியமான திருப்பம்.


Aragalaya ரணிலை ஆட்சிக்குக் கொண்டு வந்தது என்ற ஒரே வரியில் வரலாற்றை முடிக்க முடியாது.

ஏனெனில் , 2024 தேர்தலில் மக்கள் மீண்டும் பாரம்பரிய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினர்.


அநுர குமார திசாநாயக்கவும் NPP’யும் ஆட்சிக்கு வந்தனர்.


Carnegie ஆய்வு இதை இலங்கையின் நீண்டகால அரசியல்-பொருளாதார establishment’க்கு எதிரான வாக்காளர்களின் மிகப்பெரிய நிராகரிப்பாகக் குறிப்பிடுகிறது. (Carnegie Stiftung für internationalen Frieden⁠)


இதன் மூலம்    ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது:


Gen-Z அல்லது இளைஞர் அரசியலை ஒரு neoliberal திட்டத்தின் கீழ் நேரடியாக ரணிலிடம் கொண்டு வந்து சேர்க்கலாம் என்ற எளிய கணக்கு இலங்கையில் வேலை செய்யவில்லை.


மக்களின் அரசியல் எதிர்வினை எதிர்பாராத பாதைகளிலும் செல்லக்கூடும்.


இப்போது , ஐரோப்பாவில் Gen-Z எழுச்சி


2026’ இல் ஐரோப்பாவின் பல நாடுகளில் இளைஞர் போராட்டங்கள் புதிய தீவிரத்தைப் பெற்றுள்ளன.


பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், அல்பேனியா, செர்பியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இளைஞர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.


அவர்களின் கோரிக்கைகள் ஒன்றல்ல.

ஆனால் , சில பொதுவான காரணிகள் இருக்கின்றன . அவை யாவன ? : 


வாழ்க்கைச் செலவு

வீட்டு வாடகை

கல்வி

வேலைவாய்ப்பு

குறைந்த வருமானம்

எதிர்கால நிச்சயமின்மை

அரசியல் அமைப்புகளின் மீதான நம்பிக்கையின்மை

தலைமுறை சமத்துவமின்மை


ஜெர்மனிய பிராதான ஊடகங்களின் ஒக்டோபர் அலசல்கள் , கடந்த வாரம் இதே காரணிகளைச் சுட்டுகிறது(Spiegel Online) .


ஜெர்மனியிலும் ஒக்டோபர் 31 அன்று 100,000’க்கும் மேற்பட்டோர் கல்வி, வாழ்க்கைச் செலவு, சமூக முதலீடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டதாக சமீபத்திய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (Financial Times⁠)


ஆனால் , இங்கு நாம் தவறக்கூடாத மிகப்பெரிய உண்மை


இந்த ஐரோப்பிய Gen-Z போராட்டங்களை:


“Liberal parties திட்டமிட்டு நடத்துகின்றன”


என்று நிரூபிக்கும் போதுமான ஆதாரம் இப்போது இல்லை.மேலும் , இவை அனைத்தும் ஒரே இயக்கமுமல்ல.


சில இடங்களில் இடதுசாரிகள் கலந்து கொள்கின்றனர்.


சில இடங்களில் தொழிற்சங்கங்கள்.


சில இடங்களில் மாணவர்கள்.


சில இடங்களில் housing movements.


சில இடங்களில் anti-corruption இயக்கங்கள்.


சில இடங்களில் வலதுசாரிகளும் அந்த அதிருப்தியைத் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கின்றனர்.


அதனால்,  Gen-Z = Liberal project என்று சமன்பாடு போடுவது தவறானது.


என்றபோதும் , அதைவிட ஆழமான கேள்வி ஒன்றுள்ளது:


ஒரு தலைமுறையின் உண்மையான சமூகக் கோபத்தை பல்வேறு அரசியல் சக்திகள் தங்கள் திட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்துகின்றன?


இதுதாம் , நாம் ஆராய வேண்டிய கேள்வி.


இலங்கையில் அதே மாதிரி ஒன்று நிகழ முடியுமா?


இலங்கையில் ஏற்கனவே ஒரு பெரிய இளைஞர் எழுச்சி நடந்துவிட்டது.


Aragalaya.


அந்த இயக்கம் அரசியல் அமைப்பின் மீது இளைஞர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது.


NBR’ன் சமீபத்திய ஆய்வு குறிப்பிடுவது போல, Aragalaya-க்குப் பிறகும் இலங்கையில் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் civic activism தொடர்கிறது. அதே ஆய்வு, Aragalaya’வில் முன்னணியில் இருந்த பல இளைஞர்கள் நேரடியாக NPP அரசாங்கத்திற்கோ பிரதான எதிர்க்கட்சிகளுக்கோ செல்லவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது(The National Bureau of Asian Research) . 


இதன் பொருள்:


இலங்கையில் ஒரு புதிய தலைமுறை அரசியல் subject உருவாகியுள்ளது.


அதை யார் வழிநடத்துவார்கள் என்பது இன்னும் திறந்த கேள்வி.


ரணில் மீண்டும் ஏன் முக்கியமாகிறார்?


ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி அல்ல.


ஆனால் , அவர் இலங்கையின் பழைய neoliberal அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முகம்.


மேலும் , அவர் Mont Pelerin Society’யுடன் தொடர்புடையவர் என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. (Institute of Economic Affairs⁠)


அவரது அரசியல் மரபு, உலக நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறன், மேற்கத்திய அரசியல் மற்றும், பொருளாதார வட்டாரங்களுடனான நீண்டகால தொடர்புகள் ஆகியவை அவரை ஒரு குறிப்பிட்ட வகையான அரசியல் திட்டத்தின் பிரதிநிதியாகப் பார்க்க வழிவகுக்கின்றன.


ஆக, இதிலிருந்து:


“ஐரோப்பிய liberal கட்சிகள் ரணிலைப் பயன்படுத்தி இலங்கை Gen-Z’ஐ அநுராவுக்கு எதிராக இயக்குகின்றன”


என்று நேரடி முடிவை நாம் எடுப்பதற்கு ஆதாரம் தேவையாக இருக்கிறது . என்றபோதும் , ஆதாரங்களை வைத்து எதுவும் நடப்பதில்லை . 


அந்த ஆதாரம் தற்போது நமக்குக் கிடைக்கவில்லை.


எனவே , இக் கட்டுரையின் ஆய்வு நேர்மை இங்கே ஒரு வரம்பை விதிக்கிறது.


ஆனால் “அரசியல் appropriation” என்பது வேறு விஷயம் 


ஒரு இயக்கத்தை உருவாக்குவதும்,


ஒரு இயக்கத்தின் கோபத்தைப் பயன்படுத்துவதும்,


இரண்டு வேறு விஷயங்கள்.


ஒரு இளைஞன் உண்மையாகவே:


“எனக்கு வேலை இல்லை.”


என்று போராடலாம்.


மற்றொருவர்:


“எனக்கு வீடு வாங்க முடியவில்லை.”


என்று போராடலாம்.


மூன்றாவது:


“என் எதிர்காலம் இல்லை.”


என்று போராடலாம்.


இவைகள் , அனைத்தும் உண்மையான சமூக முரண்பாடுகள்.


ஆனால் , ஒரு அரசியல் கட்சி அந்த முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு:


“இதற்குக் காரணம் இந்த அரசு; எங்களை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்”


என்று அரசியல் மொழியாக மாற்றலாம்.


இதுவே , appropriation of social anger.


மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் இது மிக முக்கியமான பகுப்பாய்வுக் கருவி.


Gen-Z-யை இடதுசாரிகளும் பயன்படுத்தலாம்; வலதுசாரிகளும் பயன்படுத்தலாம்; neoliberal-களும் பயன்படுத்தலாம்


இங்கே , இன்னொரு ஆழமான உண்மையை நாம் பார்க்க வேண்டும்.


Gen-Z தானாகவே இடதுசாரி அல்ல.


Gen-Z தானாகவே liberal அல்ல.


Gen-Z தானாகவே புரட்சிகரமும் அல்ல.


அது ஒரு வரலாற்றுத் தலைமுறை.


அதன் அரசியல் உள்ளடக்கத்தை எந்த வர்க்கம், எந்த அமைப்பு, எந்த கருத்தியல் நிரப்புகிறது என்பதே தீர்மானிக்கும்.


அதனால் , இன்றைய அரசியல் போராட்டத்தின் உண்மையான கேள்வி:


“Gen-Z யாருடையது?”


என்பதல்ல.


மாறாக:


“Gen-Z இன் உண்மையான சமூகக் கோபத்தை யார் எந்த வர்க்க அரசியல் நோக்கத்திற்காக மொழிபெயர்க்கிறார்கள்?”


என்பதாகும்.


அநுரா அரசுக்கு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்


இதனால் , அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒரு மிகப்பெரிய சவால் உருவாகிறது.


இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்க முடியவில்லை என்றால், அவர்கள் அரசியல் ஆதரவை இழக்கலாம்.


வேலைவாய்ப்பு இல்லாமல்,


கல்வி வாய்ப்புகள் குறைந்து,


வாழ்க்கைச் செலவு உயர்ந்து,


வீட்டு வசதி சாத்தியமின்றி,


சமூக எதிர்காலம் இருண்டதாகத் தோன்றினால்,


“system change” என்ற நம்பிக்கையே மீண்டும் எதிர்ப்பாக மாறலாம்.


அப்போது அந்த எதிர்ப்பை யார் கைப்பற்றுவார்கள் என்பதே அரசியல் கேள்வியாகும்.


அதனால் , ரணிலைப் பார்க்க வேண்டிய சரியான கோணம்


ரணிலை ஒரு “சதியின் தலைவன்” என்று பார்க்க வேண்டியதில்லை.


அதைவிட அரசியல் ரீதியாக ஆழமான ஒரு பார்வை இருக்கிறது:


ரணில் ஒரு மனிதர் மட்டுமல்ல; ஒரு அரசியல்-பொருளாதார மரபின் பிரதிநிதி.


அந்த மரபின் அடிப்படைச் சொற்கள்:


சந்தை

தனியார்மயமாக்கல்

வெளிநாட்டு முதலீடு

நிதி ஒழுங்கு

உலகமயமாக்கல்

IMF

கடன் மறுசீரமைப்பு

அரசின் பொருளாதாரப் பங்கு குறைதல்


என்பவையாகும்.


அந்த அரசியல் மரபு தோல்வியுற்றாலும் அது மறைந்து விடாது.


அது புதிய முகங்களையும் புதிய மொழிகளையும் தேடும்.


இதுவே, neoliberalism’இன் அரசியல் நெகிழ்வுத்தன்மை.


அதனால் என்ன , அடுத்த கட்டப் போராட்டம் “இளைஞர்கள் vs அநுரா” என்று இருக்க வேண்டிய அவசியமில்லை


இது , மிக முக்கியமான எச்சரிக்கை.


ஒரு அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக இளைஞர்கள் போராடுவது ஜனநாயக உரிமை.


அதை “வெளிநாட்டு சதி” என்று சொல்லி நிராகரிப்பதும் தவறு.


அதேபோல் அந்த இளைஞர் கோபத்தை யாராவது வெளிப்புற அரசியல்-பொருளாதார நலன்களுக்காகப் பயன்படுத்தினால், அதை விமர்சிப்பதும் ஜனநாயக உரிமையே.


எனவே நமக்கு வேண்டியது:


இளைஞர் போராட்டத்திற்கு எதிரான அரசியல் அல்ல;

இளைஞர் போராட்டத்தின் அரசியல் appropriation’னைப் புரிந்துகொள்ளும் அரசியல்.


மார்க்சியப் பார்வையின் உண்மையான பணி


மார்க்சியம் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் ஒரு “இரகசிய அமைப்பை” தேடுவதல்ல.


அதன் வலிமை வேறு இடத்தில் உள்ளது.


அது கேட்கும் கேள்விகள்:


உற்பத்தி உறவுகள் என்ன?

வர்க்க நலன்கள் என்ன?

மூலதனத்தின் இயக்கம் எங்கே?

அரசியல் அதிகாரம் யாரிடம்?

கருத்தியல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

மக்களின் உண்மையான துயரம் எவ்வாறு அரசியல் மொழியாக்கப்படுகிறது?

அந்த அரசியல் மொழியால் இறுதியில் யார் பயன் பெறுகிறார்கள்?


இதுவே நமக்கு வேண்டிய ஆய்வு.


இறுதியாக, 


1977’ஆம் ஆண்டானது , இலங்கையின் பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனை.


அந்தத் திருப்பத்தின் பின்னால் இருந்த உலகளாவிய neoliberal சிந்தனையின் முக்கிய அறிவுசார் வலையமைப்புகளில் Mont Pelerin Society ஒன்றாக இருந்தது.


ஜே.ஆர். ஜெயவர்தனவின் திறந்த பொருளாதாரப் பாதையிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவின் neoliberal அரசியல் வரை ஒரு கருத்தியல் தொடர்ச்சியை அடையாளம் காண முடியும்.


ரணில் Mont Pelerin Society’யின் உறுப்பினர் என்பதும், அவர் பிரதமராக இருந்த காலத்தில் 2004’ இல் அந்த அமைப்பு இலங்கையில் சிறப்புக் கூட்டம் நடத்தியதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (Institute of Economic Affairs⁠)


ஆனால், அதிலிருந்து “மேற்குலகம் இலங்கை Gen-Z-ஐ இப்போது ரணிலின் மூலம் அநுராவுக்கு எதிராக இயக்குகிறது” என்று முடிவு செய்வது தற்போதுள்ள ஆதாரங்களை மீறுவதாக இருக்கும்.


அதற்குப் பதிலாக எனக்குக் கிடைக்கும் ஆழமான முடிவு இதுதான்:


மக்களின் கோபம் உண்மையானது;

ஆனால் , அந்தக் கோபத்தின் அரசியல் திசை இயற்கையானது அல்ல.

அதை பல்வேறு வர்க்கங்களும், கட்சிகளும், நிறுவனங்களும், ஊடகங்களும், சர்வதேச வலையமைப்புகளும் தங்கள் நலன்களுக்கு ஏற்ப வடிவமைக்க முயல்கின்றன.


2022 Aragalaya இதற்கான இலங்கை அனுபவத்தை ஏற்கனவே நமக்குக் காட்டியுள்ளது. அந்த இயக்கம் உண்மையான மக்கள் எழுச்சி; ஆனால் , அதன் பின்னர் ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தை ரணில் நிரப்பினார். பின்னர் 2024’்இல் அதே அரசியல் அதிருப்தி பாரம்பரிய establishment’ ஐ நிராகரித்து அநுரா–NPP-க்கு வெற்றியைத் தந்தது. 


எனவே வரவிருக்கும் அரசியல் மோதலை:


“ரணில் vs அநுரா”


என்ற தனிநபர் மோதலாகப் பார்க்கக்கூடாது.


அதற்குக் கீழே இன்னொரு ஆழமான மோதல் இருக்கிறது:


“ஒரு தலைமுறையின் உண்மையான சமூகக் கோபத்தை யார் அரசியலாக்கப் போகிறார்கள்?”


இதுதாம் , எதிர்கால இலங்கை அரசியலின் முக்கியமான கேள்வி.


Gen-Z ஒரு அரசியல் ஆயுதமாக மாறுமா?


அல்லது, 


Gen-Z தன்னுடைய சொந்த சமூக வர்க்க அனுபவத்திலிருந்து ஒரு புதிய ஜனநாயக அரசியலை உருவாக்குமா?


அதற்கான பதில் இன்னும் எழுதப்படவில்லை.


அந்தப் பதிலை எழுதப்போகிறவர்கள் — அந்தத் தலைமுறையே.


—ப.வி.ஶ்ரீரங்கன் 

03.11.2026 

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்... >>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது. மண்ணின் மக்களுக்கே வேலை ஈரோட்டில் எழுச்சி மாநாடு வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன. இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும். வேலை இல்லாத த...