Skip to main content

Posts

Showing posts from September, 2015

எது பயங்கரவாதம்?

அதிகாரம் என்பது வியூகமாகுமா? உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை  அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும்  நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில்....