Skip to main content

Posts

Showing posts from February, 2006

சமூக மனிதர்கள்!

சமூக மனிதர்கள்! "நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும், குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும் எந்நேரமும் போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றியமையாதவை..."- டோல்ஸ்டோய். நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி... என்னதாம் நமது பிரச்சினை? எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா? எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது? மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் ச...

சில குறிப்புகள்...

குறிப்பு:1 எனக்குச் சில நேரங்களில் தமிழ்ச் சனத்தின்மீதான கோபம் என்மீதாகவே வரும்.அந்த நேரங்களில் அதிகமாக விஸ்க்கி அருந்துவேன்.அப்படியருந்திவிட்டு மல்லாந்து எங்கவாவதொரு தெருவில்"கூரையற்றவர்கள்"போன்றே நானும் என்பதாகச் சரிந்து... இந்தக் காலம் குளிராகிறது.எங்கள் தேசச் சனங்களின் "எளிய"மனத்தை எண்ணிய போதெல்லாம் பாரதியின் பாடலொன்றே எண்ணமெல்லாம் நிறைந்து கொள்ளும்! "சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச் செத்திடுவார் ரொப்பாவார்,சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம். தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார் சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச் செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்..." இந்தப்பாடலை அவன் யாத்தபோது அவனுக்கு வயது வெறும் முப்பதே கடந்திருந்தது!இப்போத நமக்கு அறுபது கடந்தாலும் வாழ்வைப்பற்றிய உண்மை புலப்படவில்லை.என்ன நம்ம சனங்கள்!ஏதுசெய்தும் பிறன்வதைசெய்து, பிறவுள் நினைவு புகுத்தித் தீராது வன்மம் கொண்டலையும் மனிதாராகித் தமிழ்பேசிப் பயன் யாது? இந்த வ+ப்பெற்றாலில் ஒரு ஆசியன் கடையை எனக்குத் தெரிய பலர் நடாத்தி...