Skip to main content

Posts

Showing posts from November, 2009

நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது...

அச்சமுடையவர்கள், அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்! ம னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?   நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?   இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?   உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.   உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த " மேல்நிலையை "(Übermensch)உருவகப்படுத்துகிறது.உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.   நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தட...

சமூக விரோதிகளின் திசையமைவு

உண்மைகளை இனங்காணும் பாதை...     க னவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணையிழந்து புகலிடம் தேடிய வாழ்வு, தாயகத்தை நோக்கிய திசையில்...   யார் யாருக்காகவோ மனிதர்கள் செத்தார் நம்மிடம்.   நாடு பிரிப்பதற்காய்ப் போராடி அனைத்தையும் இழந்து அடிமைப்பட்ட இனம்,பணத்தைக் குறிவைத்தும்,பதவியைக் குறிவைத்தும் எமக்கு எகத் தாளமாய் அரசியல் சொல்கிறது.கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மனிதர்கள் குறித்து அது மீளவும் நியாயப்படுத்துகிறது.இதுவரையான கொலைகளுக்கு உடந்தையானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.   சமூக விரோதிகளின் திசையமைவு:     இத்தகைய கொலைஞர்கள் கட்டியமைக்கும் "தமிழர் நல அரசியல்" என்பது இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும் மக்களை ஒட்டச் சுரண்டும் கயமையோடு,அவர்களது அறிவை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசிய வெறியை மீளவூட்டுவதாக இருக்கும்.இதற்காகப் பிரபாகரனை மீளத் துதிப்பதிலிருந்து இது ஆரம்பிக்கப் போகிறது.வரும்"மாவீரர்"நினைவு நாட்கள் இத்தகைய தெரிவின் முன்னே கட்டமைக்கப்படுகிறது.   துதி ப...

கிழக்கு ஜேர்மனியின் மதில்கள்...

மதில்கள் வீழ்ந்தன...     மக்களுக்கும், தமக்கும் இடையில் இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள் , ஐரோப்பா, கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு புதிய உலகைத் திறந்ததென.     சுதந்திரம்,சகோதரத்துவம், ஜனநாயகம் தமது புதிய உலகத்தின் அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.     இரும்பு வேலிக்குப் புறமாக மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட மக்கள்முன் மதில்கள் அமைத்துத் தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!     இவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்க மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...   எல்லாஞ் சரிதாம்!   எதற்க்கெடுத்தாலும் அமைதி சமாதானம்,சகோதரத்துவம், ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள் யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?     எல்லோருக்குமான ஒரு வீதியில் யாரோ சிலர் கார் ஒட்ட அடைப்புகள் இட்டார்கள். பின்னாளில், வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.     இதை, ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள். எனக்கும்,எனது கூட்டத்துக்கும் நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள் நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!     பழை...

நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.

மக்களைக் கருவறுக்கும் பணச் சேகரிப்பு அரசியல்   நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள் பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...   "தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள் உள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.   என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.     ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.   இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும்,...