Skip to main content

Posts

Showing posts from April, 2005

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...

அன்புக் குழந்தைகளே!

இந்தக் கவிதையை 'இதுவரை கொலையாகிய- இனிமேலும ;கொலையாகப்போகும்' அனைத்து மனிதர்களுக்கும் என் இரங்கலாகச் சமர்ப்பிக்கிறேன்: அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்... அன்புக் குழந்தைகளே! நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை, கவித்துவமற்ற மொழியூடு வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு எம்மிடம் எந்த மந்திரமுமில்லை இரண்டும் கெட்டான் பொழுதுகளை மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள் ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள் முகட்டு உச்சியில் குண்டொலிகளையும் தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள் நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும் குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும் என் செவிகளினூடாகவும் கேட்கிறேன் கண்கள் விரிகிறது அவற்றைப் பார்த்துவிட, எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை! ஓலமும் எங்கோ நெடும் தொலைவில் பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி இந்த ...

மறைக்கப்பட்ட

மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட வரலாறு மௌனிக்காது... இனியும் அழவேண்டாம் சோதரி(கள்) நற்கீரன்-வெங்கட் தந்த செய்திகளின் தூண்டுதலால்... இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள். ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது. இரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிற...

ஜேர்மனிய ஊடகங்களும் கிட்லரின் வாரீசுப்போப்பும்

ஜேர்மனிய ஊடகங்களும் கிட்லரின் வாரீசுப்போப்பும் கடந்த 19.04.2005 குறிப்பொன்றில் புதிய போப் பெனடிக்16 நாசிய மாணவனென்றும்,அவன் தொடர்ந்த பாதையானது மனித விரோதப்பாதையெனவும் சுட்டிக்காட்டினோம்.இதை பெரும்பாலானவர்கள் புரிந்தார்களோ அல்லது விடுபேயனின் குறிப்பென ஒதுகப்பட்டதோ தெரியாது.எனினும் இன்னொரு குறிப்பையெழுதுவதில் மீளவும் எமது முயற்சி முனைப்பிட்டபடியே... இன்றிருக்கும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்சூழல் நமது சமூகப்பிரக்ஜைமீது பாரிய செல்வாக்கைச் செலுத்துகிறது.இதன் அருட்டலில் நமக்கான விருப்புறுதி உளமானது நேரத்தின் அதிகபட்ச ஒத்துழைப்போடான ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீளும்போதே சற்றெதையாவது செய்யத்தூண்டுகிறது.இந்த அதீத ஜந்திரத்தனமான உலகில் நொறுக்குத்தீனி எழுத்துக்களே விருப்பத்துக்குரிய ஜேர்னலிசமாகியுள்ளதால் எம்மால் சமுதாயத்தின்பாலான நோக்குநிலையிலிருந்து ஒன்றைச் செய்துகொள்ள முடியாதுள்ளது.இது நம்மீது பாரிய எஜமானயாகிய இந்த வர்த்தகச் சமுதாயத்தின் அழுத்தினால் உருவாக்கப்பட்ட சமூகச் சூழலே! இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந...

போப்பாகிய இனவாதியும்

போப்பாகிய இனவாதியும் ஆதிக்கக்காரனும் இன்றைய உலகமானது பயங்கரமான சதிகார உலகமாகும்.இந்த உலகம் மனிதாபிமானமுள்ள எந்த மனிதருக்கும் வாழ்வதற்குதவாத- திமிர்த்தனமான ஆதிக்கச் சக்திகளின் கரங்களில் விழுந்துகிடக்கிறது. இது நல்லதன் அறிகுறியல்ல.இந்தப் பூமிப்பந்து தலைகீழாகச் சுற்றினாலம் சுற்றுமேதவிர ஒரு வெள்ளையினமற்ற மனிதர் அமெரிக்காவுக்கு அதிபராகவோ அல்ல போப்பாகவோ முடியாதென்பது மீளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது! முடியுமா? ஏன் முடியாது, நாமெல்லோரும் வரலாமே! மதநம்பிக்கையுடைய வெள்ளையர்களற்ற மானுடர் கூறுகின்றார். சாத்தியமா? இல்லவே இல்லை! இன்று வெளியாகிய செய்தியைக் கண்டு துள்ளிக் குதித்த ஜேர்மனியர்கள் " Ein Deutscher ist Papst!wir sind stolz.Deutschland Jahuuu" ( ஒரு டொச்சுக்காரர் போப்பாகிவிட்டார்,நாங்கள் பெருமையடைகிறோம்,ஜேர்மனி ,யாகூகூகூகூ..) என்று பெருமிதம் கொள்வதும்,எம்பிக் குதிப்பதும்-கைகளை உயர்த்திப் பலத்தைக்காட்டத் தசைநாரைப் புடைக்க வைப்பதும் ,பழைய ஆதிக்க மனதின் அதிகூடிய விருப்புறுதிதாம்.என்றபோதும் மானுடர்கள்தம் வாழ்வின் மகத்துவத்திற்கான மதங்களெனும் பொய்மையை நாம் இன்றையகூத்தில் மட்டும் காணவில்ல...

ஒரு மின்னஞ்சலும் நான் பட்டபாடும்...

ஒரு மின்னஞ்சலும் நான் பட்டபாடும்... நேற்றிரவு ஒரு மின்னஞ்சல் என்னைத் தூங்க விடவில்லை,ஒவ்வொரு பொழுதும் ஏதோவொரு மாதிரித் தப்பிக்கொண்டிருந்தேன், அதற்காக மாதா மாதம் ஐந்து யூரோ போய்விடுகிறது(Anti Virenschutz).எனினும் நேற்றுத்திட்டமிட்ட ஒருவரின்-பலரின் முயற்சி அவர்களுக்கு வெற்றியளித்திருக்க நான் தூக்கம் தொலைத்தேன்.இரவு நடுவிரவாகிப் பின்பு அதிகாலையாகியும் நான் போராடியும் வெற்றிபெற முடியவில்லை. நானோ கணினி குறித்த துறையில் மந்திகையிலும்-அங்கொடையிலும் இருப்பவர்களின் நிலையிலிருப்பதால்- இலகுவாக இருப்பதெல்லாம் கடினமானதாகத் தெரிகிறது. ஏவிய வைரசுப் பொட்டலம் என்னைத்தாக்கிவிட்டு'sorry'என்பது என்ன நியாயம்? அனுப்பியவர்-பெறுபவர் இருவரும் ஸ்ரீரங்கன் என்றபடி வந்த அந்த இயமன் எனது கணினியின் சகல செயற்றிறனையும் முடக்கியபின் என்னத்தைச் செய்ய முடியும்?விடியலில் கணினியைக் காவிச் சென்று அங்கே-இங்கேயென்றலைந்து பூனையும் குட்டியும் போன்று நான் வியர்த்தேன். 'எனக்குக் கண்தெரியுதில்லை,கண்ணாடி வேண்டித்தரச் சொல்லி எவ்வளவு காலமாச்சு! உன்ர கொம்யூட்டருக்குக்கோதாரியெண்டால் உடனே பறக்கிறாய்.'-துணைவி. தேவையா? கிழம...

எரியும்

எரியும் மனமும் ஒளிரும் நினைவும். பொழுது... இந்த கணினியும் நானும் சில பொழுதுகளில் வெறுப்பாவதும்-அனைத்தையும் விட்டுத்தள்ளி சன்னியாசியாகிச் சாலைகளில் கையேந்தித் திரிந்தாற்கூட தேவலையென்ற மனவலி, எவ்வளவு காலத்துக்குத்தாம் இந்த அகதிவாழ்வு? ஒருபொழுதேனும் ஒன்றிக் கொள்ள முடியாத புறச் சூழல்... வலிந்து பல்லிளித்தாலும் பதிலுக்குக்கூட நம்மை அங்கீகரிக்காத வெள்ளைத்திமிர்.எத்தனை நாட்களாக எனது தோளில் தத்தித் தாவி என்னை வருத்துகிறது! கோடை அரும்பி குளிர்காலக்கொடுமையின் மரிப்பில் தேசம் தொலைத்த இந்த மனிதனின் நித்தியமான கனவுகள் பறவைகளின் இசைப்பொலியில் மென்மேலும் வலியவுணர்வைக் கூட்டி வந்தபடி, மக்கியொழுங்கையும்-கிடுகுவேலியும்,வான்முட்டும் பனையையும்-செம்பு நீரையும் மனம் அவாவுற்றபடி. நேற்றுக்கூட சக தொழிலாளி; வஞ்சக வார்த்தைகளால் மேலுமொரு வலியை என் உணர்வுக் குவளையிற்கொட்டிவைத்தான். ' கலோ சிறி,நேற்று நீ டி.வி. பார்த்தாயா?, ஒரு கருப்புக் கார்டினாலை எல்லோரும் மண்டியிட்டு வணங்கினார்கள்.' நான் திகைத்துப்போனேன்.என்னத்தை அவனோடு பேசிவிட? கார்டினால்களை எல்லோரும்தாம் தலைதாழ்த்தி வணங்கினார்கள்,இவனோ 'கருப்பு'எ...

.பொதுவுடமைவாதம் :2

.பொதுவுடமைவாதம் சில குறிப்புகளும்- -தேசியமும் (பகுதி:2) 'பத்து ;லட்சம் மக்களது வாக்குரிமையைப் பறிதத் குடியுரிமைச் சட்டத்தாற் செய்ய முடியாததை, அரசின் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கத் தவறியதை,அரசின் மொழிச்சட்டங்கள் செய்யத் தவறியதை, அரசின் தரப்படுத்தற் திட்டம் ஏற்படுத்தியது.அது இளைஞர்களைத் தனிநாடுகேட்கும் நிலைக்குத் தள்ளியது. சீரமைதிக்குமுடைய தமிழர் வரலாற்றில் ஒரு புதிய யுகம் ஏற்பட்டது' -இ.இரத்தினசபாபதி இந்தத் தத்துவ வாதியின் மார்க்சியப்புரிதலில் எனக்குச் சந்தேகம் உண்டு.இங்கே யாருக்காகவும் நாம் உண்மைகளை மறைக்கத் தேவையில்லை.நடந்த முடிந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து எந்தவொரு ஆய்வையும் செய்து கொளள்முடியாதுதாம். ஆனால் அந்தந்தச் சூழலில் நிலவிய-உந்தித் தள்ளிய சமூகக்காரணிகள்,கண்ணிகளை இனம் காண்பதும்,அதனூடாய் சமூகத்தில் இயங்கிய சக்திகளின் இயங்கு திசையை நிர்ணயஞ் செய்த உந்து சக்திகளை-அவற்றை முன் தள்ளிய வர்க்கத்தின் நலனின் அக்கறையெதுவாக இருந்ததும்- இன்றைய நோய்வாய்ப்பட்ட சமுதாய உளவியலை இனம் காண முக்கியமாகின்றன. இந்த நோக்கு நிலையிலிருந்து நாம் மார்க்சியத்தை தனிமைப்படுத்திய காரணிகளையும,அதனூடா...

மேய்ப்பரின் மேன்மைகள்...

மேய்ப்பரின் மேன்மைகள்... கைலாகும் கவிதையான வரவேற்பும் கனிவுமொழியும் கருவறைக் கோட்டைக்குள்ளே இயற்கை கோலமிட்ட பூ வெளியில் எதிரெதிர் வர்ணங்களாய் எழுதியுள்ள கொடுமை மேய்ப்போரின் மேன்மை சொல்லி மேனினுடங்கிப் பிராத்தித்துக்கொள்வோரே! கூப்பிடுதூரத்தில் அதோ உங்கள் கோவணங்கள் களையப்படுகிறதே ஓ இறையினது தரிசனத்துக்கான முன்னோட்டமென்கிறீர்கள் அதுவாகவே இருக்கட்டும் ஆண்டைக்கழுத நீருலர்வதற்குள் மீளவும் உறவுகளுக்காய்-உங்களுக்காய் அழ கண்களுக்கு நீர்தேவை கொஞ்சம் சேமித்து வையுங்கள் மேய்போனின் மேன்மைகளில் இதயத்தை உரஞ்சி மூக்கைச்சீறி உங்கள் குழந்தைகளில் கொட்டிக்கொள்ளுங்கள் சாவீட்டின் கோடியிலேயே கும்மாளமிட்டுக் குடிப்பதற்கு கோடி டொலர்களும் கைவலிக்க உடல்வியர்த்த அடிமைகளுக்கு எச்சில் அப்பமுமாய்ச் சில சில்லறைகளும் உற்பத்தியின் செலவுகளுக்குள் கூடவே மதிப்புக்கூட்டி மக்களின் மண்டையில் குட்டிக்கொள்ளும் விவிலியக் கொள்கை மகத்துவமையா மகத்துவம் போப்பாரின் பொன்னான பணிகளாலே போனதென்னவோ அடிமைகளின் உயிர்தானே! மிகையுற்பத்திச் செலவுக்காய் மீதமுள்ள குருதியையும் உறுஞ்சிவிடும் எம்.பி.ஏ மேய்ப்பர்கள் குனிய வைத்துக் கொட்டுகிறார் 'க...

கைகளை நீட்டி வா!

கைகளை நீட்டி வா ! கைகளை நீட்டியபடி வா அவையெம்மைச் சூடாக்கும் உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு உன் நீண்ட நினைவுகளை கபாலத்துள் போட்டு வை கைகளை நீட்டி வா கைகளோடு கைகள் உரசும்போது கலைந்துவிடும் நம் காழ்புணர்வுகள் பூக்களின் வாசம் இதயங்களுக்குள்ளும் உதிக்கும் உன் செவிகளுடாக நானும் என் செவிகளுடாய் நீயும் உலகின் நித்தியமான ஓங்காரயொலியைக் கேட்பது உறுதி உன் இதழ்களோடு முத்தமிடும் என் உலர்ந்த மடல் உரசிக்கொள்ளும் நொடியே விடியலின் கட்டியக் காரன் உன் இதழசைத்து நான் பேசுவேன் நல்லிணக்கம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தாம் ஒரு பூனையின் பாச்சலுக்குள் முடங்கிவிட்ட இந்தப் பிரபஞ்சம் இதற்குள் நீ - நான் அது - இது ? அம்புக்குறியாய் நீ நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள் உலகத்தின் முடிவு நெருங்கி விடும் சுடலையின் சுவர்கள் பூனையைக் குற்றக் கூண்டில் ஏற்றுகிறது நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி கைகளை நீட்டி வா இதயத்துள் கூடிட்டு கால் மடக்கி கண்ணயர்வோம் ; அனைத்தையும் மறந்து குலைதலும் கூடுவதும கூடுவதும் விலகுவதும் உயிர்ப்பினது உறவுதாம் உன் விழித்தடத்தில் உருளும் நீர் குமிழ் வெட...

சாவி???

சாவி??? கொடிய பொழுதொன்றில் தொலைக்கப்பட்ட சாவியைத் தேடிக் கொண்டு சென்றேன் மனது விழியின்றித் தேடுவதற்கு அக்கறையாய் இருந்தது எனினும் ;எனது கையில் துருவிக்கொண்டிருக்கும் கைத்தடி> சிறு பருக்கைகளாய் கிடந்த சருகுக் குவியல், முகத்திற்கு நேரே எதிர்கொண்ட மழைத்துளி அவற்றின் நிலை மாறுதலை அறிவதில் எனக்கு நாட்டமில்லை. எச்சில் பட்ட குமரியின் முலைபோன்று என் சுருட்டு நசிந்து உதட்டில் அமிழ்ந்தது வனாந்திரமாகிப்போன நெடிய பயணம் வரண்ட பாலைவனத்து ஒட்டகமாகச் சுமைகாவத் தயாரானது கடந்த பிரளயம் விழிகளினூடே... எதெற்கெடுத்தாலும் தும்பி பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களின் மனதோடு ஒரு கொடிய ஆற்றைக் கடந்துகொண்டிருந்தேன் திடீரெனத்தோன்றிய அந்த இராட்சத முதலையை எதிர்கொள்வதில் மனதின் பாலைவனத்துப் படிமத்துக்கு முடியவில்லை அதனருகில் அமர்ந்திருந்த கொக்கின் தலையில் வெண்ணை வைத்த பனியை சூரியக் கதிர் விரட்டியடித்தது தடுக்கமுடியாத காற்றோ பலமுறை என்னோடு மோதித் தன் திமிர்த்தனத்தை உரசிப் பார்க்க திரண்டு வந்த அலைகளில் நான் எங்கோவொரு மூலையில் தூக்கி வீசப்பட்டேன் காருண்யமிக்கவொரு நீரலையால் கரையொதுங்க உயிரின் துடிப்பு மூளையில் அதிர்ந...

பொதுவுடமைவாதம்

பொதுவுடமைவாதம் சில குறிப்புகளும்- -தேசியமும். "இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காண்பதை மறு".- லெனின் (பகுதி:1) வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்து அதை ஈழத்தில் பயன்படுத்தமுடியாது என்ற உண்மையை நாங்கள் மூன்று உதாரணங்களில் பார்த்தோம் 1)வடபுல பொதுவுடமைவாதிகள் கட்சி 2)ஈ.பி.ஆர்.எல்.எப் 3) ஈரோஸ் இந்த மூன்றுமே தமது கொள்கைகளில் இறுக்கமாக இருக்கமுடியாமல் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்கள் வெளிநாட்டிலிருந்த கம்யூனிஷ் கட்சிகளை அப்படியே பிரதிபண்ணியதுதான் எமது தேசத்திற்கேற்ற முறையில் அவற்றை மாற்ற முயலவில்லை .- ஈழநாதன் இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இந்த நேரத்தில் நாம் எடுத்துள்ள இந்த விவாதமானது எமது விடுதலைகுறித்த வியூக்தை...

சில குறிப்புகள்

சில குறிப்புகள் கடந்த சில நாட்களாக எனது வலைப் பதிவிலும் வேறு இரு முகமூடி வலைப்பதிவிலும் ஈழப்போராட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும்நோக்கில் முன் தள்ளப்பட்ட படைப்புகளுக்கு நிலவுகின்ற ஆதிக்க் கருத்தியலால் ஈடுகொடுக்க முடியவில்லை.மார்க்சியத்தைக் கரைச்சுக்குடித்த நண்பர்கள் அது ஈழத்துக்குப் பொருத்தமில்லாத வெளிநாட்டுத் தத்துவம் என்றுவேறு குறிப்பிட்டு தம் அதீத மார்க்சியப் புரிதலை வெளிப்படுத்தியபோது நாம் இந்தப் புனிதமான ஈழப்போரை கொச்சைப்படுத்தாமல் ஒதுங்குவதாகவெண்ணி ஈழம் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் எனது பதிவுகளிலிருந்து அழித்து விட்டுள்ளேன்.மார்க்சிய மூலவர்களே தாக்குப் பிடிக்க முடியாத இந்த முதலாளியக்கருத்தியற் போருக்கு சுண்டங்காயான 'நான்'எந்த மட்டத்துக்கு? முடியவில்லை. சொல் வீச்சுக்கொச்சைப்படுத்தல்-யாழ்பாணியத்துக்கேயுரிய:'நீர்-உம்மை'போன்ற கடுப்பான ஆத்திரமூட்டல்-படுதூஷணங்கள் நெஞ்சைப் பிளந்து இதயத்தையெடுத்து அவித்துண்ணும் உளவியற்றளத்தோடு மோதமுடியாது.என்னால் இவ்வளவுதூரம் என் கருத்தக்களை முன்னெடுக்க முடியாது.நான் எதிர் பார்த்த பண்புவேறானது.எம்மினத்துள் ஊடுரிவியுள்ள கருத்தியல் ஆதிக...

போப் ஆண்டவரும்

போப் ஆண்டவரும் மரணமும்! இன்றைய பொழுதில் மரணம் குறித்த மதிப்பீடு எந்த வகைகளில் புரிந்துகொள்ள அனுமதிக்கப் படுகிறது?.மிகச் சாதரணமாகத் தினமும் செத்து மடியும் மானுடர்கள் ஒருபுறமும,; மிகப் பெரும் இழக்கமுடியாத-ஈடிணையற்ற மனிதர் செத்துவிட்டார் என்ற கருத்தியற்றளம் உருவாக்குவது இன்னொரு புறமுமாக இந்த உலகம் சாவைக் குறித்துக்கொள்கிறது!அப்பாவி ஈராக்கியக் குழந்தைகள் இன்றும் யு.838 யுரேனியக் குண்டுக் கதிர் வீச்சுக்கு இலக்காகும்போது அவற்றைப் பற்றி எந்தக்குறிப்பும் உணர்த்தாத இந்த உலகம் ஒரு அநீதியின் சாட்சியான ஆதிக்க உலகத்தின் அரசியற் தரகனதும்-ஆட்சிக் குலைப்புக்கு வழிவகுப்பானுமாகிய சகுனிக்குச் சங்கூதும்போது முழுமக்களுக்கமான இழப்பாக வர்ணிக்கும் போக்கானது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.மனிதர்கள் சதா போருக்கும்-நோய்களுக்கும்-பசிக்கும் சாகும் நிலையைத் தோற்றுவித்த இந்த அமைப்பைக் கட்டிக்காத்த இந்த அப்பட்டமான அரசியல் இடைத்தரகனுக்காகக் கண்ணீh சிந்தம் மக்கள் குழாத்தை உருவாக்கிட திடீர் வியூகம் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாகக் கண்ணீர் விட்ட ஆளும் வர்க்க ஊடகங்கள்- இன்று அவரது மரணத்தில் ஊனுருகக் கண்ணீர் விடும் கூட்டத்...